Everything is God.Never.Everything is God's.

இறைவன் ஒன்றுதான் அதில் எந்த இறைவன் உண்மையானவன்? உலக ஆதமுடைய மக்களுக்காக டாக்டர் ஜாகிர் நாயக்கின் கேள்வி - பதில்கள் மற்றும் அவரது கட்டுரைகள் , விவாதங்கள் இங்கே பதியப்படும்

Thursday, October 25, 2007

மறுமை வாழ்க்கை ?

மறுமை வாழ்க்கை (அதாவது மனிதன் இறந்த பின்பு ஒரு வாழ்க்கை உண்டு) என்பதை எப்படி நிரூபிப்பீர்கள்?.

பதில்:

1. மறுமை ( இறப்புக்கு பின் உள்ள வாழ்க்கை) நம்பிக்கை கண்மூடித்தனத்தை அடிப்படையாகக் கொண்டது அல்ல.

அறிவியல் அறிவும் - தர்க்கரீதியான உணர்வும் கொண்ட இந்த காலத்தில் இறப்புக்கு பின்பும் ஒரு வாழ்வு உண்டு என்பதை நம்புவது எப்படி?. என ஏராளமான பேர் வியப்படைகிறார்கள். மனிதன் இறந்த பிறகும் ஒரு வாழ்க்கை உண்டு என்று நம்புவது கண்மூடித்தனமானது என்று ஏராளமானபேர் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.

என்னுடைய மறுமை நம்பிக்கை தர்க்க ரீதியை அடிப்படையாகக் கொண்டது.

2. மறுமை நம்பிக்கை தர்க்க ரீதியான நம்பிக்கையாகும்.

அருள்மறை குர்ஆனில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வசனங்கள் அறிவியல் உண்மைகளைப் பற்றி சொல்லுகின்றன. (இது பற்றிய முழு விபரம் அறிய டாக்டர். ஜாகிர் நாயக் எழுதிய "Quran and Modern Science Compatible Or Incompatilble" என்ற புத்தகத்தை படியுங்கள். மேற்படி புத்தகம் ஆங்கிலம் மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் வெளியிடப்பட்டுள்ளது).

குர்ஆன் சொல்லும் அறிவியல் உண்மைகளில் பல சரியானதுதான் என்று கடந்த சில நூற்றாண்டுகளில்தான் கண்டறியப்பட்டுள்ளது. ஆயினும் குர்ஆன் சொல்லும் அறிவியல் உண்மைகள் அனைத்தும் சரியானதுதான் என்று கண்டறியப்படும் அளவிற்கு, அறிவியல் இன்னும் வளர்ச்சியடையவில்லை.

உதாரணத்திற்கு அருள்மறை குர்ஆனில் சொல்லப்பட்ட அறிவியல் உண்மைகளில் 80 சதவீதம் உண்மைகள் 100 சதவீதம் சரியானதுதான் என்று கண்டறியப் பட்டுள்ளதாக வைத்துக்கொண்டால், எஞ்சியிருப்பது 20 சதவீத உண்மைகள்தான்.

அறிவியலில் ஒரு குறிப்பிட்ட உண்மையை பற்றிய விபரம் உடனடியாக கண்டறியப் படுவதில்லை. ஏனெனில் ஒரு உண்மையை உடனடியாக அது உண்மை என்று ஒப்புக் கொள்ளம் அளவிற்கோ அல்லது உடனடியாக அது பொய் என்று ஒதுக்கித் தள்ளும் அளவிற்கோ அறிவியல் இன்னும் வளர்ச்சியடையவில்லை.

இவ்வாறு மனித குலம் கொண்டிருக்கும் ஒரு குறிப்பிட்ட அளவு அறிவைக் கொண்டு - அருள்மறை குர்ஆனில் சொல்லப்பட்ட உண்மைகளில் இதுவரை அறிவியல் ரீதியாக சரி காணப்படாத 20 சதவீத வசனங்களில் - ஒரு சதவீத வசனம் கூட சரியானது அல்ல என்பதை திட்டவட்டமாக வரையறுத்துக் கூற முடியாது.

அருள்மறை குர்ஆனில் சொல்லப்பட்ட உண்மைகளில் என்பது சதவீதம் உண்மைகள் - 100 சதவீதம் சரியானதுதான் என்று அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

இதுவரை அருள்மறை குர்ஆனில் சொல்லப்பட்ட உண்மைகளில் - எஞ்சியுள்ள 20 சதவீத உண்மைகளும் சரியானது அல்ல என்று அறிவியல் ரீதியாக இன்றுவரை நிரூபிக்கப்படவில்லை. எனவே தர்க்க ரீதி விதியின்படி குர்ஆன் சொன்ன அறிவியல் உண்மைகளில் எஞ்சியுள்ள 20 சதவீத உண்மைகளும் - சரியானதாகவே இருக்க வேண்டும்.

மறுமை வாழ்க்கைப் பற்றி அருள்மறை சொல்லும் வசனங்கள் யாவும் அறிவியல் ரீதியில் நிரூபிக்கப்படாத 20 சதவீத உண்மைகளுக்குள் அடங்கியுள்ளது. எனவே தர்க்க ரீதியாக மறுமை வாழ்க்கை பற்றிய எங்களது நம்பிக்கை சரியானதுதான்.

3. மறுமை வாழ்க்கை பற்றிய நம்பிக்கை இல்லாமல், மனித நலம் மற்றும் மனித அமைதி போன்ற கருத்துக்களை கொண்டிருப்பது தேவையில்லாத ஒன்று.

சமுதாயத்தில் திருடுவது நல்லதா? கெட்டதா? என்று கேட்டால் சாதாரண நிலையில் உள்ள ஒரு மனிதன் சமுதாயத்தில் திருடவது கெட்டது என்றே பதிலளிப்பான். சமுதாயத்தில் செல்வாக்கு மிக்க, பலம் மிகுந்த ஒரு சமுதாய திருடனுக்கு, திருடுவது தவறானது என்று ஒரு சாதாரண நிலையில் உள்ள மனிதன் எவ்வாறு உணர்த்த முடியும்?.

உதாரணத்திற்கு நான் சமுதாயத்தில் செல்வாக்கு மிகுந்த - பலசாலியான ஒரு திருடன் என்று வைத்துக் கொள்ளுங்கள். அதே சமயம் நான் மிகுந்த அறிவுடைய ஒரு தர்க்கவாதியும் கூட. திருடுவது சரியானதுதான் என்று நான் சொல்கிறேன். ஏனெனில் திருடுவதால் சமுதாயத்தில் ஒரு சிறந்த ஆடம்பரமான வாழ்க்கையை அனுபவிக்கலாம். எனவே திருடுவது என்னைப் பொருத்தவரை, எனக்கு நல்லது என்று நான் சொல்கிறேன்.

திருடுவது சரியானது அல்ல என்று யாராவது என்னிடம் தர்க்க ரீதியாக வாதிட முயலுவார்கள் எனில் அவர்களின் வாதத்தை என்னால் உடனடியாக முறியடிக்க முடியும். திருடுவது சரியானது அல்ல என்று என்னிடம் வாதிட முற்பட்டவர்கள் வைத்த வாதங்கள் பின்வருமாறு.

அ. திருடுபவன் கஷ்டங்களை அனுபவிப்பான்.:

யார் திருடுகிறானோ, அவன் கஷ்டங்களை அனுபவிப்பான் என்று சிலர் வாதிடுவார்கள். திருட்டுக் கொடுத்தவர் வேண்டுமெனில் கஷ்டங்களை அனுபவிப்பார்களேத் தவிர, திருடியவர் கண்டிப்பாக கஷ்டங்களை அனுபவிப்பதில்லை. திருடியவன் நல்லதையே அனுபவிப்பான். ஆயிரம் டாலர்களை திருடிய ஒருவன், ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் ஆடம்பர உணவு உண்ணலாம்.

ஆ. நீ திருடினால், உன்னிடம் வேறு எவராவது திருடுவார்கள்.

நீ யாரிடமாவது திருடினால், உன்னிடமிருந்து வேறு எவராவது திருடுவார்கள் என்று சிலர் வாதிடுவார்கள். என்னிடமிருந்து எவரும் திருட முடியாத அளவுக்கு நான் ஒரு பலம் படைத்த திருடன். தவிர என்னைப் பாதுகாக்கவென்று பல அடியாட்களை நான் வைத்திருக்கிறேன்.

நான் வேறு எவரிடமிருந்தும் திருட முடியுமேத் தவிர, என்னிடமிருந்து எவரும் திருட முடியாத அளவுக்கு நான் ஒரு பலம் பொருந்திய திருடன். திருடுவது ஒரு சாதாரண மனிதனுக்கு வேண்டுமெனில் கஷ்டமான வேலையாக இருக்கலாம். ஆனால் என் போன்ற படைபலம், பணபலம் உள்ள ஒருவனுக்கு திருடுவது எளிதானது.

இ. திருடினால் காவல் துறை கைது செய்யும்.

திருடினால் காவல் துறை கைது செய்யும் என்று சிலர் வாதிடலாம். நான் திருடினாலும் காவல் துறை என்னை கைது செய்ய முடியாத அளவுக்கு நான் காவல் துறையினரை விலைக்கு வாங்கியிருக்கிறேன்.

மந்திரிகளை கூட நான் விலைக்கு வாங்கக் கூடிய அளவிற்கு எனக்கு பணபலம் உண்டு. ஒரு சாதாரண மனிதன் திருடினால் அவனை காவல் துறை கைது செய்யும் என்பதை நான் ஏற்றுக் கொள்கிறேன்.

ஆனால் நானோ காவல் துறை கூட கைது செய்ய முடியாத அளவிற்கு படைபலமும், பணபலமும் உள்ளவன். எனவே நான் திருடினால் என்னை காவல் துறை கைது செய்யாத அளவிற்கு நான் ஒரு பலம் பொருந்திய குற்றவாளி.

ஈ. திருடுவதன் மூலம் எளிதாக பணம் சம்பாதிக்கலாம்.

திருடுவதன் மூலம் எளிதாக பணம் கிடைக்கிறது. பணம் கிடைக்க அதிகமாக கஷ்டப்பட வேண்டிய அவசியம் இல்லை என்று சிலர் வாதிடலாம். திருடுவதால் எளிதாக பணம் சம்பாதிக்க முடியும் என்பதை நான் முழுமையாக ஏற்றுக் கொள்கிறேன்.

பணம் எளிதாக கிடைக்கிறது என்கிற ஒரே காரணத்தால்தான் நான் திருடுகிறேன். ஓரு மனிதன் எளிதான முறையிலும் பணம் சம்பாதிக்கலாம். கடினமான முறையிலும் பணம் சம்பாதிக்கலாம் என்று வைத்துக் கொள்ளுங்கள். ஒரு புத்திசாலியான மனிதன் எளிதான முறையில் பணம் சம்பாதிக்கும் வழியைத்தான் தேர்ந்தெடுப்பான்.

உ. திருடுவது மனிதத் தன்மைக்கு எதிரானது.

திருடுவது மனித குலத்திற்கு எதிரானது. ஓரு மனிதன் மற்ற மனிதர்களின் நலத்தைப் பற்றியும் சிந்தித்து செயல்பட வேண்டும் என சிலர் வாதிடலாம். இவ்வாறு வாதிடுபவர்களைப் பார்த்து நான் சில கேள்விகளை கேட்கிறேன். 'மனிதத் தன்மை" என்கிற சட்டத்தை எழுதி வைத்தது யார்?. நான் எதற்காக அந்த சட்டத்தைப் பின்பற்ற வேண்டும்?.

மனிதத் தன்மை என்கிற சட்டம் - உணர்வு பூர்வமான மனிதர்களுக்கு வேண்டுமெனில் சரியானதாகத் தெரியலாம். ஆனால் நான் ஒரு தர்க்க ரீதியான, சுயநலம் கொண்ட மனிதன். பிறருடைய நலம் பேணுவதால் எனக்கு எந்த நன்மையும் இல்லை. எனவே மனிதத் தன்மை என்பது எல்லாம் எனக்கு ஒரு பொருட்டேயல்ல.

ஊ. திருடுவது சுயநலம்.

திருடுவது சுயநலம் என்று சிலர் வாதிடலாம். திருடுவது சயநலம் என்பது நூறு சதவீதம் உண்மையானதுதான். திருடுவதால் நான் எனது வாழ்க்கையை கஷ்டமின்றி சுகமாக அனுபவிக்கலாம் என்கிற சூழ்நிலையில், நான் ஏன் ஒரு சுயநலவாதியாக இருக்கக் கூடாது?.

திருடுவது தவறு என்கிற தர்க்கரீதியான வாதம் ஒன்றைக் கூட எவராலும் எடுத்து வைக்க முடியாது.

இவ்வாறு திருடுவது தவறு என்கிற தர்க்கரீதியான வாதம் ஒன்றைக் கூட எவராலும் எடுத்து வைக்க முடியாது. மேற்காணும் தர்க்க ரீதியான வாதங்கள் யாவும் சாதாரண மனிதர்களை வேண்டுமானால் திருப்தி கொள்ள வைக்கலாம்.

ஆனால் மேற்படி தர்க்க ரீதியான வாதங்கள் சமுதாயத்தில் பலம் வாய்ந்த குற்றவாளிகளை திருப்தி படுத்த முடியாது. மேற்கூறப்பட்ட வாதங்கள் எதுவும் சரியான காரண காரியங்களுடன் நிரூபிக்க பட முடியாத வாதங்கள் ஆகும். எனவேதான் தற்போது உலகம் முழுவதும் எண்ணற்ற குற்றவாளிகள் இருக்கின்றனர்.

இவ்வாறுதான் சமுதாயத்தில் மலிந்து போய்க் கிடக்கும் இன்னபிற குற்றங்களான வல்லுறவு கொள்ளல், ஏமாற்றுதல் போன்றவையும் சரியானது அல்ல என்று சமுதாயத்தில் பலம் வாய்ந்த குற்றவாளிகளுக்கு முன்பு தர்க்க ரீதியாக நிரூபிக்கப்படாத குற்றங்கள் ஆகும்.

2. ஒரு முஸ்லிம் சமுதாயத்தில் பலம் வாய்ந்த, செல்வாக்கு மிகுந்த குற்றவாளியை, அவன் செய்வது குற்றம் என்று எளிதாக நம்ப வைக்க முடியும்.

இ;ப்போது நாம் இடம் மாறிக் கொள்வோம். நீங்கள் உலகத்தில் பலம் வாய்ந்த, செல்வாக்கு மிக்க ஒரு குற்றவாளி என்று வைத்துக் கொள்வோம். உங்களது கட்டளைக்கு அடிபணிய ஆட்களும், அமைச்சர்களும் இருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள்.

தவிர உங்களை பாதுகாப்பதற்கு தனியாக ஒரு கூலிப்படையும் இருக்கிறது என்றும் வைத்துக் கொள்ளுங்கள். திருடுதல், வல்லுறவு கொள்ளல், ஏமாற்றுதல் போன்ற எல்லா தீயச் செயல்களும் தவறு என்று - நான் ஒரு முஸ்லிம் என்கிற ரீதியில் - என்னால் நிரூபிக்க முடியும்.

திருடுவது குற்றம் என்பது பற்றி - ஒரு குற்றவாளியின் முன்பு - நாம் மேலே விவரித்துள்ள விவாதங்களை எடுத்து வைக்கும்போது - அந்த குற்றவாளி திருடுவது குற்றம் அல்ல என்று மேலே குறிப்பிட்டுள்ளது போல் வாதாடினாலும் திருடுதல், வல்லுறவு கொள்ளல், ஏமாற்றுதல் போன்ற எல்லா தீயச் செயல்களும் தவறு என்று - நான் ஒரு முஸ்லிம் என்கிற ரீதியில் - என்னால் நிரூபிக்க முடியும்.

சமுதாயத்தில் சக்தி மிக்க மற்றும் செல்வாக்கு மிக்க ஒரு குற்றவாளி - அவன் செய்யும் குற்றங்கள் எதுவுமே குற்றமல்ல என்று தர்க்க ரீதியாக செய்யும் விவாதங்கள் யாவும் உண்மை நான் ஏற்றுக் கொள்ளும் அதே வேளையில் திருடுதல், வல்லுறவு கொள்ளல், ஏமாற்றுதல் போன்ற எல்லா தீயச் செயல்களும் தவறு என்று - நான் ஒரு முஸ்லிம் என்கிற ரீதியில் - என்னால் நிரூபிக்க முடியும்.

3. எல்லா மனிதர்களும் நீதி நிலை நிறுத்தப்படுவதை விரும்புகிறவர்களே!

எல்லா மனிதர்களும் நீதி நிலை நிலை நிறுத்தப்படுவதை விரும்புவார்கள். பிறருக்கு நீதி கிடைப்பதை வெறுப்பவர்களாக இருந்தாலும், தனக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதை விரும்புபவர்களாத்தான் இருப்பார்கள்.

சிலபேர் பதவி மற்றும் செல்வாக்கு என்னும் அதிகார போதை தலைக்கேறியவர்களாக - பிறரை துன்புறுத்தவும் - அநியாயம் இளைக்கவும் துணிந்து விடுவார்கள். பதவியும், செல்வாக்கும் கொண்டவர்கள் - அதன் பலத்தைக் கொண்டு பிறருக்கு அநியாயம் செய்ய முனைவதோடு - மேற்படி பதவியும் - செல்வாக்கும் - தங்களுக்கு பிறர் அநியாயம் செய்வதை தடுக்கும் என்றும் கருதுகிறார்கள்.

பதவி மற்றும் செல்வாக்கு என்னும் அதிகார போதையை கையில் வைத்திருப்பவர்கள் கூட - தங்களுக்கு ஒரு அநியாயம் இளைக்கப்படும் போது - நீதி கிடைக்க வேண்டும் என்றுதான் விரும்புவார்கள்.

4. இறைவன் மிக்க நீதியும், வல்லமையும் கொண்டவன்.

நான் ஒரு முஸ்லிம் என்கிற ரீதியில் குற்றவாளிக்கு முதலில் - இறைவன் இருக்கின்றான் என்பதை தெளிவாக்குவேன். (இறைவன் இருக்கின்றான் என்பதை எப்படி தெளிவாக்குவது என்ற கேள்விக்கான விடையை பாருங்கள்) இறைவன் எல்லோரையும்விட வல்லமை மிக்கவன்.

இறைவன் நீதியும் நேர்மையும் உடையவன் என்பதையும் அந்த குற்றவாளிக்கு தெளிவாக்குவேன். அருள்மறை குர்ஆனின் நான்காவது அத்தியாயம் ஸ{ரத்துந் நிஷாவின் 40வது வசனம் கூறும் ' நிச்சயமாக அல்லாஹ் (எவருக்கும்) ஓர் அணுவளவு கூட அநியாயம் செய்ய மாட்டான்" என்கிற வசனத்தை எடுத்துரைப்பேன்.

5. இறைவன், என்னை தண்டிக்கவி;ல்லை. ஏன்?

அறிவியல் ரீதியாகவும், தர்க்க ரீதியாகவும், அருள்மறை குர்ஆனில் உள்ள அறிவியல் உண்மைகளை உணர்ந்து, இறைவன் இருக்கின்றான் என்பதை ஒப்புக் கொண்ட குற்றவாளி, இத்தனை வல்லமையும், நீதியையும் கொண்ட இறைவன் தன்னை ஏன் தண்டிக்கவில்லை என்று வாதம் செய்யலாம்.

6. யாரெல்லாம் அநியாயம் செய்கிறார்களோ, அவர்கள் கண்டிப்பாக தண்டிக்கப்
படவேண்டும்
.

பணபலம், மற்றும் சமுதாய செல்வாக்கு இவைகளுக்கெல்லாம் அப்பாற்பட்டு, யாரெல்லாம் அநியாயம் செய்யப்பட்டார்களோ அவர்கள் - தங்களுக்கு குற்றம் இழைத்தவர்கள் கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டும் என்பதை விரும்புவார்கள். வல்லுறவு கொண்டவர்களுக்கும், திருடியவர்களுக்கும் சரியான ஒரு பாடம் கற்பிக்க வேண்டும் என்று எல்லா சாதாரண மனிதர்களும் எண்ணுவது இயல்பு.

இவ்வுலகில் ஏராளமான குற்றவாளிகள் அவர்கள் செய்த குற்றங்களுக்காக தண்டிக்கப்பட்டாலும், பலர் அவர்கள் செய்த குற்றங்களுக்காக தண்டிக்கப்படாமல் விடுவிக்கப்படுவதை பார்க்கிறோம்.

அவ்வாறு விடுவிக்கப்பட்டவர்கள் மகிழ்ச்சியாக, ஆடம்பரமாக தொல்லையற்ற நிம்மதியோடு இவ்வுலகில் வாழ்வதை நாம் காண்கிறோம். பணபலமும், செல்வாக்கும் நிறைந்த ஒருவருக்கு, அவரைவிட அதிக பணபலமும், அதிக செல்வாக்கும் பெற்ற ஒருவரால் அநியாயம் செய்யப்படும்போது, தனக்கு அநியாயம் செய்தவர் கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டும் என்பதை விரும்புவார்.

7. இவ்வுலகில் நாம் வாழுகின்ற வாழ்க்கை, மறு உலக வாழ்க்கைக்கான ஒரு தேர்வு.

இவ்வுலகில் நாம் வாழுகின்ற வாழ்க்கை, மறு உலக வாழ்க்கைக்கான ஒரு தேர்வுதான் என்பதை அருள்மறை குர்ஆனின் அறுபத்து ஏழாவது அத்தியாயம் ஸ{ரத்துல் முல்க்கின் 02வது வசனம் கீழ்க்கண்டவாறு சுட்டிக் காட்டுகின்றது.

'உங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர் என்பதைச் சோதிப்பதற்காக அவன், மரணத்தையும், வாழ்வையும் படைத்தான். மேலும் அவன் (யாவரையும்) மிகைத்தவன்: மிக்க மன்னிப்பவன்."

8. இறுதித் தீர்ப்பு மறுமை நாளில் இருக்கிறது.

இறுதித் தீர்ப்பு மறுமை நாளில் இருக்கிறது என்பதை பற்றி அருள்மறை குர்ஆனின் மூன்றாவது அத்தியாயம் - ஸ{ரத்துல் ஆல இம்ரானின் 185வது வசனம் கீழக்கண்டவாறு கூறுகின்றது.

'ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தை சுகித்தே ஆக வேண்டும்: அன்றியும் - இறுதித் தீர்ப்பு நாளில் தான், உங்க(ள் செய்கைக)ளுக்குரிய பிரதி பலன்கள் முழுமையாக கொடுக்கப்படும்: எனவே எவர் (நரக) நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுச், சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறாரோ, அவர் நிச்சயமாக வெற்றியடைந்துவிட்டார். இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை அளிக்கவல்ல (அற்ப இன்பப்) பொருளேயன்றி வேறில்லை." (அல்-குர்ஆன் 3 : 185).

இறுதித் தீர்ப்பு மறுமை நாளில்தான் வழங்கப்படும் என்பதை மேலே சொல்லப்பட்ட அருள்மறை வசனத்தின் மூலம் நாம் அறியலாம். ஒரு மனிதன் இறந்த பிறகு - அவன் மீண்டும் உயிர்பிக்கப்படுவான்.

ஓரு மனிதன் தான் செய்த தவறுக்காக இவ்வுலகில் கொஞ்சமாக தண்டிக்கப்படலாம். அல்லது தண்டிக்கப்படாமலும் இருக்கலாம். ஆனால் அவன் செய்த தவறுக்கு முழு தண்டணையும் மறுமைநாளில்தான். வல்லறவு குற்றத்தில் ஈடுபட்டவனையோ அல்லது திருடனையோ இறைவன் இவ்வுகத்தில் தண்டிக்காமல் விட்டு விடலாம்.

ஆனால் அவர்கள் செய்த குற்றத்திற்காக அவர்கள் மறுமை நாளில் பதில் சொல்லியேத் தீர வேண்டும். மறுமைநாளில் அதாவது மரணித்தபின் உள்ள வாழ்க்கையில் அவர்கள் இறைவனால் தண்டிக்கப்படுவார்கள் என்பது நிச்சயம்.

9. நாஜி கொடுங்கோலன் ஹிட்லருக்கு மனிதனால் உருவாக்கப்பட்ட சட்டம் என்ன தண்டனை வழங்கியிருக்க முடியும்?.

அறுபது லட்சம் யூதர்களை எரித்துக் கொன்ற சம்பவம் நாஜி கொடுங்கோலன் ஹிட்லர் ஆட்சி காலத்தில் நடந்தது என்பதை நாம் அனைவரும் அறிவோம். காவல்துறையினர் ஹிட்லரை கைது பண்ணி சட்டத்தின் முன்பு நிறுத்தியிருந்தால் - மனிதனால் இயற்றப்பட்ட சட்டம் அறுபது லட்சம் யூதர்களை எரித்துக் கொன்ற ஹிட்லருக்கு என்ன தண்டனை வழங்கியிருக்க முடியும்?.

சட்டத்தின் மிகக் கூடுதல் தண்டனையான மரண தண்டனையை வழங்கியிருக்க கூடும். ஆனால் மேற்படி மரண தண்டனை ஒரேயொரு யூதரை கொன்றதற்கு ஈடான தண்டனைதான். எஞ்சியுள்ள ஐம்பத்து ஒன்பது லட்சத்து தொன்னூற்று ஒன்பதாயிரத்து தொள்ளாயிரத்து தொன்னூற்று ஒன்பது யூதர்களை எரித்துக் கொன்றதற்கான தண்டனை என்ன?.

10. அல்லாஹ் - ஹிட்லரை - அறுபது லட்சம் தடவை நரக நெருப்பினால் எரிக்கக்கூடிய வல்லமை பெற்றவன்:

அருள்மறை குர்ஆனில் அல்லாஹ் கூறுகின்றான்:

'யார் நம் வேத வசனங்களை நிராகரிக்கிறார்களோ, அவர்களை நாம் நிச்சயமாக நரகத்தில் புகுத்தி விடுவோம். அவர்கள் தோல்கள் கருகிவிடும் பொதெல்லாம், அவையல்லா (வேறு) தோல்களை, அவர்கள் வேதனையை (பூரணமாக) அனுபவிப்பதற்கென, அவர்களுக்கு நாம் மாற்றிக் கொண்டேயிருப்போம். நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவனாகவும், ஞானமுள்ளவனாகவும் இருக்கிறான்."

அல்லாஹ் - அவன் நாடினால் - ஹிட்லரை - அறுபது லட்சம் தடவை நரக நெருப்பினால் எரிக்கக்கூடிய வல்லமை கொண்டவன்.


1. மறுமை நம்பிக்கை இல்லாமல் மனித நலன் மற்றும் நல்லது, கெட்டது என்ற சிந்தனையே இல்லை.

மறுமை வாழ்க்கை அதாவது மனிதனின் இறப்புக்குப் பின்பும் ஒரு வாழ்க்கை உண்டு என்ற நம்பிக்கை இல்லையெனில், மனித நலன் மற்றும் நல்லது, கெட்டது என்ற சிந்தனையே மனித வர்க்கத்திடம் இல்லாமல் போய்விடும்.

அநியாயம் செய்பவர்கள் - குறிப்பாக பணபலமும், படை பலமும், சமூக செல்வாக்கும் பெற்றவர்கள் அநியாயம் செய்யும் போது - மறுமை வாழ்க்கை என்ற நம்பிக்கை இல்லையெனில், மனித நலன் மற்றும் நல்லது, கெட்டது என்ற சிந்தனையே மனித வர்க்கத்திடம் இல்லாமல் போய்விடக் கூடும். எனவே ஒவ்வொரு மனிதருக்கும் - இறப்புக்கு பிறகும் வாழ்க்கை உண்டு என்கிற மறுமை நம்பிக்கை அவசியம்.

புலால் உணவு உண்ணுவது சரியா?

மனிதன் என்ன உண்கிறானோ - அதனுடைய தாக்கம் அவனது நடவடிக்கைகளில் தென்படும் என்பது அறிவியல் கூற்று. அப்படி இருக்கும்போது - இஸ்லாம் புலால் உணவு உண்ண அனுமதியளிப்பது எப்படி?. ஏனெனில் - புலால் உணவு உண்ணுவது மனிதனை வன்முறையாளனாகவும் - மூர்க்கமானவனாகவும் மாற்றுமே எப்படி?

பதில்:

1. இஸ்லாமிய மார்க்கம் - தாவர உண்ணிகளான ஆடு மாடு ஒட்டகம் போன்ற கால்நைடகளை மாத்திரம் மனிதர்கள் உணவாக உட்கொள்ள அனுமதியளித்துள்ளது.

மனிதன் என்ன உண்கிறானோ - அதனுடைய தாக்கம் அவனது நடவடிக்கைகளில் தென்படும் என்பதை நான் ஏற்றுக் கொள்கிறேன். எனவேதான் இஸ்லாமிய மார்க்கம் - மாமிச உண்ணிகளான சிங்கம் - புலி - சிறுத்தை போன்ற விலங்கினங்களை மனிதர்கள் உணவாக உட்கொள்வதை தடை செய்துள்ளது.

ஏனெனில் மேற்படி விலங்கினங்கள் மூர்க்க குணம் கொண்டவை. மேற்படி விலங்கினங்களின் இறைச்சியை உண்பவர்கள் மூர்க்கக் குணம் கொண்டவர்களாக மாறலாம். அதனால்தான் இஸ்லாம் தாவர உண்ணிகளான ஆடு - மாடு - ஒட்டகம் போன்ற பிரானிகளின் இறைச்சியை மனிதர்கள் உணவாக உட்கொள்ள அனுமதித்துள்ளது.

மேற்படி பிராணிகள் - அமைதியானதும் - பணிவானதும் ஆகும். இஸ்லாமியர்களான நாங்கள் - அமைதியான பிராணிகளான - ஆடு - மாடு - ஒட்டகம் போன்றவைகளை உணவாக உட்கொள்கிறோம். எனவேதான் நாங்கள் அமைதியை விரும்புகிறவர்களாக - இருக்கின்றோம்.

2. அருள் மறை குர்ஆனும் - நபிகளாரின் பொன்மொழியும் - கெட்ட உணவு வகைகளை உண்பதை தடை செய்துள்ளது.

"(நபியாகிய) அவர் நன்மையான காரியங்களைச் செய்யுமாறு ஏவுவார். பாவமான காரியங்களிலிருந்து விலக்குவார். தூய்மையான ஆகாரங்களையே அவர்களுக்கு ஆகுமாக்குவார். கெட்டவற்றை அவர்களுக்குத் தடுத்துவிடுவார்.." (அல்-குர்ஆன் அத்தியாயம் 07 - ஸ{ரத்துல் அஃராப் - 157வது வசனம்)

"மேலும் (நம்) தூதர் உங்களுக்கு எதைக் கொடுக்கின்றாரோ அதை எடுத்துக்கொள்ளுங்கள். இன்னும் எதைவிட்டும் உங்களை விலக்குகின்றாரோ அதை விட்டும் விலகிக் கொள்ளுங்கள்." (அல்-குர்ஆன் அத்தியாயம் 59 - ஸ{ரத்துல் ஹஷ்ர் - 7வது வசனம்)

சில பிராணிகளின் இறைச்சியை மனிதர்கள் உணவாக உட்கொள்ள அனுமதியளித்திருக்கும் அல்லாஹ் - சில பிராணிகளின் இறைச்சியை மனிதர்கள் உணவாக உட்கொள்ள அல்லாஹ் தடை செய்திருக்கிறான் என்பதை ஒரு இஸ்லாமியன் தெரிந்து கொள்ள - நபிகளாரின் பொன்மொழி ஒன்றே போதுமானதாகும்.

3. மாமிசம் உண்ணும் பிராணிகளை மனிதர்கள் உணவாக உட்கொள்ளத் தடை பற்றி நபி (ஸல்) அவர்கள் அறிவித்த செய்தி :

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அறிவித்ததாக இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கும் மேற்படி செய்தி ஸஹீஹ{ல் புஹாரி - ஸஹீஹ{ல் முஸ்லிம் (ஹதீஸ் எண் 4752) ஸ{னன் இப்னு மாஜா (ஹதீஸ் எண் - 3232 முதல் 3234 வரை) போன்ற ஹதீஸ் (செய்தி) நூல்களில் இடம்பெற்றுள்ளன.

அ. மாமிசம் உண்ணக்கூடிய கூரிய பற்களையும் நகங்களையும் உடைய காட்டு விலங்குகளான - சிங்கம் புலி நாய் ஓநாய் போன்றவைகள்.

ஆ. கொறித்துத் திண்ணக்கூடிய பற்களை உடைய எலி பெருச்சாலி அணில் போன்றவைகள்

இ. ஊர்ந்து திரியக் கூடிய பாம்பு முதலை போன்ற பிராணிகள்

ஈ. கூரிய அலகுகளையும் - கால் நகங்களையும் உடைய கழுகு பருந்து காகம் ஆந்தை போன்ற பறவைகள் ஆகியவை மனிதர்கள் உணவாக உட்கொள்ள தடை செய்யப்பட்ட பிராணிகள் மற்றும் பறவைகள் ஆகும்.

Wednesday, October 24, 2007

கால்நடைகளை கொல்வது இரக்கமற்ற செயலா?

கால்நடைகளை கொல்வது இரக்கமற்ற செயல். ஆனால் இஸ்லாமியர்கள் அந்த கால்நடைகளை இரக்கமற்ற முறையில் கொன்று அதன் இறைச்சியை உண்கிறார்களே. ஏன்?

பதில்:

சைவ உணவு உண்பது - இன்று உலகம் முழுவதும் பரவிவரும் இயக்கமாக இருக்கிறது. இந்த இயக்கங்களில் பல கால்நடைகளுக்கும் உரிமை உண்டு என்ற கொள்கையை கொண்டவை. ஏராளமானபேர் - மாமிசம் மற்றும் மற்ற புலால் உணவு உண்பது என்பது கால்நடைகளின் உரிமைகளை பரிப்பதாகும் என்கிற கருத்தினை கொண்டவர்களாக இருக்கின்றனர்.

உலகில் படைக்கப்பட்ட அனைத்து உயிரினங்கள் மீதும் இரக்கம் காட்ட வேண்டும் என இஸ்லாம் கட்டளையிடுகிறது. அதே சமயம் - அல்லாஹ் இந்த ப+மியைப் படைத்து - அதில் மனித பயன்பாட்டுக்கான கால்நடைகளையும் - தாவரங்களையும் படைத்திருக்கிறான் - என்பதையும் சுட்டிக் காட்டுகிறது. அல்லாஹ் படைத்தவைகளை நம்மிடம் ஒப்படைக்கப்பட்ட பொருளாகவும் அருட்கொடையாகவும் பயன்படுத்திக்கொள்வது மனிதனிடம்தான் இருக்கிறது.

இந்த விவாதம் பற்றிய மற்ற விபரங்களை ஆராய்வோம்.

1. சைவ உணவு மட்டும் உண்ணக் கூடியவர் கூட இஸ்லாமியராக இருக்க முடியும்.

சைவ உணவை தொடர்ந்து உண்ணக்கூடிய இஸ்லாமியன் ஒரு நல்ல இஸ்லாமியனாக இருக்க முடியும். அவர் கண்டிப்பாக அசைவ உணவுதான் உட்கொள்ள வேண்டும் என்ற நிர்ப்பந்தம் இஸ்லாத்தில் இல்லை.

2. இஸ்லாமியர்கள் அசைவ உணவு உண்பதற்கு அருள்மறை குர்ஆன் அனுமதி அளிக்கிறது.

இஸ்லாமியர்கள் அசைவ உணவு உண்பதற்கு அருள்மறை குர்ஆன் அனுமதி அளிக்கிறது. அருள்மறை குர்ஆனின் ஐந்தாவது அத்தியாயமான ஸ{ரத்துல் மாயிதாவின் ஒன்றாவது வசனம்இ"முஃமீன்களே! (நீங்கள் செய்து கொண்ட) உடன்படிக்கைகளை (முழுமையாக நிறைவேற்றுங்கள். உங்கள் மீது ஓதிக்காட்டி இருப்பவைத் தவிர மற்றைய நாற்கால் பிராணிகள் உங்களுக்கு (உணவிற்காக) ஆகுமாக்கப் பட்டுள்ளன." என்பதைச் சுட்டிக் காட்டுகின்றது.

மேலும் அருள்மறை குர்ஆன் 16வது அத்தியாயம் ஸ{த்துன் நஹ்லின் ஐந்தாவது வசனம் "கால்நடைகளையும் அவனே படைத்தான். அவற்றில் உங்களுக்குக் கத கதப்பு(ள்ள ஆடையணிகளு)ம் இன்னும் (பல) பலன்களும் இருக்கின்றன. அவற்றிலிருந்து நீங்கள் புசிக்கவும் செய்கின்றீர்கள்." எனவும்

அருள்மறை குர்ஆன் 23வது அத்தியாயம் ஸ{ரத்துன் முஃமினூன் 21ஆம் வசனம் "நிச்சயமாக உங்களுக்கு பிராணிகளில் ஒரு படிப்பினை இருக்கிறது. அவற்றின் வயிறுகளிலிருந்து (சுரக்கும் பாலை) நாம் உங்களுக்குப் புகட்டுகிறோம். இன்னும் அவற்றில் உங்களுக்கு அநேக பயன்கள் இருக்கின்றன. அவற்றி(ன் மாமிசத்தி)லிருந்து நீங்கள் புசிக்கிறீர்கள்." எனவும் கால்நடைகளின் பயன் பற்றி மனிதர்களுக்குச் சுட்டிக் காட்டுகின்றது.

3. மாமிசம் புரதச்சத்தும் - புரோட்டீனும் அடங்கிய ஓர் முழு உணவாகும்.

உடலுக்குத் தேவையான முழு புரொட்டீனையும் பெறுவதற்கு மாமிசம் ஓர் சிறந்த உணவாகும். மாமிசம் உடலில் உற்பத்தி செய்யப்படாத ஆனால் உடலுக்குத் தேவையான எட்டுவிதமான அமிலோ அமிலங்களும் அடங்கிய உணவாகும். மாமிசத்தில் இரும்புச் சத்து மற்றும் வைட்டமின் பி1 மற்றும் நியாசின் போன்ற சத்துக்களும் அடங்கியுள்ளன.


4. மாமிச உணவு உண்ண கூறிய பற்களும் - தாவர உணவு உண்ண தட்டையான பற்களும் கொண்டவன் மனிதன்.


நீங்கள் தாவர உண்ணிகளான ஆடு - மாடு - போன்ற கால்நடைகளை ஆராய்ந்து பார்த்தால் அவைகள் தாவர உணவு உண்ணுவதற்கு ஏற்றவாறு தட்டையான பற்களை மாத்திரம் கொண்டுள்ளதை அறியலாம். அதுபோல மாமிச உண்ணிகளான சிங்கம் - புலி - சிறுத்தை போன்றைவைகளை ஆராய்ந்து பார்த்தால் அவைகள் மாமிச உணவு உண்ணுவதற்கு ஏற்றவாறு கூறிய பற்களை மாத்திரம் கொண்டுள்ளதை அறியலாம்.

அது போல நீங்கள் மனிதனுடைய பற்களின் அமைப்பை ஆராய்ந்து பார்த்தால் - மனிதர்கள் மாமிச உணவை உண்ணுவதற்கு ஏற்றவாறு கூரிய பற்களையும் - தாவர வகை உணவுகளை - உண்ணுவதற்கு எற்றவாறு தட்டையான பற்களையும் கொண்டவராக காணலாம்.

மனிதர்கள் தாவரவகை உணவுகளை மாத்திரம்தான் உண்ண வேண்டும் என்று இறைவன் எண்ணியிருந்தால் - மனிதர்களை - இறைவன் மாமிச உணவை உண்ணுவதற்கு ஏற்றவாறு கூரிய பற்களை கொண்டவர்களாக ஏன் படைத்திருக்க வேண்டும்?. மாமிச உணவையும் - தாவர வகை உணவையும் உண்ண வேண்டும் என்ற நோக்கத்தில்தான் இறைவன் மனிதர்களுக்கு கூரிய பற்களையும் தட்டையான பற்களையும் படைத்திருக்கிறான்.

5. மனித செரிமான அமைப்பு மாமிச வகை உணவுகளையும் தாவர வகை உணவுகளை செரிமானம் செய்வதற்கு ஏற்றதாக உள்ளது.

தாவர உண்ணிகளின் செரிமான அமைப்பு - தாவர வகை உணவுகளை மாத்திரம் செரிமானம் செய்வதற்கு ஏற்றவாறு அமைந்துள்ளது. அதுபோல மாமிச உண்ணிகளின் செரிமான அமைப்பு மாமிச வகை உணவுகளை மாத்திரம் செரிமானம் செய்வதற்கு ஏற்றவாறு அமைந்துள்ளது.

ஆனால் மனித செரிமான அமைப்பு மாத்திரம் மாமிச வகை உணவுகளையும் தாவர வகை உணவுகளையும் செரிமானம் செய்வதற்கு ஏற்றதாக அமைந்துள்ளது. மனிதர்கள் தாவரவகை உணவுகளை மாத்திரம்தான் உண்ண வேண்டும் என்று இறைவன் எண்ணியிருந்தால் - மனிதர்களின் செரிமான அமைப்பை - இறைவன் மாமிச வகை உணவுகளையும் தாவர வகை உணவுகளையும் செரிமானம் செய்வதற்கு ஏற்றவாறு ஏன் படைத்திருக்க வேண்டும்?.

5. இந்து வேதங்கள் மாமிச உணவு உண்பதற்கு அனுமதி அளித்திருக்கிறது.

இந்துக்களில் ஏரானமானபேர் முற்றிலும் மாமிச உணவு உண்ணாதவர்களாக இருக்கிறார்கள். மாமிச உணவு உண்பது அவர்களின் மதக் கோட்பாடுகளுக்கு எதிரானது என்று கருதுகிறார்கள். ஆனால் உண்மை என்னவெனில் - இந்துக்கள் மாமிச உணவு உண்பதற்கு அவர்களின் வேதங்கள் அனுமதியளித்துள்ளன. இந்து சாமியார்கள் மாமிச உணவு உட்கொண்டதாக இந்துக்களின் வேதங்கள் கூறுகின்றன.

இந்துக்களின் சட்ட புத்தகமான மனு சாஸ்திரத்தின் ஐந்தாவது அத்தியாயம் முப்பதாவது வசனம் கீழக்கண்டவாறு கூறுகிறது:

"உணவு உட்கொள்பவர் - மாமிச உணவு உட்கொள்வாராயின் - அவர் உண்ணும் மாமிச உணவு அவருக்கு எந்த கெடுதியும் அளிப்பதில்லை. எந்நாளும் மாமிச உணவை உட்கொண்டாலும் சரியே. ஏனெனில் சில படைப்புகளை உண்பதற்காகவும் - சில படைப்புகளை உண்ணப்படுவதற்காகவும்; படைத்தவன் கடவுளே".

மனு சாஸ்திரத்தின் ஐந்தாவது அத்தியாயம் முப்பத்து ஒன்றாவது வசனம் கீழக்கண்டவாறு கூறுகிறது:

"மாமிச உணவு உண்பதும் - சரியான தியாகமே. இது மரபு ரீதியாக அறியப்பட்டு வரும் கடவுளின் கட்டளையாகும்".

மேலும் மனு சாஸ்திரத்தின் ஐந்தாவது அத்தியாயம் முப்பத்து ஒன்பதாவது வசனமும் நாற்பதாவது வசனமும் கீழக்கண்டவாறு கூறுகிறது:

"பலியிடுவதற்கென கடவுள் சில கால்நடைகளை படைத்திருக்கின்றான். எனவே பலியிடுவதற்காக கால்நடைகளை அறுப்பது என்பது - கால்நடைகளை கொல்வது ஆகாது."

இவ்வாறு இந்து மத வேதங்களும் - சாஸ்திரங்களும் - இந்துக்கள் மாமிச உணவு உண்ணவும் - உணவுக்காக கால்நடைகளை கொல்லவும் அனுமதியளித்திருக்கிறது.

7. இந்துத்துவம் மற்ற மதங்களின் பழக்க வழக்கங்களால் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்து மத வேதங்கள் இந்துக்கள் அசைவ உணவு உண்பதற்கு அனுமதி அளித்திருந்த போதிலும் பெரும்பான்மையான இந்துக்கள் மாமிச உணவு உண்ணாமல் - சைவ உணவு மட்டுமே உட்கொள்கிறவர்களாக இருக்கிறார்கள். இதற்கு காரணம் அசைவ உணவு உட்கொள்ளாத ஜைன மதக் கொள்கையின் பாதிப்பு இந்து மதத்திலும் ஏற்ப்பட்டிருப்பதால் தான்.

8. தாவர வகைகளுக்கும் உயிர் உண்டு.

பெரும்பான்மையான மதங்களைச் சார்ந்தவர்கள் அசைவ உணவு உண்ணாமல் இருப்பதற்கு காரணம் - அவர்களின் மதங்கள் உணவுக்காகக் கூட உயிர்களைக் கொல்வது பாவம் என்ற கொள்கையை போதிப்பவைகளாக இருப்பதால்தான்.

ஒரு உயிரைக்கூட கொல்லாமல் ஒரு மனிதன் உயிர்வாழ முடியும் எனில் - மேற்படி கொள்கையை கடைபிடிக்கும் மனிதர்களில் முதலாவதாக இருப்பது நானாகத்தான் இருக்கும். முந்தைய காலங்களில் தாவரங்களுக்கு உயிர் இல்லை என மனிதர்கள் நம்பிக்கை கொண்டிருந்தார்கள்.

ஆனால் இன்றைய அறிவியல் யுகத்தில் - தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்பது அகிலம் முழுவதும் அறிந்த விஷயம். எனவே சைவ உணவு உண்ணுபவர்களாக இருந்தாலும் உயிர்களை கொல்லாமல் இருப்பது என்பது சாத்தியக் கூறு அல்ல என்ற கருத்தை விளங்கிக் கொள்ள முடியும்.

7. தாவரங்களாலும் வலியை உணர முடியும்:

தாவரங்களால் வலியை உணர முடியாது. எனவே தாவரங்களை கொல்வது - உயிருள்ள பிராணிகளை கொல்வதைவிட - குறைந்த பாவம்தான் என சிலர் வாதிடக் கூடும்.

இன்றைய அறிவியல் - தாவரங்களும் வலியை உணர முடியும் என்று நமக்குக் கற்றுத் தருகிறது. 20 hertz க்கு குறைவான சப்தத்தையும் 20000 hertz க்கு மேற்பட்;ட சப்தத்தையும் மனிதனால் கேட்க முடியாத காரணத்தால் தாவரங்கள் வலியினால் அலறுவதை நாம் அறிய முடியாது.

அமெரிக்காவில் உள்ள விவசாயி ஒருவர் ஆராய்ச்சி செய்து தாவரங்கள் அலறுவதை - மனிதர்கள் கேட்கும் அளவுக்கு மாற்றக்கூடிய கருவி ஒன்றினை கண்டு பிடித்திருக்கிறார். மேற்படி கருவியின் மூலம் தாவரங்கள் தண்ணீருக்காக அலறுவதை மனிதர்களால் கேட்க முடியும்.

பின்னால் வந்த வேறு சில ஆராய்ச்சியாளர்கள் தாவரங்களும் - மகிழ்ச்சி - வருத்தம் போன்ற உணர்வுகளை வெளிப்படுத்தும் ஆற்றலை கொண்டவை என்றும் கண்டு பிடித்துள்ளனர். இவ்வாறு தாவரங்களும் வலியை உணரக் கூடியவை. மகிழ்ச்சி வருத்தம் போன்ற உணர்வுகளை வெளிப்படுத்தக் கூடிய ஆற்றலை கொண்டவை என்பதை அறிவியல் உண்மைகள் நமக்கு அறிவிக்கின்றன.

8. இரண்டு அல்லது மூன்று புலன்களை கொண்டு உயரி;வாழக்கூடியவைகளை கொல்வது என்பது குறைந்த பாவம் செய்வது ஆகாது.

ஒருமுறை - ஒரு சைவ உணவு உட்கொள்பவர் - என்னோடு வாதிடும்போது சொன்னார் - மிருகங்கள் ஐந்தறிவு கொண்டவை. ஆனால் தாவரங்கள் - இரண்டு - அல்லது மூன்று புலன்களை கொண்டவைதான்.

எனவே ஐந்தறிவுள்ள மிருகங்களை கொல்வதைவிட - இரண்டு அல்லது புலன்களை கொண்ட தாவரங்களை கொல்வது குறைந்த பாவம் இல்லையா என்று. ஒரு உதாரணத்திற்கு உங்களது சகோதரர் - பிறவியிலேயே செவிட்டு - ஊமையாக இருக்கிறார். அவரை மற்ற மனிதர்களோடு ஒப்பிடும்போது அவர் இரண்டு ஆற்றல்கள் - குறைவாக உள்ளவர்தான். வளர்ந்து ஆளான - உங்களது செவிட்டு ஊமை சகோதரரை - ஒருவர் கொலை செய்து விட்டார் - என்று வைத்துக் கொள்ளுங்கள்.

உங்களது செவிட்டு ஊமை சகோதரர் இரண்டு ஆற்றல்கள் குறைவாக உள்ளவர் - ஆகவே கொலையாளிக்கு - குறைந்த தண்டனை தந்தால் போதும் என்று நீங்கள் நீதிபதியுடன் வாதாடுவீர்களா?. மாட்டீர்கள். மாறாக என்ன சொல்வீர்கள் - காது கேளாத - வாய் பேச முடியாத அப்பாவியை கொன்றவருக்கு நீதிமன்றம் அதிக தண்டனை கொடுக்க வேண்டும் என்றுதான் வாதாடுவீர்கள்.

9. கால்நடைகள் பெருகும்:

உலகில் உள்ள ஒவ்வொருவரும் - சைவ உணவு மாத்திரம் உட்கொள்பவராக இருந்தால் - கால்நடைகளின் பெருக்கம் உலகத்தில் அதிகரிக்கும். ஏனெனில் கால்நடைகள் வேகமாக பெருகக் கூடியவை. தான் படைத்த படைப்புகளை இவ்வுலகில் எவ்வாறு சமநிலையில் வைத்திருக்க வேண்டும் என்பதை அறிந்தவன் அல்லாஹ் ஒருவன்தான். எனவேதான் மனித வர்க்கம் - மாமிச உணவு உட்கொள்ள அல்லாஹ் அனுமதி அளித்திருக்கிறான்.

அருள்மறை குர்ஆனின் இரண்டாவது அத்தியாயத்தின் 168 வது வசனம் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகின்றது:

"மனிதர்களே! பூமியிலுள்ள பொருட்களில் அனுமதிக்கப்பட்டவற்றையும் -பரிசுத்தமானவற்றையும் உண்ணுங்கள்."


--------------------------------------------------------------------------------

இஸ்லாமியர்கள் கால்நடைகளை - இரக்கமற்ற முறையில் சித்திரவதை செய்து கால்நடைகளுக்கு வேதனை தரும் முறையில் அறுக்கிறார்களே?. இது சரியா?.

பதில்:

"ஸபிஹா" என்றழைக்கப்படும் - இஸ்லாமியர்கள் கால்நடைகளை அறுக்கும் விதம் குறித்து மக்களில் பொரும்பாலோரிடமிருந்து விமரிசனங்கள் வருகின்றன. இந்த கேள்விக்கு பதிலளிக்கும் முன் - மேற்படி பொருள் குறித்து - ஒரு சீக்கியருக்கும் - ஒரு இஸ்லாமியருக்கும் நடந்த உரையாடலை உங்களுக்கு சொல்லி விடுறேன்.

சீக்கியர் ஒருவர் இஸ்லாமியரைப் பார்த்து கேட்டார் - நாங்கள் ஆடு மாடுகளை அறுக்கும் போது - அதன் பின்புற மண்டையில் ஒரே போடு போட்டு - கொன்று விடுகிறோம். அதுபோல செய்யாமல் - நீங்கள் ஏன் அவைகளின் கழுத்தை அறுத்து - சித்ரவதை செய்து கொல்கிறீர்கள்?.

மேற்படி கேள்வி கேட்கப்பட்ட இஸ்லாமியர் சொன்னார்: கால்நடைகளை பின்புறம் இருந்து தாக்கிக் கொல்வதற்கு உங்களைப் போல நாங்கள் ஒன்றும் கோழைகளல்ல. நாங்கள் தைரியசாலிகள். அதனால்தான் முன்பக்கமாக அதன் கழுத்தை அறுத்து கொல்கிறோம் என்று.

மேற்படி சம்பவம் வேடிக்கையாக இருந்தாலும் - "ஷாபிஹா" என்றழைக்கப்படும் - இஸ்லாமியர்கள் கால்நடைகளை அறுக்கும் விதம்தான் மனிதத்தன்மை உள்ளது மற்றும் அறிவியல் ரீதியாக சிறந்த முறை என்பதை கீழக்காணும் விபரங்கள் நமக்கு தெரிவிக்கும்.

1. இஸ்லாமிய முறையில் கால்நடைகளை அறுக்கும் விதம்.

அரபிமொழியில் "ஸக்காத்" என்றால் "தூய்மை" என்ற பொருள். மேற்படி சொல்லிலிருந்து "ஸக்கய்தும்" (தூய்மைப்படுத்துதல்) என்ற வினைச்சொல் பெறப்பட்டது. இஸ்லாமிய முறையில் காலந்டைகளை அறுப்பதற்கு கீழக்காணும் நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டிருக்க வேண்டும்.

a). கால்நடைகளை அறுக்க பயன்படும் கத்தி அல்லது வாள் மிகக் கூர்மையானதாக இருக்க வேண்டும்.
கால்நடைகள் மிகக் கூர்மையான கத்தி அல்லது வாளால் அறுக்கப்பட வேண்டும். அறுக்கும் போது கால்நடைகள் வலியை உணராதவாறு அல்லது மிகக் குறைவாகவே வலியை உணருமாறு - மிக வேகமாக அறுக்கப்பட வேண்டும்.

b). "ஸபிஹா" என்றால் அரபிமொழியில் அறுத்தல் என்று பொருள்படும். மேற்படி இஸ்லாமிய முறையில் கால்நடைகளை அறுக்கும்போது கழுத்தில் உள்ள மூச்சுக் குழாயும் இரத்தக்குழாயும் ஒரே சமயத்தில் அறுக்கப்பட்டு - கால்நடைகளை உயிரிழக்கச் செய்ய வேண்டும். அவ்வாறு செய்யும்போது கால்நடைகளின் நரம்பு மண்டலம் துண்டிக்கப்படாமல் இருக்க வேண்டும்.

c). அறுக்கப்பட்ட கால்நடைகளின் உடலில் உள்ள இரத்தம் முழுவதும் வழியும்படிச் செய்ய வேண்டும். இரத்தம் முழுவதும் வழிந்தோடச் செய்வதன் நோக்கம் - அறுக்கப்பட்ட கால்நடைகளின் இரத்தம் - இரத்தக் குழாய்களில் தங்கி கிருமிகள் உருவாகாமல் இருக்க வேண்டியாகும்.

கால்நடைகளை அறுக்கும் போது தண்டுவடம் துண்டிக்கப்படாமல் இருக்க வேண்டும். தண்டுவடும் துண்டிக்கப்படுவதால் - இதயத்திற்கு செல்லக்கூடிய இரத்த நாளங்கள் பாதிக்கப்பட்டு - இதயம் நின்று போகக் கூடிய நிலை உண்டாகலாம். இதனால் இதயத்தில் உள் இரத்தம் இரத்த நாளங்களில் தங்கிவிடக் கூடும்.

d). கிருமிகளும் - நோய்க்கிருமிகளும் உருவாக காரணமாக அமைவது இரத்தமே.
கிருமிகளும் - நோய்க்கிருமிகளும் உருவாக காரணமாக அமைவது உடலில் உள்ள இரத்தமே. இஸ்லாமிய முறையில் கால்நடைகளை அறுக்கும்போது - கால்நைடகளின் உடலில் உள்ள இரத்தம் முழுவதும் வழிந்தோடச் செய்யப்படுவதால் நோய்க்கிருமிகள் உருவாவதில்லை.

e). .இஸ்லாமிய முறையில் அறுக்கப்படும் கால்நடைகளின் இறைச்சி நீ;ண்ட நேரம் கெட்டுப் போகாமல் இருக்கும்.

இஸ்லாமிய முறையில் அறுக்கப்படும் இறைச்சியில் இரத்தம் கலந்து விடாமல் இருப்பதால் - வேறுவிதமாக கொல்லப்படும் கால்நடைகளின் இறைச்சியைவிட இஸ்லாமிய முறையில் அறுக்கப்படும் இறைச்சி நீ;ண்ட நேரம் கெடாமல் இருக்கும்.

f). இஸ்லாமிய முறையில் கால்நடைகளை அறுக்கும்போது - கால்நடைகள் வலியை உணர்வதில்லை.

இஸ்லாமிய முறையில் கால்நடைகள் அறுக்கப்படும்பொழுது - கால்நடைகளின் கழுத்து நரம்புகள் மிக வேகமாக அறுக்கப்பட்டு வலியை மூளைக்குக் கடத்திச் செல்லக்கூடிய நரம்பு மண்டலம் துண்டிக்கப்பட்டு விடுவதால் அறுக்கப்படும் கால்நடைகள் வலியை உணர்வதில்லை.

இரத்தம் உடலிலிருந்து வெளியேறுவதால் - உடலில் உள்ள சதைப்பாகங்கள் - இரத்தம் இன்றி சுருங்கி விடுவதால் ஏற்படும் மாற்றத்தால் தான் அறுக்கப்பட்ட மிருகங்கள் - துள்ளுவதாகவும் - துடிப்பதாகவும் நமக்குத் தெரிகின்றதேத் தவிர வலியால் அல்ல.


--------------------------------------------------------------------------------

Tuesday, October 23, 2007

மக்கா - மதீனாவுக்கு நீங்க போகலாமா?

மாற்று மதத்தவர்கள் மக்காவிற்கும் - மதினாவிற்கும் செல்ல அனுமதிக்கப்படுவது இல்லையே. ஏன்?.

பதில்:

மாற்று மதத்தவர்கள் மக்காவிற்கும் - மதினாவிற்கும் செல்ல அனுமதிக்கப்படுவது இல்லை என்பது உண்மை. அடியிற் காணும் விளக்;கங்கள் மேற்படி தடையைப் பற்றி தெளிவாக்க உதவும்:

1. நாட்டிலுள்ள எல்லா குடிமக்களும் தடை செய்யப்பட்ட இடங்களுக்குச் செல்ல முடியாது.

நான் ஒரு இந்தியக் குடிமகன். ஆயினும்; ராணுவ கேந்திரங்கள் போன்ற பாதுகாக்கப்பட்ட பகுதிகளுக்குள் செல்ல எனக்கு அனுமதியில்லை. ராணுவத்தில் பணிபுரிபவர்கள் - மற்றும் ராணுவத்தோடு தொடர்பு உடையவர்கள் மாத்திரம்தான் ராணுவ கேந்திரங்கள் போன்ற பாதுகாக்கப்பட்ட பகுதிகளுக்குள் செல்ல அனுமதி உண்டு.

அதுபோல- ஒவ்வொரு நாட்டிலும் - அந்த நாட்டின் சாதாரண குடிமக்கள் செல்ல முடியாதவாறு பாதுகாக்கப்பட்ட பகுதிகள் சில இருக்கின்றன. அது போல இஸ்லாம் உலகத்திற்கும் - உலகத்தில் உள்ள மக்களுக்கும் பொதுவான மார்க்கமாக இருந்தாலும் - இஸ்லாத்தின் பாதுகாக்கப்பட்ட பகுதியாக இருப்பது - இரண்டு புனித நகரங்களான மக்காவும் - மதினாவுமாகும்.

இஸ்லாத்தின் பாதுகாக்கப்பட்ட பகுதியாக இருக்கும் இந்த - இரண்டு புனித நகரங்களான மக்காவுக்கும் மதினாவுக்கும் செல்ல அனுமதியுள்ளவர்கள் இஸ்லாமியர்கள் மாத்திரமே.

பாதுகாக்கப்பட்ட பகுதிகளுக்குச் செல்ல தடை செய்திருப்பதை நாட்டின் சாதாரண குடிமகன் எதிர்ப்பது சரியானது அல்ல. அதே போன்றுதான் முஸ்லிம் அல்லாதவர்கள் இஸ்லாத்தின் பாதுகாக்கப்பட்ட பகுதியாக இருக்கும் இந்த - இரண்டு புனித நகரங்களான மக்காவுக்கும் மதினாவுக்கும் செல்ல அனுமதி மறுக்கப்பட்டிருப்பது குறித்து எதிர்ப்பு தெரிவிப்பதும் சரியானது அல்ல.

2. மக்காவுக்கும் மதினாவுக்கும் செல்ல அனுமதிக்கும் "விஷா".

ஒருவர் வெளிநாட்டிற்கு செல்ல வேண்டுமெனில் அந்நாட்டிற்கு செல்வதற்காக "விஷா" அதாவது அனுமதி பெற வேண்டும். ஒவ்வொரு நாடும் தமது நாட்டிற்கு வர அனுமதி பெற வேண்டுமெனில் தமக்கென வித்தியாசமான சட்டங்களையும் விதிகளையும் தேவைகளையும் வகுத்துள்ளன. மேற்படி வகுக்கப்பட்டுள்ள சட்டங்களுக்கும் - விதிகளுக்கும் தேவைகளுக்கும் உட்படாதவர்களுக்கு தம் நாட்டிற்குள் வர அனுமதி கொடுப்பதில்லை.

இவ்வாறு தம் நாட்டிற்குள் வர அனுமதி கொடுப்பதில் கடுமையான சட்டங்களையும் விதிகளையும் தேவைகளையும் வகுத்துள்ள நாடுகளில் அமெரிக்காவும் ஒன்று.

குறிப்பாக மூன்றாம் தர நாடுகளில் உள்ள மக்களுக்கு அனுமதி கொடுப்பதற்கென கடுமையான சட்ட திட்டங்களை வைத்துள்ளது. மூன்றாந்தர நாடுகளில் உள்ள மக்கள் அமெரிக்கா செல்ல விஷா பெற வேண்டுமெனில் ஏராளமான தேவைகளையும் - நிபந்தனைகளையும் பூர்த்தி செய்திருக்க வேண்டும்.

கடந்த முறை நான் சிங்கப்பூருக்கு சென்றபோது போதைப்பொருள் கடத்துவோருக்கு மரண தண்டனை என சிங்கப்பூர் இமிக்ரேஷன் படிவத்தில் எழுதப்பட்டிருந்தது. நான் சிங்கப்பூர் செல்ல வேண்டும் எனில் சிங்கப்பூரின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டே ஆக வேண்டும். மரண தண்டனை காட்டுமிராண்டித்தனம் என நான் வாதாட முடியாது. நான் சிங்கப்பூரின் சட்ட திட்டங்களுக்கு உட்படுவேன் என்றால் மாத்திரமே என்னை சிங்கப்பூர் செல்ல அனுமதிப்பார்கள்.

இஸ்லாத்தின் புனித நகரங்களான மக்காவிற்கும் - மதினாவிற்கும் செல்ல விரும்பும் எந்த மனிதருக்கும் -இருக்க வேண்டிய ஒரேயொரு முக்கியத் தகுதி என்னவெனில் - தன் உதடுகளால் மொழிந்து உள்ளத்தால் ஏற்றுக்கொள்ளக் கூடிய
"லா இலாஹ இல்லல்லாஹ் - முஹம்மதுர் ரசூலுல்லாஹ்" -

வணக்கத்திற்குரிய நாயன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை। முஹம்மது நபி அவனது தூததராவர் - என்பதுதான்.

இஸ்லாமியர்கள் பயங்கரவாதிகளா?

முஸ்லிம்களில் பலர் அடிப்படைவாதிகளாகவும் - பயங்கரவாதிகளாகவும் இருப்பது ஏன்?.

பதில்:

உலக விஷயங்கள் பற்றி விவாதிக்கும் பொழுதும் மதங்களை பற்றி விவாதிக்கும் பொழுதும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இஸ்லாமியர்கள் அடிப்படைவாதிகள் என்றும் தீவிரவாதிகள் என்றும் சுட்டிக்காட்டப் படுகின்றனர்.

இஸ்லாத்தின் எதிரிகள் உலகத்தில் உள்ள எல்லா ஊடகங்களின் வாயிலாகவும் இஸ்லாமியர்களை அடிப்படைவாதிகள் என்றும் தீவிரவாதிகள் என்றும் தவறாக அடையாளம் காண்பிப்பதில் உறுதியாக இருக்கிறார்கள். மேற்படி தவறான தகவல் மற்றும் தவறான பிரச்சாரம் - இஸ்லாமியர்கள் தாக்கப்படுவதற்கும் தவறாக விமரிசிக்கப்படுவதற்கும் காரணங்களாக அமைந்து விடுகின்றன.

உதாரணத்திற்கு, அமெரிக்காவின் ஒக்லகாமா நகரில் நடந்த வெடி குண்டு விபத்தின் பின்னனியில் "மத்திய கிழக்கு நாடுகளின்" கைவரிசை இருக்கிறது என அமெரிக்காவின் அனைத்து ஊடகங்களும் போட்டி போட்டுக்கொண்டு அறிவிப்பு செய்தன. ஆனால் அந்த வெடிகுண்டு வெடிக்க காரணமாயிருந்த குற்றவாளி அமெரிக்காவின் ஆயுதபடையைச் சார்ந்த ஒருவன்தான் என்று பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது.

அடுத்து இஸ்லாமியர்கள் மீது சுமத்தப்படும்; "அடிப்படைவாதம்" பற்றியும் - "தீவிரவாதம்" பற்றியும் நாம் ஆராய்வோம்.

1. அடிப்படைவாதத்திற்கான விளக்கம்:

தான் சார்ந்திருக்கும் கொள்கையை மன உறுதியுடன் பற்றிப் பிடித்து அந்த கொள்கையை தன் வாழ்க்கையில் மிகச் சரியாக நடைமுறைபடுத்துபவனுக்கு அடிப்படைவாதி என்று பெயர்.

உதாரணத்திற்கு, மருத்துவர் ஒருவர் சிறந்த மருத்துவர் என பெயர் பெற வேண்டுமெனில் - அவர் சார்ந்திருக்கும் மருத்துவ கொள்கையின் அடிப்படையை அறிந்து - அறிந்த மருத்துவ கொள்கையை பின்பற்றி - அதை நடைமுறைபடுத்தினால் அவர் ஒரு சிறந்த மருத்துவர் என்று அழைக்கப்படுவார்.

இதனை வேறு வார்த்தையில் சொல்வதென்றால் - மருத்துவதுறையில் அவர் ஒரு அடிப்படைவாதி. கணிதத் துறையில் ஒருவர் சிறந்த கணித மேதை என பெயர் பெற வேண்டுமெனில் - அவர் சார்ந்திருக்கும் கணிதக் கொள்கையின் அடிப்படையை அறிந்து - அவர் அறிந்த கணிதக் கொள்கையை பின்பற்றி - அதை நடைமுறைபடுத்தினால் அவர் ஒரு சிறந்த கணித மேதை என்று அழைக்கப்படுவார். இதனை வேறு வார்த்தையில் சொல்வதென்றால் - கணிதத்துறையில் அவர் ஒரு அடிப்படைவாதி.

அறிவியல் துறையில் ஒருவர் சிறந்த அறிவியல் மேதை என பெயர் பெற வேண்டுமெனில் - அவர் சார்ந்திருக்கும் அறிவியல் கொள்கையின் அடிப்படையை அறிந்து - அறிந்த அறிவியல் கொள்கையை பின்பற்றி - அதை நடைமுறைபடுத்தினால் அவர் ஒரு சிறந்த அறிவியல் மேதை என்று அழைக்கப்படுவார். இதனை வேறு வார்த்தையில் சொல்வதென்றால் - அறிவியல் துறையில் அவர் ஒரு அடிப்படைவாதி.

2. எல்லா அடிப்படைவாதிகளும் ஒரே மாதிரியானவர்கள் அல்ல.

எல்லா அடிப்படைவாதிகளுக்கும் ஒரே வர்ணம் பூசக் கூடாது. எல்லா அடிப்படைவாதிகளும் நல்லவர்கள் என்றோ அல்லது கெட்டவர்கள் என்றோ வகைப்படுத்த முடியாது. அவர்கள் சார்ந்திருக்கும் துறை அல்லது அவர்களால் செய்யப்படும் செயல் ஆகியவற்றைக் கொண்டே அவர்கள் நல்ல அடிப்படைவாதியா அல்லது கெட்ட அடிப்படைவாதியா என்பதை வகைப்படுத்த வேண்டும்.

கொள்ளையடிக்கும் - சிறந்த கொள்ளைக்காரன் சமுதாயத்திற்கு தீங்கு விளைவிப்பதால் அவனை ஒரு கெட்ட அடிப்படைவாதி என்று கொள்ளலாம். அதே சமயம் ஒரு சிறந்த மருத்துவர் சமுதாயத்திற்கு பயனுள்ளவராக இருப்பதால் அவர் ஒரு நல்ல அடிப்படைவாதி மருத்துவர் என கொள்ளலாம்.

3. நான் ஒரு இஸ்லாமிய அடிப்படைவாதி என்பதில் பெருமை கொள்கிறேன்.:

இறைவனின் மாபெரும் கிருபையினால் - நான் ஒரு இஸ்லாமிய அடிப்படைவாதி. இஸ்லாத்தின் அடிப்படை விதிகளை அறிந்து - அறிந்த விதிகளை பின்பற்றி - அந்த விதிகளை எனது வாழ்க்கையிலும் நடைமுறைபடுத்துகிறேன்.

ஒரு உண்மையான இஸ்லாமியன் தான் ஒரு அடிப்படைவாதியாக இருப்பதில் ஒருபோதும் வெட்கமுற மாட்டான். நான் ஒரு இஸ்லாமிய அடிப்படைவாதி என்பதில் பெருமை கொள்கிறேன். ஏனெனில் - இஸ்லாத்தின் அடிப்படை கொள்கைகள் அனைத்தும் உலகம் முழுவதுமுள்ள மனித குலத்திற்கு பயன் தரக் கூடியவை. இஸ்லாத்தின் அடிப்படை கொள்கைகள் எதுவுமே மனித குலத்திற்கு தீங்கிழைப்பவையோ அல்லது மனித குலத்திற்கு எதிரானவையோ அல்ல.

இஸ்லாத்தின் செயல்பாடுகள் சரியானவை அல்ல. மாறாக தவறானவை என்று ஏராளமானபேர் இஸ்லாத்தைப் பற்றிய தவறான எண்ணங்களை கொண்டிருக்கின்றனர். இந்த தவறான எண்ணம் ஏனெனில் - இஸ்லாத்தைப் பற்றி அவர்கள் அறைகுறையாக அறிந்து வைத்திருப்பதே காரணமாகும்.

ஒருவர் இஸ்லாம் கற்றுத் தரும் பாடங்களை திறந்த மனதுடனும் - மிகக் கவனத்தோடும் பகுத்தாய்வார் எனில் இஸ்லாம் தனி மனிதனுக்கும் - மொத்த மனித சமுதாயத்திற்கும் - முழு பயனுள்ளது என்ற உண்மையை அறிவதிலிருந்து தவற முடியாது.

4. "அடிப்படைவாதத்திற்கு" டிக்ஷ்னரி தரும் விளக்கம்:

அடிப்படைவாதத்திற்கு வெப்ஸ்டர் டிக்ஷ்னரி தரும் விளக்கம் என்னவென்றால் "பாதுகாக்கும் கொள்கையை" (Protestanism) அடிப்படையாக கொண்டு இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் அமெரிக்காவில் தோன்றிய இயக்கம் என்பதாகும்.

நவீன நாகரீகத்தை எதிர்த்தும் பைபிளின் கொள்கைகளான - நம்பிக்கை மற்றும் ஒழுக்கங்கள் மட்டுமல்லாது - வரலாற்று உண்மைகளையும் பைபிளிள் உள்ளபடியே நிலை நிறுத்த வேண்டியும் தோன்றிய இயக்கமாகும். "கடவுளால் எழுத்து வடிவில் அருளப்பட்ட கட்டளைகளே பைபிள்" என்ற கொள்கைக்கு முக்கியத்துவம் கொடுத்து இயங்கி வரும் இயக்கமாகும். எனவே ஆரம்ப காலங்களில் அடிப்படைவாதம் என்றால் மேற்குறிப்பிட்ட கொள்கைகளை அடிப்படையாக கொண்டு இயங்கி வந்த இயக்கம் என்று பொருள் கொள்ளப்பட்டது.

அடிப்படைவாதத்திற்கு ஆக்ஸ்போர்டு டிக்ஷ்னரி தரும் விளக்கம் என்னவெனில் "மதங்களின் தொன்மையான அல்லது அடிப்படையான கோட்பாடுகளை நெறி பிறழாது நடைமுறைபடுத்துவது - குறிப்பாக இஸ்லாமிய மத கோட்பாடுகள்" என்பதாகும்.

இன்றைக்கு ஒரு மனிதன் "அடிப்படைவாதம்" என்ற வார்த்தையை உபயோகிக்கும்போது உடனே அவனது எண்ணத்தில் இஸ்லாமியன் - ஒரு பயங்கரவாதியாக தோன்றிவிடுகிறான்.

5. ஒவ்வொரு இஸ்லாமியனும் ஒரு பயங்கரவாதியாக இருக்க வேண்டும்.

ஒவ்வொரு இஸ்லாமியனும் ஒரு பயங்கரவாதியாக இருக்க வேண்டும். பயத்துக்கு காரணமானவன் பயங்கரவாதி. காவல்துறையை பார்த்தவுடன் கொள்ளையடிப்பவர்கள் பயப்படுகின்றனர். எனவே கொள்ளையருக்கு காவல் துறையினர் பயங்கரவாதிகள். அதேபோல திருட்டு கொள்ளை மற்றும் வல்லுறவு போன்ற சமுதாயத்தின் குற்றங்களைச் செய்யும் ஒவ்வொரு குற்றவாளிக்கும் - ஒவ்வொரு இஸ்லாமியனும் ஓர் பயங்கரவாதியாக தோன்ற வேண்டும்.

சமுதாயக் குற்றவாளிகள் - ஒரு இஸ்லாமியனை காணும்போதெல்லாம் பயப்படவேண்டும். சமுதாயத்தில் உள்ள எல்லா மனிதர்ளுக்கும் மத்தியில் தீங்கு இழைப்பவனுக்கு பயங்கரவாதி என்ற வார்த்தை பயன்படுத்தப்படுவது உண்மை.

ஆனால் ஒரு உண்மையான முஸ்லிம் சமுதாயத்தில் குறிப்பிட்டவர்களுக்கு - அதாவது சமுதாய குற்றவாளிகளுக்கு - மாத்திரம் பயங்கரவாதியாக தோன்ற வேண்டுமே தவிர சமுதாயத்தின் அப்பாவி பொதுமக்களுக்கு அல்ல. மாறாக ஒரு இஸ்லாமியன் - அப்பாவி பொதுமக்களுக்கு மத்தியில் அமைதியை நிலைநாட்டுபவனாக இருக்க வேண்டும்.

6. மனிதர்கள் செய்கிற ஒரே வகையான செயலுக்கு - "பயங்கரவாதிகள்" என்றும் "விடுதலைப் போராட்ட வீரர்கள்" என்றும் இரண்டு வகையான முத்திரைகள்.

வெள்ளையர்களால் ஆளப்பட்டுக் கொண்டிருந்த இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்னால் - இந்திய சுதந்திரத்திற்காகப் போராடியவர்களை பயங்கரவாதிகள் என பிரிட்டிஷ் அரசாங்கம் முத்திரை குத்தியது. ஆனால் அதே வீரர்கள் இந்தியர்களால் - சுதந்திர போராட்ட வீரர்கள் என அழைக்கப் பட்டார்கள்.

இவ்வாறு ஒரே வகையான மனிதர்கள் - அவர்கள் செய்த ஒரே வகையான செயலுக்கு இரண்டு வகையான முத்திரைகள் குத்தப்பட்டார்கள். அவர்கள் "பயங்கரவாதிகள்" என்று ஒரு தரப்பினராலும் - "சுதந்திரப் போராட்ட வீரர்கள்" என்று மறு தரப்பினராலும் அழைக்கப்பட்டார்கள். இந்தியாவை ஆள பிரிட்டிஷ்க்கு உரிமை இருக்கிறது என்ற கருத்தைக் கொண்டவர்கள் அவர்களை "பயங்கரவாதிகள்" என்று அழைத்தனர். இந்தியாவை ஆள பிரிட்டிஷ்க்கு உரிமை இல்லை என்ற கருத்தைக் கொண்டவர்கள் அவர்களை "சுதந்திரப் போராட்ட வீரர்கள்" என்று அழைத்தனர்.

எனவே ஒரு மனிதனைப் பற்றி ஒரு முடிவுக்கு வருவதற்கு முன்னால் - அவனது கருத்தையும் அறிவது அவசியம். இரண்டு தரப்புகளும் தீர விசாரிக்கப்பட்டு - விசாரணையின் முடிவுகள் அலசி ஆராயப்பட்டு - அதற்கான காரண காரியங்கள் மற்றும் செயலுக்கான நோக்கம் அனைத்தையும் அறிந்த பின்புதான் அந்த மனிதனைப்பற்றி ஒரு நிலையான முடிவு க்கு வரவேண்டும்.

7. இஸ்லாம் என்றால் அமைதி என்று பொருள்.

"இஸ்லாம்" என்ற வார்த்தை "ஸலாம்" என்ற அரபி மூல வார்த்தையிலிருந்து பெறப்பட்டது. ஸலாம் என்றால் அமைதி என்று பொருள். இஸ்லாத்தின் அடிப்படை கொள்கைகள் - இஸ்லாத்தை பின்பற்றுவோர் அமைதியை கடைபிடிக்குமாறு போதிப்பதுடன் உலகம் முழுவதும் அமைதியை நிலை நாட்டுமாறும் போதிக்கிறது.

இஸ்லாத்தின் அடிப்படை கொள்கையாம் அமைதியை கடைபிடிப்பதில் ஒவ்வொரு இஸ்லாமியனும் ஒரு அடிப்படைவாதியே. சமுதாயத்தில் அமைதியையும் - நீதியையும் நிலைநாட்டுதல் வேண்டி - ஒவ்வொரு இஸ்லாமியனும் - சமுதாயக் கொடுமைகளுக்கு எதிரான ஒரு தீவிரவாதியாக இருக்க வேண்டும்.

இஸ்லாம் வாளால் பரப்பப்பட்ட மார்க்கமா?

இஸ்லாம் வாளால் பரப்பப்பட்ட மார்க்கமாக இருக்கும்போது அது அமைதியான மார்க்கம் என்று அழைக்கப்படுவது எப்படி பொருந்தும்?.

பதில்:

இஸ்லாம் வாளால் பரப்பப்பட்டிருக்காமல் இருந்தால் - உலகம் முழுவதிலும் இஸ்லாத்திற்கு ஆதரவாக இத்தனை கோடிக்கணக்கானவர்கள் இருந்திருக்க மாட்டார்கள் என்பது சில மாற்று மதத்தவர்கள் இஸ்லாத்திற்கு எதிராக எடுத்து வைக்கும் பொதுவான குற்றச்சாட்டு.

இஸ்லாம் வாளால் பரப்பப்பட்ட மார்க்கமல்ல। மாறாக இஸ்லாம் இயற்கையாகவே அறிவுபூர்வமான மார்க்கம். இஸ்லாம் காரணகாரியங்களுடன் பிரச்னைகளுக்கு தீர்வு வழங்கக்கூடிய மார்க்கம் என்பதால்தான் உலகில் விரைவாக வேறூன்றியது என்பதை நான் மேலும் எடுத்து வைக்க போகும் விபரங்கள் மூலம் நீங்கள் விளங்கிக் கொள்ள முடியும்.

1. இஸ்லாம் என்றால் அமைதி என்று பொருள்

இஸ்லாம் என்ற வார்த்தை "ஸலாம்" என்ற அரபி மூல வார்த்தையிலிருந்து பெறப்பட்டது. "ஸலாம்" என்றால் அமைதி என்று பொருள். ஸலாம் என்ற அரபி வார்த்தைக்கு ஒருவருடைய விருப்பம் அனைத்தையும் இறைவனுக்காகவே விரும்புவது என்ற மற்றொரு பொருளும் உண்டு. இவ்வாறு இஸ்லாமிய மார்க்கம் என்பது அமைதியான மார்க்கமாகும்.

2. சில வேளைகளில் அமைதியை நிலைநாட்ட நிர்ப்பந்தம் அவசியமாகிறது.

உலகில் உள்ள ஒவ்வொரு மனிதரும் அமைதியையும் - இணக்கத்தையும் நடைமுறைப் படுத்த ஆதாரவாக இருப்பதில்லை. உலகில் உள்ளவர்களில் சிலர் தங்களது சுயலாபம் கருதி - குழப்பம் விளைவிப்பதையே விரும்புகின்றனர்.

இது போன்ற வேளைகளில் - உலகில் அமைதியை நிலைநாட்ட வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. எனவேதான் அமைதியை நிலைநாட்டவும் - சமுதாய எதிரிகளை அடக்கவும் - குற்றவாளிகளை தண்டிக்கவும் காவல்துறை என்ற அமைப்பு உலகம் முழுவதும் உள்ளது.

இஸ்லாம் அமைதியை விரும்பும் அதே வேளையில் எங்கெல்லாம் அநியாயம் நடக்கின்றதோ - அந்த அநியாயங்களை எதிர்த்து இஸ்லாமியர்களை போராட வலியுறுத்துகிறது. அநியாயத்தை எதிர்த்து போராட வேண்டிய நேரங்களில் - நிர்ப்பந்தம் அவசியமாகிறது. அமைதியையும் - நீதியையும் நிலை நாட்ட மாத்திரமே நிர்ப்பந்திக்கலாம் என இஸ்லாமிய மார்க்கம் அனுமதியளிக்கிறது.

3. வரலாற்று ஆசிரியர் டி.லேசி ஓ.லியரி ( De Lacy O'Leary) யின் கருத்து.

இஸ்லாம் வாளால் பரப்பப்பட்ட மார்க்கம் என்பது தவறான கருத்து என்பதை நீரூபிக்க -பிரபல வரலாற்று ஆசிரியர் டி.லேசி ஓ'லியரி ( De Lacy O'Leary) எழுதிய "இஸ்லாம் கடந்து வந்த பாதை" (Islam At The Cross Road) என்ற புத்தகத்தின் 8வது பக்கத்தில் அவர் குறிப்பிட்டுள்ள கருத்து சரியானதாக இருக்கும் என்று கருதுகிறேன்.

"இஸ்லாம் வாளால் பரப்பப்பட்ட மார்க்கம் என்ற கருத்து மீண்டும் - மீண்டும் உலகிற்கு தெரிவிக்கப் பட்டுக் கொண்டிருப்பது - வரலாற்று ஆசிரியர்களால் உருவாக்கப்பட்டக் கட்டுக்கதையேயன்றி வேறொன்றும் இல்லை என்பதை தெளிவான வரலாறு நமக்கு சுட்டிக்காட்டுகின்றது."

4. ஸ்பெயின் நாட்டில் இஸ்லாமிய ஆட்சி 800 ஆண்டுகளாக இருந்தது.

ஸ்பெயின் நாட்டை இஸ்லாமியர்கள் 800 ஆண்டுகளாக அரசாட்சி செய்தனர். ஸ்பெயின் நாட்டு முஸ்லிம்கள் எவரும் - ஸ்பெயின் நாட்டில் உள்ள மாற்று மதத்தவரை இஸ்லாமிய மார்க்கத்திற்கு மாறச் சொல்லி வாள் கொண்டு நிர்ப்பந்திக்கவில்லை. ஆனால் பின்னால் வந்த கிறிஸ்தவர்கள் சிலுவைப் போர் என்ற பெயரில் ஸ்பெயினில் உள்ள முஸ்லிம்கள் அனைவரையும் அழித்தனர். இன்றைக்கு ஸ்பெயினில் இறைவனை தொழுவதற்கு அழைக்கவென ஒரு முஸ்லிம் கூட இல்லை.

5. அரேபியர்களில் 1 கோடியே 40 லட்சம் பேர் தலைமுறை கிறிஸ்துவர்கள். (Coptic Christians).

கடந்த 1400 ஆண்டுகளாக அரபு தீபகற்பத்தை இஸ்லாமியர்கள் ஆண்டு வருகின்றனர். இடையில் சில ஆண்டுகள் - பிரிட்டிஷ்காரர்களும் - சில ஆண்டுகள் பிரெஞ்சுகாரர்களும் அரபு தீபகற்பத்தை ஆண்டனர். ஆனால் மொத்;தத்தில் 1400 ஆண்டுகளாக அரபு தீபகற்பத்தை இஸ்லாமியர்களே ஆட்சி செய்து வருகின்றார்கள். இருப்பினும் - இன்று கூட - 1கோடியே 40 லட்சம் பேர் தலைமுறை கிறிஸ்துவர்கள். (Coptic Christians). இஸ்லாமியர்கள் வாளைக் கொண்டு நிர்ப்பந்தித்து இருந்தால் - இன்றைக்கு அரபு தீபகற்பத்தில் ஒருவர் கூட கிறிஸ்துவராக இருக்க மாட்டார். அனைவரும் முஸ்லிம்காகத்தான் இருந்திருப்பர்.

6. இந்திய மக்கள் தொகையில் எண்பது சதவீத மக்கள் முஸ்லிம் அல்லாதோர்களே!.

இந்தியாவில் இஸ்லாமியர்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி செய்தனர். அவர்கள் விரும்பியிருந்தால் - முஸ்லிம் அல்லாதோர்களை - தங்களது ஆட்சி பலம் மற்றும் படை பலம் கொண்டு இஸ்லாமியர்களாக மாற்றியிருக்க முடியும். ஆனால் இன்றைக்கு இந்தியாவின் மக்கள் தொகையில் எண்பது சதவீதம் பேர் முஸ்லிம் அல்லாதோர்கள்தான். இன்றைக்கு இந்தியாவில் இருக்கும் ண்பது சதவீத முஸ்லிம் அல்லாதோர்களே - இஸ்லாம் வாளால் பரப்பப்பட்ட மார்க்கம் அல்ல என்பதற்கு சாட்சிகளாவர்.

7. இந்தோனேஷியாவும் - மலேசியாவும்.

இன்றைக்கு உலகில் உள்ள நாடுகளில் இந்தோனேஷியாவும் - மலேசியாவும்தான் அதிகமான முஸ்லிம்களை கொண்டுள்ள நாடுகள். எந்த இஸ்லாமிய படைகள் இந்தோனேஷியாவிற்கும் - மலேசியாவுக்கும் சென்று அவர்களை முஸ்லிம்களாக மாற்றின?.

8. ஆப்பிரிக்காவின் கிழக்கு கடற்கரையோரப் பகுதிகள்

அதே போன்று ஆப்பிரிக்காவின் கிழக்கு கடற்கரையோரப் பகுதிகளில் இஸ்லாம் துரிதமாக பரவி இருக்கிறது. எந்த இஸ்லாமிய படைகள் ஆப்பிரிக்காவின் கிழக்கு கடற்கரையோரப் பகுதிகளுக்கு சென்று அவர்களை முஸ்லிம்களாக மாற்றின?.

9. இஸ்லாமிய மார்க்கத்தில் நிர்ப்பந்தம் இல்லை.

எந்த வாளால் இஸ்லாம் பரப்பப்பட்டது?. அப்படி ஒரு வாள் இருந்தாலும் - இஸ்லாத்தை பரப்புவதற்காக அந்த வாளை இஸ்லாமியர்கள் பயன் படுத்தியிருக்கமுடியாது. ஏனெனில் கீழ்க்காணும் அருள்மறை குர்ஆனின் வசனம் அதனை தெளிவாகச் சுட்டிக்காட்டுகின்றது.

(இஸ்லாமிய) மார்க்கத்தில் (எவ்வகையான) நிர்ப்பந்தமும் இல்லை: வழிகேட்டிலிருந்து நேர்வழி முற்றிலும் (பிரிந்து) தெளிவாகிவிட்டது. (அல்-குர்ஆன் 02வது அத்தியாயம் - 256வது வசனம்)

10. அறிவார்ந்த கொள்கை என்னும் வாள்:

அறிவார்ந்த கொள்கை என்பதுதான் அற்த வாள். மனிதர்களின் எண்ணங்களையும் - உள்ளங்களையும் கொள்ளை கொண்டது அறிவார்ந்த கொள்கை என்ற அந்த வாள். அருள்மறை குர்ஆனின் 16வது அத்தியாயத்தின் 125வது வசனம் கீழக்கண்டவாறு கூறுகிறது.
"(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும் அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக!. அவர்களிடத்தில் மிக அழகிய முறையில் நீர் தர்க்கிப்பீராக!. மெய்யாக உம் இறைவன் அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்."

11. 1934 ஆம் ஆண்டு முதல் 1984 ஆம் ஆண்டுவரை கடந்த ஐம்பது ஆண்டுகளில் உலக மதங்களின் வளர்ச்சி.

கடந்த ஐம்பது ஆண்டுகளில் (1934 ஆம் ஆண்டு முதல் 1984 ஆம் ஆண்டு வரை) உலகில் உள்ள முக்கிய மதங்களின் வளர்ச்சி பற்றிய புள்ளிவிபத்தை 1986 ஆம் ஆண்டு ர்Pடர்ஸ் டைஜஸ்ட் பத்திக்கையின் ஆண்டு மலரான "அல்மனாக்" பத்திரிக்கை வெளியிட்டிருந்தது.

மேற்படி புள்ளிவிபரத்தை உள்ளடக்கிய கட்டுரை "தி ப்ளெய்ன் டிரத்" என்ற ஆங்கில பத்திரிக்கையிலும் வெளியாகியிருந்தது. உலக மதங்களில் அதிகமான வளர்ச்சி அடைந்து முதலிடத்தை பிடித்திருப்பது இஸ்லாமிய மார்க்கமே. அதனுடைய வளர்ச்சி கடந்த 50 ஆண்டுகளில் 235 சதவீதமாக இருந்தது. கிறிஸ்துவ மார்க்கம் 47 சதவீத வளர்ச்சி அடைந்திருந்தது. லட்சக் கணக்கானவர்களை இஸ்லாத்தில் மாற்ற வேண்டி இந்த நூற்றாண்டில் எந்த போர் நடந்தது?.

12. அமெரிக்காவிலும் - ஐரோப்பாவிலும் இஸ்லாமிய மார்க்கம் மிக வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது:

இன்று அமெரிக்காவில் மிக வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் மார்க்கம் இஸ்லாம். அதே போல் ஐரோப்பாவிலும் மிக வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் மார்க்கம் இஸ்லாம். எந்த வாள் மேற்கத்தியர்களை நிர்ப்பந்தப்படுத்தி மிக அதிக அளவில் இஸ்லாத்தில் இணையச் செய்தது?.

13. டாக்டர் ஜோஸப் ஆடம் பியர்ஸன்

"ஒருநாள் அரபுலகத்தின் கையில் அணுஆயுதம் சென்றுச் சேரும் என்று கவலைப்படுபவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அரபகத்தில் பிறந்த அன்றே இஸ்லாம் என்ற அணுகுண்டு இந்த உலகத்தில் போடப்பட்டாகி விட்டது என்பதை உணரத் தவறிவிட்டார்கள்." என்று டாக்டர் ஜோஸப் ஆடம் பியர்ஸன் சரியாகத்தான் சொன்னார்.

Sunday, October 21, 2007

பர்தா பெண்ணடிமைத்தனமா?

இஸ்லாமிய பெண்கள் பர்தா அணிய வேண்டும் என கட்டாயப்படுத்தி அவர்களை இழிவு படுத்துவது ஏன்?.

பதில்:

இஸ்லாத்தில் பெண்களின் நிலை பற்றி தாக்குவதை இலக்காக கொண்டு உலக ஊடகங்கள் செயல்படுகின்றன. இஸ்லாமிய சட்டத்தின் கீழ் பெண்கள் உடை அணிவதை விமரிசிக்காத ஊடகங்களே உலகில் இல்லை எனலாம். இஸ்லாம் வலியுறுத்தும் - இஸ்லாமிய உடை பற்றிய காரண காரியங்களை அறியும் முன்பு இஸ்லாம் தோன்றும் முன்பு - உலகில் உள்ள ஒவ்வொரு சமுதாயத்திலும் பெண்களின் நிலை எவ்வாறு இருந்தது என்பதை முதலில் தெரிந்து கொள்வோம்.


1. முந்தைய காலங்களில் பெண்கள் இழிவுபடுத்தப்பட்டு - போகப் பொருளாக மட்டுமே பயன்படுத்தப்பட்டார்கள்.


பண்டைய காலங்களில் பெண்கள் சமுதாயத்தில் மிகவும் கீழத்தரமாக மதிக்கப்பட்டு - மனிதனுக்கு உண்டான அடிப்படை கௌரவம் கூட மறுக்கப்பட்டவர்களாக நடத்தப்பட்டார்கள் என்பதை கீழ்க்காணும் வரலாற்று உண்மைகள் நமக்கு போதுமான விளக்கத்தை தருகின்றன.

(A). பாபிலோனிய நாகரீகம்:பாபிலோனிய சட்டப்படி பெண்கள் கீழ்த்தரமாக மதிக்கப்பட்டு அவர்களுக்கு உரிய அடிப்படை உரிமைகள் கூட மறுக்கப்பட்டார்கள். ஒரு மனிதன் ஒரு பெண்ணைக் கொலை செய்து விட்டால் அவருக்கு மரண தன்டனை வழங்குவதற்கு பதிலாக அவருடைய மனைவிக்கு மரண தண்டனை வழங்கும் வழக்கம் பாபிலோனிய நாகரீகத்தில் இருந்தது.


(B). கிரேக்க நாகரீகம்:


பண்டைகால நாகரீகங்களில் கிரேக்க நாகரீகம் பெருமைக்குரியதாக கருதப்பட்டது. மேற்படி "பெருமைக்குரிய" நாகரீக காலத்தில் - பெண்கள் தங்கள் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டவர்களாக கீழ்த்தரமாக நடத்தப்பட்டார்கள்.

"பண்டோரா" என்றழைக்கப்பட்ட "கற்பனைப் பெண்மணி" யே மனித குலத்திற்கு ஏற்படும் தீமைகள் அனைத்திற்கும் அடிப்படை காரணமாக அமைந்தவள் என்று கிரேக்க புராணங்கள் பறை சாற்றுகின்றன. கிரேக்கர்கள் பெண்களை மனித குலத்தில் தாழந்தவர்கள் என்றும் - ஆண்களுக்கு அடிமைகள் என்றும் கருதினார்கள்.

கிரேக்க நாகரீகத்தின் பிற்பட்ட காலத்தில் பெண்கள் - உயர்வானவர்களாக மதிக்கப்பட்டாலும் - ஆண்களுக்கு உரிய தான் என்ற அகம்பாவத்தாலும் - பாலியியல் பலாத்காரங்களுக்கும் - பெண்கள் உட்படுத்தப்பட்டார்கள். கிரேக்க சமுதாயத்தின் எல்லா மட்டத்திலும் - விபச்சாரம் பரவலாக காணப்பட்டது.

(C). ரோமானிய நாகரீகம்:

ரோமானிய நாகரீகம் புகழின் உச்சநிலையில் இருந்தபோது கூட ஒரு ஆண் தனது மனைவியை கொலை செய்வதை தனது உரிமையாக கொண்டிருந்தான். விபச்சாரமும் - பெண்களை நிர்வாணமாக பாhப்பதுவும் - ரோமானியர்களின் மிகச் சாதாரண பழக்க வழக்கமாக இருந்தது.

(D). எகிப்திய நாகரீகம்:

எகிப்தியர்கள் பெண்களை ஒரு தீமையாகவும் - சாத்தானின் சின்னமாகவும் கருதினார்கள்.

E). இஸ்லாமிய மார்க்கம் தோன்றுவதற்கு முன்பிருந்த அரேபிய நாகரீகம்:

அரேபியாவில் இஸ்லாம் தோன்றுவதற்கு முன்பு - அரேபியர்கள் பெண்களை கீழத்தரமாக மதித்தார்கள். பெண்குழந்தைகள் பிறந்தால் அவைகளை உயிரோடு மண்ணில் புதைத்தார்கள்.

2. இஸ்லாம் பெண்களுக்கு சமூகத்தில் சம உரிமையும் அந்தஸ்தும் வழங்கியது.. அவர்கள் சமுதாயத்தில் தங்களுக்குரிய கௌரவத்தோடு வாழ்வதை வலியுறுத்தியது.

ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன்பு இஸ்லாம் பெண்களுக்கு சம உரிமையும் அந்தஸ்தும் வழங்கியது. சமுதாயத்தில் பெண்கள் தங்களுக்குரிய கௌரவத்தோடு வாழ்வதை இஸ்லாம் வலியுறுத்தியது.

ஆண்களுக்குரிய "ஹிஜாப்"

வழக்கமாக இஸ்லாத்தில் பெண்களுக்கு மாத்திரம்தான் "ஹிஜாப்" முறை உள்ளதாக பொதுமக்கள் வாதிடுவார்கள். ஆனால் அருள்மறை குர்ஆனில் அல்லாஹ்; பெண்களுக்கான "ஹிஜாப்" பற்றி அறிவிப்பதற்கு முன்பாக ஆண்களுக்கான "ஹிஜாப்" பற்றித்தான் முதலில் அறிவிக்கிறான்.

அருள்மறை குர்ஆனின் 24வது அத்தியாயம் ஸ{ரத்துன் நூரின் முப்பதாவது வசனத்தில் "(நபியே!) விசுவாசம்கொண்ட ஆண்களுக்கு நீர் கூறுவீராக: அவர்கள் தங்கள் பார்வைகளை தாழ்த்திக் கொள்ள வேண்டும்: தங்கள் வெட்கத் தலங்களை பேணிப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்: அது அவர்களுக்கு மிக்க பரிசுத்தமானதாகும். நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவற்றை நன்கு தெரிந்தவன்." என்று அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.

ஒரு மனிதன் ஒரு பெண்ணை பார்த்தவுடன் அவனது மனதில் - வெட்கமற்ற அல்லது நாணமற்ற எண்ணம் தோன்றுமேயானால் - அந்த மனிதன் தனது பார்வையை தாழ்த்திக் கொள்ள வேண்டும் என்று அருள்மறை குர்ஆன் கட்டளையிடுகின்றது.

பெண்களுக்குரிய "ஹிஜாப்"

அருள்மறை குர்ஆனின் 24வது அத்தியாயம் ஸ{ரத்துன் நூரின் முப்பத்து ஒன்றாவது வசனத்தில் "(நபியே!) இன்னும் விசுவாசம்கொண்ட பெண்களுக்கு நீர் கூறுவீராக: அவர்கள் தங்கள் பார்வைகளை தாழ்த்திக் கொள்ள வேண்டும்: தங்கள் வெட்கத் தலங்களை பேணிப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்: தங்கள் அழகலங்காரத்தை அதனின்று (சாதாரணமாக வெளியில்) தெரியக் கூடியதைத்தவிர (வேறு எதையும்) வெளிக் காட்டலாகாது: இன்னும் தங்கள் முன்றானைகளால் அவர்கள் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும்.: மேலும் (விசுவாசம்கொண்ட பெண்கள்) தம் கணவர்கள் தம் தந்தையர்கள் அல்லது தம் கணவர்களின் தந்தையர்கள் அல்லது தம் புதல்வர்கள்?????.ஆகிய இவர்களைத் தவிர(வேறு அண்களுக்குத் ) தங்களுடைய அழகலங்காரத்தை வெளிப்படுத்தக் கூடாது." என்று அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.

ஹிஜாப் அணிவதற்கான ஆறு வரைமுறைகளை இஸ்லாம் வலியுறுத்துகிறது.

1. ஹிஜாப் அணிவதற்கான அளவுகோல்கள்:

நீங்கள் அணியக் கூடிய ஆடை உடல் முழுவதையும் மறைக்கக் கூடியதாக இருக்க வேண்டும் என்பதே இஸ்லாமிய ஆடை அணிவதற்கான முதல் அளவுகோல். இந்த அளவுகோல் ஆண்களுக்கும் - பெண்களுக்கும் வித்தியாசப்படும்.

ஆண்கள் தொப்புள் முதல் கரண்டைவரை மறைக்கக் கூடிய ஆடைகளை அணிய வேண்டும். பெண்கள் சாதாரணமாக வெளியில் தெரியக்கூடிய பாகங்களான முகம் - கரண்டை வரை உள்ள கைகள் ஆகியவைத் தவிர தங்கள் உடல் முழுவதும் மறைக்கக் கூடிய ஆடைகளை அணிய வேண்டும். அவர்கள் விரும்பினால் மேற்படி வெளியில் தெரியக் கூடிய இந்த பாகங்களையும் மறைத்துக் கொள்ளலாம்.

இஸ்லாமிய ஆடையில் எஞ்சிய ஐந்து அளவுகோல்களும் - ஆண்களுக்கும் - பெண்களுக்கும் சமமானவையே.

2. அணியக் கூடிய ஆடை உடல் பரிணாமத்தை வெளிக்காட்டாத அளவுக்கு தொய்வாக இருக்க வேண்டும்.

3. அணியக் கூடிய ஆடை உற்றுப் பார்த்தால் உடல் பாகங்கள் அனைத்தும் தெரியும்படியான மெல்லிய ஆடையாக இல்லாது - உரத்த ஆடையாக இருக்க வேண்டும்

4. அணியக் கூடிய ஆடை (பெண்கள் ஆண்களை வசீகரிக்கக் கூடியவாறும் - ஆண்கள் - பெண்களை வசீகரிக்கக் கூடியவாரும்) எதிர்தரப்பாரை கவரக்கூடிய அளவுக்கு கவர்ச்சியாக இல்லாமல் இருக்க வேண்டும்.

5. ஆண்கள் பெண்களைப் போல் ஆடை அணிவதையும் - பெண்கள் ஆண்களைப் போல் ஆடை அணிவதையும் இஸ்லாம் தடை செய்துள்ளது.

6. அணியக் கூடிய ஆடை இறை நிராகரிப்பாளர்கள் அணியக் கூடிய ஆடையைப் போன்று இருக்கக் கூடாது. உதாரணத்திற்கு இறை நிராகரிப்பவர்கள் உடுத்துகின்ற காவி நிறம் - கருப்பு நிறம் - போன்ற ஆடைகள் அணிவதை இஸ்லாம் தடை செய்துள்ளது.

3. இஸ்லாமிய ஆடை மனிதர்களின் நடத்தையையும் - பழக்கவழக்கங்களையும் உள்ளடக்கியது.

மேற்கூறிய ஆறு நெறிமுறைகள் தவிர மனிதனின் நன்னடத்தை அவனது பழக்கவழக்கம் அவனது மனோபாவம் மற்றும் தனிமனித எண்ணங்கள் ஆகியவையும் இஸ்லாமிய ஆடை முறையில் உள்ளடங்கும்.

ஒரு மனிதர் ஆடைகளில் மாத்திரம் இஸ்லாமிய நெறிமுறைகளை கடைப்பிடிப்பாரேயானல் - இஸ்லாமிய ஆடையின் ஒரு பகுதியை மாத்திரம் பின்பற்றுவது போன்றதாகும். ஆடைகளிலும் இஸ்லாமிய நெறிமுறைகளை கடைப்பிடிப்பதோடு - தனது கண்களிலும் - தனது உள்ளத்திலும் - தனது எண்ணத்திலும் - இஸ்லாமிய ஹிஜாப் முறையை கடைபிடிக்க வேண்டும். இஸ்லாமிய ஹிஜாப் என்பது - ஒருவர் நடக்கும் விதத்திலும் - அவர் பேசும் விதத்திலும் - அவர் பழகும் விதத்திலும் பிரதிபலிக்க வேண்டும்.

ஹிஜாப் பெண்களை தொல்லைகளிலிருந்தும் பாதுகாக்கிறது:

பெண்கள் ஹிஜாப் அணிய வேண்டியதற்கான காரணத்தை அருள் மறையின் 33 வது அத்தியாயம் ஸ{ரத்துல் அஹ்ஜாப் பின் 59வது வசனம் தெளிவாக சுட்டிக் காட்டுகின்றது.

நபியே! நீர் உம் மனைவிகளுக்கும் உம் பெண் மக்களுக்கும் ஈமான் கொண்டவர்களின் பெண்களுக்கும் அவர்கள் தங்கள் தலை முன்றானைகளை தாழ்த்திக் கொள்ளுமாறு கூறுவீராக: அவர்கள் (கண்ணியமானவர்கள் என) அறியப்பட்டு நோவினை செய்யப்படாமலிருக்க இது சுலபமான வழியாகும். மேலும் அல்லாஹ் மிக மன்னிப்பவன்: மிக்க அன்புடையவன்.

பெண்கள் கண்ணியமானவர்கள் என்று அறியப்படுவதற்காகவும் - அவர்கள் தொல்லைகளிலிருந்து தவிர்ந்து கொள்ள வேண்டியும் - ஹிஜாப் அணிவது பெண்களுக்கு பரிந்துரைக்கப்பட்ருக்கிறது என அருள்மறை குர்ஆன் சுட்டிக் காட்டுகிறது.

இரட்டை சகோதரிகள் - ஓர் உதாரணம்:

இரட்டைப் பிறவியான சகோதரிகள் - இரண்டு பேரும் அழகிலும் சமமானவர்கள் கடைத்தெருவில் நடந்து போகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அதில் ஒருவர் முற்றிலும் இஸ்லாமிய முறையில் ஆடை அணிந்தவராக செல்கிறார்.

அதாவது தனது முகம் - மற்றும் தனது இரண்டு கைகள் மாத்திரம் கரண்டை வரையில் வெளியில் தெரியும்படி தனது முழு உடலையும் மறைத்து ஆடை அணிந்தவராக நடந்து செல்கிறார். மற்றவர் மேற்கத்திய கலாச்சார முறைப்படி ஒரு குட்டைப்பாவாடையோ அல்லது அரைக்காற் சட்டையோ அணிந்து செல்கிறார் என வைத்துக் கொள்ளுங்கள்.

கடைத் தெருவில் பெண்களை கேலி செய்வதற்காகவே நிற்கும் காலிகள் யாரை கேலியும் - கிண்டலும் செய்வார்கள்?. இஸ்லாமிய முறையில் ஆடை அணிந்து செல்பவரையா?. அல்லது குட்டைப்பாவாடை அல்லது அரைக்காற் சட்டை அணிந்து செல்பவரையா?. கண்டிப்பாக குட்டைப்பாவாடை அல்லது அரைக்காற் சட்டை அணிந்து செல்பவர்தான் கேலியும் கிண்டலுக்கும் உள்ளாவார்.

மேற்படி வகையான ஆடைகள் ஆண்பாலரை கேலியும் கிண்டலும் - தொல்லைகளும் செய்யவைப்பதற்கான மறைமுகமான அழைப்பேயாகும். எனவேதான் இஸ்லாமிய ஆடை முறை கண்டிப்பாக பெண்கள் தொல்லைகள் செய்யப்படுவதை தவிர்க்கிறது என்று அருள் மறை குர்ஆன் குறிப்பிடுகிறது.

7. வல்லுறவு கொள்வோருக்கு (பாலியல் பலாத்காரம்) மரண தண்டனை.

இஸ்லாமிய சட்டத்தின்படி ஒரு மனிதன் ஒரு பெண்ணோடு வல்லுறவு கொண்டதாக நிரூபிக்கப்பட்டால் - அவனுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும். மரண தண்டனை என்ற வார்த்தையை கேட்டவுடன் பலர் அதிர்ச்சியுறுகின்றனர்.

சிலர் இஸ்லாம் கருணையில்லாத - காட்டுமிராண்டித்தனமான மார்க்கம் என்றெல்லாம் விமரிசிக்க ஆரம்பித்து விடுகின்றனர். இஸ்லாம் அல்லாத சகோதரர்களை நான் ஒரு சிறிய கேள்வியை கேட்டிருக்கிறேன். தங்களுடைய மனைவியுடனோ - அல்லது தங்களது சகோதரியுடனோ அல்லது தங்களது தாயுடனோ ஒருவன் வல்லுறவு (அவ்வாறு நடக்காமல் அல்லாஹ் பாதுகாப்பானாக!) கொண்டு விட்டான் என்று வைத்துக் கொள்ளுங்கள்.

வழக்காடு மன்றத்தில் வல்லுறவு கொண்டவனுக்கு - தீர்ப்பு வழங்கக் கூடிய நீதிபதியாக தாங்கள் இருக்கிறீர்கள் என்றும் வைத்துக் கொள்ளுங்கள். தாங்கள் வல்லுறவு கொண்டவனுக்கு என்ன தண்டணை வழங்குவீர்கள்?. நான் கேள்வி கேட்ட கேள்விக்கு இஸ்லாம் அல்லாத சகோதரர்கள் எல்லோருமே அளித்த பதில் என்னவென்றால் வல்லுறவு கொண்டவனுக்கு மரண தண்டனையேத் தருவோம் என்பதுதான்.

அதில் இன்னும் சிலர் - வல்லுறவு கொண்டவன் மரணிக்கும்வரை சித்ரவதை செய்து கொல்வோம் என்றும் சொன்னார்கள்.அவர்களிடம் நான் கேட்டதெல்லாம் - யாராவது ஒருவன் உங்களது உறவுகளோடு - வல்லுறவு கொண்டு விட்டால் - மரண தண்டனை கொடுக்க விரும்பும் நீங்கள் - வேறு யாரோ ஒருவரின் மனைவியோ -சகோதரியோ - அல்லது தாயோ வல்லறவு கொள்ளப்பட்டு - வல்லுறவு கொண்டவனுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டால் மாத்திரம் ஏன் அதனை காட்டுமிராண்டித்தனம் எனகிறீர்கள். ஏன் இந்த இரட்டை நிலைப்பாடு?.

8.மேற்கத்திய சமூகம் பெண்ணடிமைத்தனத்தை ஒழித்து விட்டதாக தவறான கருத்தை கொண்டுள்ளது.

மேற்கத்திய நாடுகள் சொல்லும் பெண் விடுதலை என்பது - பெண்களின் உடலை பயன் படுத்திக்கொள்வதற்கும் - பெண்களின் ஆன்மாக்களை கொச்சைப் படுத்தவதற்கும் - பெண்களின் கௌரவத்தை இழக்கச் செய்யவும் - மேலை நாட்டினர் அணிந்திருக்கும் மாறுவேடமே தவிர வேறில்லை.

மேற்கத்திய உலகம் - சமூகத்தில் பெண்களின் நிலையை உயர்த்திவிட்டதாக கூறிக்கொள்கிறார்கள். உண்மையில் பெண்களின் உயர்வான நிலை என்பது - பெண்களை போகப்பொருளாக பயன்படுத்திக் கொள்ளவும் - அவர்களை சமூகத்தின் காட்சிப்பொருளாக மாற்றுவதையுமே - பெண்விடுதலை என்கிறார்கள். "கலை" மற்றும் "கலாச்சாரம்" என்கிற பெயரில் வண்ணத்திரைகளில் வியாபாரிகள் தங்களின் பொருட்களை விற்பதற்கு பெண்களை ஒரு கருவியாக பயன்படுத்திக் கொள்வதைத்தான் பெண் விடுதலை என்கிறார்கள்.

9. அமெரிக்காவில்தான் உலகத்திலேயே அதிக அளவிலான வல்லுறவு குற்றங்கள் நிகழ்கின்றன.

உலகில் உள்ள நாடுகளில் அமெரிக்காதான் முற்றிலும் நாகரீகமடைந்த நாடாக கருதப்படுகிறது. அதே அமெரிக்காவில்தான் உலகத்திலேயே அதிக அளவிலான வல்லுறவு குற்றங்கள் நிகழ்கின்றன.

1990 ஆம் ஆண்டில் - அமெரிக்காவில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 1756 வல்லுறவு குற்றங்கள் நிகழ்ந்ததாக அந்த நாட்டின் உளவுத்துறையான எஃப். பி. ஐ. யின் அறிக்கை சொல்கிறது. பின்னர் சராசரியாக நாள் ஒன்றுக்கு 1900 வல்லுறவு குற்றங்கள் நிகழ்ந்தாக மற்றொரு அறிக்கை சொல்கிறது. குற்றம் நிகழ்ந்த ஆண்டு குறிப்பிடப் படவில்லை. அந்த ஆண்டு - 1992 அல்லது 1993 ஆக இருக்கலாம். பிறகு வந்த ஆண்டுகளில் அமெரிக்கர்கள் இன்னும் "தீவிரமாக" வல்லுறவு குற்றங்களில் ஈடுபட்டிருக்கலாம்.

அமெரிக்காவில் இஸ்லாமிய "ஹிஜாப்" முறை நடைமுறைபடுத்தப்பட்டிருப்பதாக கற்பனை செய்து பாருங்கள். ஒரு ஆண் ஒரு பெண்ணை பார்க்கும் பொழுது அவனது எண்ணத்தில் நாணமற்ற அல்லது வெட்கமில்லாத எண்ணம் தோன்றுமாயின் - அவர் தனது பார்வையை தாழ்த்திக் கொண்டிருப்பார்.

அமெரிக்காவின் ஒவ்வொரு பெண்ணும் முகம் மற்றும் தனது கைகளின் கரண்டை வரை மட்டும் தெரியும்படி - மற்றுமுள்ள உடலின் அனைத்து பாகங்களும் மறைக்கப்பட்டிருக்கும் இஸ்லாமிய ஆடை முறையை பின்பற்றி இருப்பார்கள். இதற்கு பிறகும் ஒரு மனிதன் வல்லுறவு குற்றத்தில் ஈடுபடுவான் எனில் - அவனுக்கு மரண தண்டனை என்ற நிலை பின்பற்ற பட்டிருக்கும்.

மேற்கண்டவாறு இஸ்லாமிய ஆடை முறை அமெரிக்காவில் நடைமுறை படுத்தப்பட்டால் - அமெரிக்காவில் வல்லுறவு குற்றங்கள் அதிகரிக்குமா?. அல்லது முன்னர் இருந்தது போன்ற அதே நிலையில் இருக்குமா?. அல்லது குறையுமா?.

10. இஸ்லாமிய சட்டதிட்டங்கள் நடைமுறை படுத்தப்பட்டால் - வல்லுறவு குற்றம் கண்டிப்பாக குறையும்.

இஸ்லாமிய சட்டதிட்டங்கள் நடைமுறை படுத்தப்பட்டால் - தூய்மையான சமுதாயம் அமைவதை எவராலும் தவிர்க்க முடியாது. அமெரிக்காவாக இருக்கட்டும் - ஐரோப்பாவாக இருக்கட்டும் - அல்லது உலகில் எந்த நாடாக இருந்தாலும் எங்கெல்லாம் இஸ்லாமிய சட்டத் திட்டங்கள் நடைமுறை படுத்தப்படுகிறதோ - அங்குள்ள மக்கள் நிம்மதியாக வாழ்வார்கள். எனவே இஸ்லாமிய ஆடை முறை பெண்களை இழிவுபடுத்துவதில்லை. மாறாக பெண்களின் மானத்தையும் - கற்பையும் காப்பாற்றி அவர்களை சமூகத்தில் அந்தஸ்து உள்ளவர்களாக மாற்றுகிறது.

பலதார மணம்

இஸ்லாத்தில் ஆண்கள் மட்டும் பலதார மணம் செய்து கொள்ள அனுமதிக்கப் பட்டிருப்பது ஏன்?.

பதில்:


1. பலதார திருமணத்திற்கான விளக்கம்:

பலதார மணம் என்றால் ஒரு ஆணோ அல்லது பெண்ணோ ஒன்றுக்கு மேற்பட்ட ஜோடிகளை கொண்டிருப்பது। பலதார மணம் என்பது இரண்டு வகைப்படும். முதலாவது வகை ஒரு ஆண் ஒன்றுக்கு மேற்ப்பட்ட பெண்களை மணந்து கொள்வது. இதனை ஆங்கிலத்தில் பாலிகமி (POLYGAMY) என்பார்கள்.

இரண்டாவது வகை ஒரு பெண் ஒன்றுக்கு மேற்ப்பட்ட ஆண்களை மணந்து கொள்வது. இதனை ஆங்கிலத்தில் பாலியாண்டரி (POLYANDRY) என்பார்கள். முதலாவது வகை - அதாவது ஆண்கள் ஒன்றுக்கு மேற்ப்பட்ட பெண்களை திருமணம் செய்து கொள்வது - இஸ்லாத்தில் சில நிபந்தனைகளுடன் அனுமதிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இரண்டாவது வகை - அதாவது பெண்கள் ஒன்றுக்கு மேற்ப்பட்ட ஆண்களை திருமணம் செய்து கொள்வது - முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.



2. உலகில் உள்ள வேதப் புத்தகங்களில் "ஒருவரை மாத்திரம் திருமணம் செய்து கொள்ளுங்கள்" என்று வலியுறுத்துவது குர்ஆன் மாத்திரம்தான்.

இன்று உலகில் உள்ள வேதப் புத்தகங்களில் "ஒருவரை மாத்திரம் திருமணம் செய்து கொள்ளுங்கள்" என்று வலியுறுத்துவது குர்ஆன் மாத்திரம்தான். மற்ற எந்த வேதப் புத்தகமும் ஆண்கள் ஒன்றுக்கு மேற்பட்டு திருமணம் செய்யக்கூடாது என்று வலியுறுத்தவதில்லை.

உலகில் இன்றைக்கு காணப்படும் - இந்துக்களின் வேதங்களான - இராமயணமோ - மஹாபாரதமோ - பகவத் கீதையோ - அல்லது கிறிஸ்துவர்களின் வேதமான பைபிளோ - அல்லது யூத மதத்தின் சட்ட நூலான "தல்முதிக்" (TALMUDIC) கிலோ ஆண்கள் ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் செய்து கொள்ள தடை பற்றிய அறிவிப்பு ஏதுமில்லை.

மாறாக மேற்குறிப்பிடப்பட்டுள்ள வேதங்களின்படி ஆண்கள் எத்தனை பெண்களை வேண்டுமெனிலும் திருமணம் செய்து கொள்ளலாம். ஆனால் பிற்காலத்தில் வந்த இந்து சாமியார்களும் - கிறிஸ்துவ தேவாலயங்களும் - ய+தர்களும்தான் - ஆண்கள் ஒரு பெண்ணைத்தான் திருமணம்தான் செய்து கொள்ள வேண்டும் என கட்டளையிட்டு - பலதார மணத்திற்கு தடை விதித்தனர்.

இந்து வேதங்களில் குறிப்பிடப்படுபவர்களான தஸரதன் - கிருஷ்ணன் போன்றோர் - பல மனைவிகளை கொண்டிருந்ததாக - இந்து வேதப்புத்தகங்களே சாட்சியம் அளிக்கின்றது. ராமரின் தகப்பனார் தஸரதன் ஒன்றுக்கு மேற்பட்;ட மனைவிகளை கொண்டிருந்தார். கிருஷ்ணரும் பல மனைவிகளை கொண்டிருந்தார்.

பைபிளில் ஆண்கள் ஒரு பெண்ணைத்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற தடை இல்லாத காரணத்தால் ஆரம்ப காலங்களில் - கிறிஸ்துவ ஆண்கள் அவர்கள் விரும்பியபடி எத்தனை பெண்களை வேண்டுமானாலும் திருமணம் செய்து கொண்டார்கள்.

ஆனால் கடந்த சில நூறாண்டுகளுக்கு முன்புதான் கிறிஸ்துவ ஆண்கள் ஒரு பெண்ணைத்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என கிறிஸ்துவ தேவாலயங்கள் தடை விதித்தன.

யூத மதத்தில் ஆண்கள் பல பெண்களை திருமணம் செய்து கொள்வது அனுமதிக்கப் பட்டிருந்தது ஆப்ரகாமிற்கு மூன்று மனைவிகள் இருந்ததாகவும் சாலமனுக்கு நூற்றுக் கணக்கான மனைவிகள் இருந்ததாகவும் யூத மதத்தின் சட்ட நூலான "தல்முதிக்" (TALMUDIC) குறிப்பி;டுகின்றது.

கி.பி. 960 ஆம் ஆண்டில் தோன்றி 1030 ல் மரணித்த ரப்பி கெர்ஸான் பென் யகூதா (RABBI GERSHON BEN YEHUDAH) என்ற பெயருடைய யூதர் பலதார திருமணத்திற்கு எதிராக ஒரு சட்டம் இடும்வரை யூத ஆண்கள் மத்தியில் பல பெண்களை திருமணம் செய்து கொள்ளும் பழக்கம் தொடர்ந்தது. 1950 ஆம் ஆண்டின் இறுதியில் இஸரேலில் உள்ள யூதத் தலைமையகம் ஆண்கள் பல பெண்களை மணப்பதை தடை செய்து சட்டம் இடும் வரை இஸ்லாமிய நாடுகளில் வாழ்ந்து வரும் யூத ஆண்களிடமும் பல பெண்களை திருமணம் செய்து கொள்ளும் நிலை தொடர்ந்தது.

1. பல தார மணம் செய்து கொள்வதில் இஸ்லாமியர்களைவிட இந்துக்களே முன்னனியில் உள்ளனர்:

இஸ்லாத்தில் பெண்களின் நிலை பற்றி ஆராய்வதற்காக அமைக்கப்பட்ட குழு (COMMITTEE OF THE STATUS OF WOMAN IN ISLAM)) 1975 ஆம் ஆண்டு வெளியிட்ட அறிக்கையின் 66 மற்றும் 67 ஆம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள புள்ளி விபரக் கணக்கின்படி 1951ஆம் ஆண்டுக்கும் - 1961 ஆண்டுக்கும் இடைப்பட்ட 10 ஆண்டுகளில் இந்துக்களில் 5.06 சதவீத ஆண்கள் ஒன்றுக்கும் மேற்ப்பட்ட பெண்களை திருமணம் செய்து கொண்டிருந்தனர்.

ஆனால் 4.31 சதவீத இஸ்லாமிய ஆண்கள் மாத்திரமே ஒன்றுக்கும் மேற்ப்பட்ட பெண்களை திருமணம் செய்து கொண்டிருந்தனர். இந்திய அரசியலமைப்புச் சட்டபடி இஸ்லாமிய ஆண்கள் மாத்திரம்தான் ஒன்றுக்கு மேற்ப்பட்ட பெண்களை திருமணம் செய்து கொள்ள முடியும். இந்துக்கள் ஒன்றுக்கும் மேற்ப்பட்ட பெண்களை திருமணம் செய்து கொள்வது இந்திய அரசியலமைப்புச் சட்டபடி சட்ட விரோதமாகும்.

இவ்வாறு இந்துக்கள் ஒன்றுக்கு மேற்ப்பட்ட பெண்களை திருமணம் செய்து கொள்வது சட்ட விரோதமாக இருந்தாலும் - இஸ்லாமியர்களோடு ஒப்பிடும்போது இந்துக்களே ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை திருமணம் செய்து கொள்வதில் முன்னனி வகிக்கின்றனர். முந்தைய காலங்களில் இந்துக்களும் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை திருமணம் செய்து கொள்ள தடையேதும் இல்லாமல்தான் இருந்தது.

1954 ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட இந்துத் திருமணச் சட்டத்தில்தான் இந்து மதத்தில் ஆண்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட பெண்களை திருமணம் செய்து கொள்வது தடை செய்யப் பட்டது. இன்றைக்கும் கூட ஒரு இந்து ஆண் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்ணை திருமணம் செய்யக்கூடாது என்று தடுப்பது இந்திய அரசியலமைப்புச் சட்டமேத் தவிர. இந்து வேதங்கள் ஆண்கள் பலதார மணம் செய்து கொள்வதை தடை செய்யவில்லை.

இப்போது நாம் இஸ்லாம் ஏன் - ஒருஆண் பல பெண்களை திருமணம் செய்து கொள்ள அனுமதித்துள்ளது என்பது பற்றி சற்று விரிவாக ஆராய்வோம்.

2. அல்-குர்ஆன் ஒரு ஆண் பல பெண்களை திருமணம் செய்து கொள்வதை சில நிபந்தனைகளுடன் - அனுமதியளிக்கிறது.

நான் முன்பே குறிப்பிட்டது போல் உலகில் உள்ள வேதப் புத்தகங்களில் "ஒருவரை மாத்திரம் திருமணம் செய்து கொள்ளுங்கள்" என்று வலியுறுத்துவது குர்ஆன் மாத்திரம்தான்.

அல்-குர்ஆனின் அத்தியாயம் 4 சூரத்துல் நிஷாவின் மூன்றாவது வசனம் "உங்களுக்குப் பிடித்தமான பெண்களை - இரண்டிரண்டாகவோ - மும்மூன்றாகவோ - நன்னான்காவோ - மணந்து கொள்ளுங்கள். ஆனால் நீங்கள் (இவர்களிடையே) நியாயமாக நடக்க முடியாது என்று பயந்தால் ஒரு பெண்ணையே (மணந்து கொள்ளுங்கள்)." என்று சுட்டிக் காட்டுகின்றது.

குர்ஆன் வருவதற்கு முந்தைய கால கட்டங்களில் இஸ்லாத்தில் பலதார மணத்திற்கு தடையில்லாமல் இருந்தது. ஆண்கள் எத்தனை பெண்களை வேண்டுமானாலும் திருமணம் செய்து கொள்ளலாம் என்று அனுமதிக்கப்பட்டு இருந்தது.

ஆண்களில் பெரும்பாலோர் பல பெண்களை திருமணம் செய்து கொள்பவர்களாக இருந்தனர். ஆனால் அல்-குர்ஆன் இறக்கியருளப்பட்ட பிறகு - இஸ்லாத்தில் ஓர் ஆண் நான்கு பெண்கள் வரை திருமணம் செய்து கொள்ளலாம் என அனுமதியளித்தது. ஒரு ஆண் கூடுதலாக நான்கு பெண்களை வரை திருமணம் செய்து கொள்ளலாம் - அதுவும் அப்பெண்களிடையே சமமான நீதி செலுத்தப்பட வேண்டும் என்ற நிபந்தனையுடன் - பலதார மணத்திற்கு வரைமுறை இட்டது.

மேலும் அல்-குர்ஆனின் அத்தியாயம் 04 ஸ{ரத்துல் நிஷாவின் 129ஆம் வசனத்தில் - "(இறை விசுவாசிகளே!) நீங்கள் எவ்வளவுதான் விரும்பினாலும் மனைவியரிடையே நீங்கள் நீதம் செலுத்த சாத்தியமாகாது" என்று குறிப்பிடுகின்றது. மேற்படி வசனத்திலிருந்து இஸ்லாத்தில் பலதார மணம் என்பது ஒரு விதிவிலக்கேத் தவிர - கட்டாயமில்லை என்பதை தெரிந்து கொள்ளலாம்.

இஸ்லாத்தின் கொள்கைகளில் - செய்ய வேண்டியவை மற்றும் செய்யக் கூடாதவைகளை ஐந்து வகையாக பட்டியலிடுகிறது. அவையாவன:

1. "ஃபர்லு"- கட்டாயக் கடமைகள்
2. "முஸ்தகப் " - பரிந்துரைக்கப்பட்டவை அல்லது தூண்டப்பட்டவை
3. "முபாஹ் "- அனுமதிக்கப்பட்டவைகள்
4. "மக்ரூ " - அனுமதிக்கப் படவும் இல்லை - அதே சமயத்தில் தடுக்கப்படவுமில்லை.
5. "ஹராம் "- கண்டிப்பாக தடை செய்யப் பட்டவை.


மேற்படி ஒரு ஆண் ஒன்றுக்கு மேற்பட்ட (கூடுதலாக நான்கு வரை) திருமணம் செய்து கொள்வது இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்ட ஒன்றேத் தவிர கட்டாயக் கடமை அல்ல.

ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை திருமணம் செய்து கொண்ட ஒரு இஸ்லாமியர் - ஒரே ஒரு பெண்ணை மட்டும் திருமணம் செய்து கொண்ட மற்றொரு இஸ்லாமியரைவிட எந்த விதத்திலும் உயர்ந்தவர் இல்லை.

3. சராசரியாக பெண்ணினத்தின் வாழ்க்கைக் கால அளவு - ஆணிணத்தின் வாழ்க்கைக் கால அளவைவிட அதிகமானது.

இயற்கையிலேயே ஆணிணமும் - பெண்ணிணமும் சரிசமமான விகிதத்தில்தான் பிறக்கின்றனர். நோய் எதிர்ப்பு சக்தியில் ஆணிணத்தை மிஞ்சியதாக பெண்ணிணம் அமைந்துள்ளது. நோய்கிருமிகளை எதிர்கொள்வதில் பெண் குழந்தைகள் - ஆண் குழந்தைகளைவிட அதிக சக்தி வாய்ந்தவைகளாக உள்ளன. இந்த காரணத்தினால் குழந்தைப் பருவத்தில் பெண் குழந்தைகள் மரணிப்பதைவிட ஆண் குழந்தைகள்தான் அதிகமாக மரணிக்கின்றன.

யுத்தங்களில் பெண்களைவிட ஆண்களே அதிகமாக கொல்லப்படுகிறார்கள். விபத்துக்களிலும் - நோய்வாய்ப்பட்டும் இறப்பவர்களில் பெண்களைவிட ஆண்களின் விகிதாச்சாரமே அதிகம். ஆண்களின் வாழ்க்கைக் காலம் - பெண்களின் வாழ்க்கை காலத்தைவிட குறைவாகவே இருப்பதால் - எந்த குறிப்பிட்ட காலகட்டத்திலும் - மனைவியை இழந்த கணவர்களை விட கணவனை இழந்த மனைவியரே இவ்வுலகில் அதிகம் காணப்படுகின்றனர்.


4. கருவிலேயே பெண்குழந்தை என்று கண்டறியப்பட்டால் உடனடியாக கலைக்கப்படுவதாலும் - பெண் சிசுவதைகளாலும் - இந்திய மக்கள் தொகையில்; பெண்களின் எண்ணிக்கையை விட ஆண்களே எண்ணிக்கையே அதிகம். மேற்படி நிகழ்வு இல்லையெனில் இந்தியாவிலும் ஆண்களைவிட பெண்களே அதிக எண்ணிக்கையில் இருப்பர்.


மக்கள் தொகையில்; பெண்களின் எண்ணிக்கையை விட ஆண்களின் எண்ணிக்கை அதிகம் கொண்டுள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று. பெண்கருக்கள் என்று கண்டறியப்பட்டால் உடனடியாக கலைக்கப்படுவதும் பிறந்த குழந்தை பெண் என்று தெரிந்தால் சிசுவதை செய்து கொல்லப்படுவதுமே இதற்கு காரணம் ஆகும்.

இந்தியாவில்; மாத்திரம் ஒரு வருடத்திற்கு பத்து லட்சத்துக்கும் மேற்பட்ட கருக்கள் - பெண் என்று அடையாளம் காணப்பட்டப் பிறகு கலைக்கப்படுகின்றன. அல்லது அழிக்கப் படுகின்றன. இந்த கொடிய செயல் நிறுத்தப்பட்டால் இந்தியாவிலும் - ஆண்களின் எண்ணிக்கையைவிட - பெண்களின் எண்ணிக்கையே மேலோங்கி இருக்கும்.

5. உலக மக்கள் தொகையில் ஆண்களின் எண்ணிக்கையைவிட பெண்களின் எண்ணிக்கையே மேலோங்கி நிற்கிறது.

அமெரிக்காவில் உள்ள மக்கள் தொகையில் உள்ள பெண்களின் எண்ணிக்கை ஆண்களின் எண்ணிக்கையை விட 78 லட்சம் அதிகமாகும். அமெரிக்க தலைநகர் நிய+யார்க்கில் மாத்திரம் - பெண்களின் எண்ணிக்கை ஆண்களின் எண்ணிக்கையை விட 10 லட்சம் அதிகமாகும். அமெரிக்க தலைநகர் நிய+யார்க்கின் மொத்த மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பாகம் ஓரிணச் சேர்க்கையில் நாட்டமுள்ள ஆண்கள்.

அமெரிக்காவின் மொத்த மக்கள் தொகையில் மேற்சொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை மாத்திரம் இரண்டரை கோடியாகும். மேற்படி நபர்கள் திருமணம் செய்து கொள்ள மாட்டார்கள் என்பது நாம் அறிந்த செய்தி. அதே போல் பிரிட்டனில் பெண்களின் எண்ணிக்கை ஆண்களின் எண்ணிக்கையை விட 40 லட்சம் அதிகமாகும்.

ஜெர்மனியில் பெண்களின் எண்ணிக்கை ஆண்களின் எண்ணிக்கையை விட 50 லட்சம் அதிகமாகும்.

ரஷ்யாவில் பெண்களின் எண்ணிக்கை ஆண்களின் எண்ணிக்கையை விட 90 லட்சம் அதிகமாகும். உலகில் உள்ள மொத்த மக்கள் தொகையில் எத்தனை கோடி பெண்கள் ஆண்களைவிட அதிகம் என்பதை அறிந்தவன் எல்லாம் வல்ல அல்லாஹ் ஒருவனே.

6. ஒரு ஆண் ஒரு பெண்ணைத்தான் திருமணம் முடிக்க வேண்டும் என்று வரையறை ஏற்படுத்துவது - நடைமுறைக்கு சாத்தியக் கூறானது அல்ல.

ஒரு ஆண் ஒரு பெண்ணைத்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற நிலை இருக்குமானால் அமெரிக்காவில் மாத்திரம் 3 கோடி பெண்கள் திருமணம் முடித்துக்கொள்ள ஆண்கள் இல்லாத நிலைதான் ஏற்படும். (அமெரிக்காவில் இரண்டரை கோடி ஆண்கள் ஓரினச் சேர்க்கையாளர்களாக இருக்கிறார்கள் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்).

அதுபோல - பிரிட்டனில் 40 லட்சம் பெண்கள் திருமணம் முடித்துக்கொள்ள ஆண்கள் இல்லாத நிலையும் ஜெர்மெனியில் 50 லட்சம் பெண்கள் திருமணம் முடித்துக்கொள்ள ஆண்கள் இல்லாத நிலையும் ரஷ்யாவில் 90 லட்சம் பெண்கள் திருமணம் முடித்துக்கொள்ள ஆண்கள் இல்லாத நிலையும்தான் ஏற்படும்.

உதாரணத்திற்கு திருமணம் முடிக்காத என்னுடைய சகோதரி அல்லது தங்களுடைய சகோதரி திருமணம் முடிக்க ஆண்கள் இல்லாத நிலையில் உள்ள அமெரிக்காவில் வசித்து வருவதாக வைத்துக் கொள்வோம். அவருக்கு இரண்டு வாய்ப்புகளே உள்ளன. ஒன்று ஏற்கெனவே திருமணம் ஆன ஒருவரை கணவராக ஏற்றுக் கொள்வது.

அல்லது அவர் அமெரிக்காவின் "பொதுச் சொத்தாக மாறுவது". இவை இண்டையும் தவிர வேறு வாய்ப்பே இல்லாத நிலையில் அமெரிக்காவின் "பொதுச் சொத்தாக" மாறுவதைவிட ஏற்கெனவே திருமணம் ஆன ஒருவரை கணவராக ஏற்றுக் கொள்வது என்கிற முதல் வாய்ப்பைத்தான் சிறந்த புத்திசாலி தேர்ந்தெடுப்பார்.

மேற்கத்திய கலாச்சாரத்தில் ஒரு ஆண் பல பெண்களுடன் தொடர்பு கொண்டிருப்பது சர்வ சாதாரணம். இது போன்ற நிலைகளில் பெண்ணுக்கு பாதுகாப்பற்ற நிலையும் - சமூகத்திற்கு பயந்து வாழக் கூடிய நிலையும் உண்டாகிறது. அதே சமூகத்தில் ஒரு பெண் - ஒரு ஆணுக்கு - இரண்டாவது மனைவியாக இருப்பதை முழு மனதுடன் சமுதாயம் ஏற்றுக் கொள்வதுடன் - அந்த பெண்ணுக்கு மரியாதையான கௌரவமான பாதுகாப்பான வாழ்க்கையும் அமைகிறது.

ஏற்கெனவே திருமணம் ஆன ஒருவரை கணவராக ஏற்றுக் கொள்வது. அல்லது "பொதுச் சொத்தாக மாறுவது" என இவை இண்டையும் தவிர வேறு வாய்ப்பே இல்லாத நிலையில் உள்ள பெண்ணுக்கு - இஸ்லாமிய மார்க்கம் முதலாவது நிலையை ஏற்றுக் கொள்ளச் சொல்லி - இரண்டாவது நிலையை முற்றிலும் மறுக்கச் சொல்கிறது.

இஸ்லாத்தில் ஆண்கள் கூடுதலாக நான்கு பெண்கள்வரை திருமணம் செய்து கொள்வதற்கு இன்னும் ஏராளமான காரணங்கள் இருந்தாலும் - முக்கியமாக பெண்களின் மானத்தை பாதுகாக்கவே ஆண்கள் பலதார மணம் செய்து கொள்வது சில நிபந்தனைகளுடன் அனுமதிக்கப் பட்டுள்ளது.

ஆண்கள் பலதார மணம் செய்ய அனுமதிக்கும் இஸ்லாம் பெண்கள் பலதார மணம் செய்து கொள்ள தடை செய்வது ஏன்?.

பதில்:இஸ்லாமியர்கள் உட்பட - ஏராளமான பேர்கள் - ஆண்கள் பலதார மணம் செய்ய அனுமதிக்கும் இஸ்லாம் பெண்கள் பலதார மணம் செய்து கொள்ள தடை செய்திருப்பது ஏன்?. என்கிற தர்க்க ரீதியான கேள்வியை என்னிடம் கேட்கிறார்கள்.

இஸ்லாம் அடிப்படையிலேயே நீதியையும் - சமத்துவத்தையும் நிலை நாட்டும் மார்க்கம் என்பதை நான் உங்களிடம் உறுதியாக சொல்ல விரும்புகிறேன். ஆணையும் - பெண்ணையும் சமமாகவே படைத்த அல்லாஹ் ஆணுக்கும் - பெண்ணுக்கும் வித்தியாசமான பொறுப்புகளையும் - இயல்புகளையும் கொடுத்தான். உடல் ரீதியாகவும் - உள ரீதியாகவும் ஆண்களும் - பெண்களும் வித்தியாசமானவர்கள்.

சமுதாயத்தில் ஆண்களுக்கும் - பெண்களுக்கும் அவரவருக்குரிய வித்தியாசமான பங்குகளும் - பொறுப்புகளும் உள்ளன. இஸ்லாத்தின் பார்வையில் ஆண்களும் - பெண்களும் சமமானவர்களேத் (Equal) தவிர - ஒரே மாதிரியானவர்கள் (Identical) அல்ல.

அல்-குர்ஆனின் நான்காவது அத்தியாயம் ஸ{ரத்துல் நிஷாவின் 22வது வசனம் துவங்கி 24வது வசனம் வரை ஆண்கள் யார் யாரை திருமணம் செய்து கொள்ளலாம் - யார் யாரை திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்பதை பட்டியலிடுகிறது. யார் யாரை திருமணம் செய்து கொள்ளக்கூடாது என்ற பட்டியலில் "கணவனுள்ள பெண்களை நீங்கள் மணமுடிப்பது விலக்கப்பட்டள்ளது".(அல்-குர்ஆன் 4:24) எனக்கூறி ஆண்கள் திருமணம் ஆன பெண்களை மணமுடிப்பதை தடை செய்கிறது.

இஸ்லாம் - பெண்கள் ஒன்றுக்கு மேற்பட்ட ஆண்களை திருமணம் செய்வதை ஏன் தடை செய்கிறது - என்பதை கீழ்க்காணும் குறிப்புகள் இன்னும் விளக்கமாக நமக்கத் தெரிவிக்கின்றன.

1. ஒரு ஆண் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை திருமணம் செய்திருந்தால் - ஒவ்வொரு மனiவிக்கும் பிறக்கும் குழந்தைகள் இவருக்குத்தான் பிறந்தது என்பதை அடையாளம் காண்பது எளிது. இவர்தான் இந்தக் குழந்தையின் தந்தை என்று அடையாளம் காண்பதும் - இவர்தான் இந்த குழந்தையின் தாய் என அடையாளம் காண்பதும் மிக எளிது.

அதே சமயத்தில் ஒரு பெண் பல கணவர்களை திருமணம் செய்திருந்து அந்தத் திருமணத்தின் மூலம் பிறக்கும் - குழந்தையின் தாய் இவர்தான் என அடையாளம் கண்டு கொள்வது எளிதாக இருக்கலாம். ஆனால் குழந்தையின் தந்தை - இன்னார்தான் என அடையாளம் கண்டு கொள்வது இயலாத ஒன்று.

குழந்தைகளின் தாயும் - தந்தையும் - இன்னார்தான் என்று அடையாளம் - கண்டு கொள்ளும் விஷயத்திற்கு இஸ்லாம் மிகப்பெரிய முக்கியத்துவம் வழங்குகிறது. தனது பெற்றோர் இன்னார்தான் என்று அறியாத குழந்தைகள் - குறிப்பாக தனது தந்தை இன்னார்தான் என அறியாத குழந்தைகள் - மனோநலம் குன்றியவர்களாக மாறுகிறார்கள் என மனநல மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.

அவர்களது குழந்தைப் பருவம் மகிழ்ச்சியானதாக இருப்பதில்லை. மேற் கூறப்பட்ட காரணங்களினால்தான் விலைமாதுகளுக்குப் பிறந்த குழந்தைகளின் - குழந்தைப் பருவம் ஆரோக்கியமானதாக இருப்பதில்லை. ஒரு பெண் ஒன்றுக்கு மேற்பட்ட ஆண்களை திருமணம் செய்து கொண்டு - அதனால் பிறந்த குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் போது - ஒரே குழந்தைக்கு - இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தகப்பனாரின் - பெயர்களை சொல்லக்கூடிய நிலை உருவாகலாம்.

ஆனால் சமீபத்திய அறிவியல் முன்னேற்றத்தின் காரணமாக - மரபணுச் சோதனை செய்து - ஒரு குழந்தையின் தாய் இன்னார்தான் என்றும் - ஒரு குழந்தையின் தந்தை இன்னர்தான் என்றும் அடையாளம் கண்டு கொள்ளலாம் என்பதும் நான் அறிந்தவிஷயம். எனவே நான் எடுத்து வைத்த இந்த வாதம் கடந்த காலத்துக்குப் பொருந்துமேத் தவிர - இன்றைய கால கட்டத்திற்குப் பொருந்தாது.

2. ஆணையும் பெண்ணையும் ஒப்பிடும்போது - ஒரு ஆண் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை திருமணம் செய்து கொள்ள தகுதியான உடலமைப்பை இயற்கையிலேயே பெற்றவன் என்பதை அறியலாம்.

3. ஓரு ஆண் - பல பெண்களை திருமணம் செய்து கொண்டாலும் கணவன் என்ற முறையில் தனது கடமைகளை செய்ய உடலியல் ரீதியாக ஆணுக்கு அந்த பணி மிக எளிதானதாகும்.

பல ஆண்களை திருமணம் செய்து கொண்ட பெண்ணால் - மனைவி என்ற முறையில் தனது கடமைகளை ஒவ்வொரு கணவருக்கும் செய்து முடிப்பது கடினமானதாகும். ஓரு பெண் - மாதவிலக்காகும் கால கட்டங்களில் - மனோ ரீதியாகவும் - நடைமுறை பழக்கவழக்கங்கள் ரீதியாகவும் - ஏராளமான மாற்றங்களுக்கு உள்ளாகிறாள் என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.

4. பல கணவர்களை கொண்டிருக்கும் ஒரு பெண் - ஒரே கால கட்டத்தில் - பல ஆண்களுடன் உடல்உறவு கொள்வதால் - பாலியல் நோய்களால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகம். மேற்படி பாலியல் நோய்கள் - எந்தவித பாவமும் செய்யாத - மற்ற கணவர்களுக்கும் தொற்றிக் கொள்ளக் கூடிய வாய்ப்புகளும் மிகவும் அதிகம். மேற்படி பிரச்னை பல பெண்களை மணந்து கொள்ளும் ஒரு ஆணுக்கு ஏற்படுவதில்லை.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள குறிப்புகள் மனிதனால் எளிதாக அடையாளம் காணப்பட முடிந்தவை. ஒரு பெண் ஒன்றுக்கு மேற்ப்பட்ட ஆண்களை திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்பதை தடை செய்த அல்லாஹ்தான் மற்றுமுள்ள காரணங்களை அனைத்தையும் அறிந்தவன். எனவேதான் இஸ்லாத்தில் பெண்கள் ஒன்றுக்கு மேற்ப்பட்ட ஆண்களை திருமணம் செய்து கொள்வது தடை செய்யப்பட்டுள்ளது.

பன்றி இறைச்சிக்குத் தடை?

இஸ்லாம் பன்றி இறைச்சியை உணவாக உட்கொள்ளத் தடை செய்திருப்பது ஏன்?

பதில்:

இஸ்லாம் பன்றி இறைச்சியை உணவாக உட்கொள்ள தடை செய்திருப்பது அனைவரும் அறிந்த உண்மை. இந்தத் தடை ஏன்?. என்பது பற்றிய விபரத்தை கீழ்க்காணும் விளக்கங்கள் மூலம் தெளிவாக அறியலாம்.

பன்றி இறைச்சி உண்பது தடை செய்யப்பட்டுள்ளது பற்றி குர்ஆனின் தெளிவாக்கம்:

பன்றி இறைச்சி உண்பது தடை செய்யப்பட்டிருப்பது பற்றி அருள்மறை குர்ஆனில் குறைந்தது நான்கு அத்தியாயங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

"தானாகவே செத்ததும் இரத்தமும் பன்றியின் மாமிசமும் அல்லாஹ் அல்லாத பெயர் சொல்லப்பட்டதும் ஆகியவைகளைத்தான் உங்கள் மீது ஹராமாக ஆக்கியிருக்கிறான்." (அல்-குர்ஆன் அத்தியாயம் - 02 வசனம் 173)

மேற்படி கருத்துக்களை அருள்மறையின் அத்தியாயம் ஐந்தின் மூன்றாவது வசனத்திலும் அத்தியாயம் ஆறு - 145வது வசனத்திலும் - அத்தியாயம் பதினாறு - 115வது வசனத்திலும் காணலாம். அருள்மறையின் மேற்படி வசனங்கள் - இஸ்லாத்தில் பன்றி இறைச்சி உண்பது தடை செய்யப்பட்டிருக்கிறது என்பதற்கு ஆதாரமாக அமைந்துள்ளன.

பன்றி இறைச்சி உண்ணத் தடை என்று பைபிளும் குறிப்பிடுகின்றது.

கிறஸ்தவர்களின் வேத புத்தகமான பைபிள் குறிப்பிடும் தடைகளைப் பற்றி கிறிஸ்தவர்களுக்கு எடுத்துச் சொன்னால் அவர்களும் அறிந்து கொள்வார்கள். பன்றி இறைச்சி உண்ணத் தடை என்று பைபிளிளும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பைபிளின் அத்தியாயம் 11 - லெவிட்டிக்கஸ் (Leviticus) வசனம் 7 முதல் 8 வரையிலும் பைபிளின் அத்தியாயம் 14 - டியுட்டர்னோமி (Deuteronomy) வசனம் 8 ம் பன்றி இறைச்சி உண்ணத் தடை பற்றி அறிவிக்கின்றன.

மேலும் பைபிளின் அத்தியாயம் 65 - புக் ஆஃப் இஷையா (Book of Isaiyah) 2 முதல் 5 வரையுள்ள வசனங்களில் பன்றி இறைச்சி உண்ணத் தடை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

பன்றி இறைச்சி உண்பதால் - மனிதனுக்கு ஏராளமான நோய்கள் உண்டாகின்றன.

எந்த விஷயத்தையும் முஸ்லிம் அல்லாதவர்களும் கடவுளே இல்லை என்று மறுப்பவர்களும் காரணத்துடனும் தர்க்க ரீதியாகவும் அறிவியல் உண்மையுடனும் சொன்னால்தான் ஏற்றுக் கொள்வார்கள். பன்றி இறைச்சி உண்பதால் மனிதனுக்கு எழுபது விதமான நோய்கள் உண்டாகிறது.

பன்றி இறைச்சி உண்பதால் மனிதனின் வயிற்றில் வட்டப்புழு (RoundWorm) ஊசிப்புழு (PinWorm) கொக்கிப்புழு (HookWorm) போன்ற குடற்புழுக்கள் உண்டாகின்றன. பன்றி இறைச்சி உண்பதால் மனிதனின் வயிற்றில் நாடாப்புழு உருவாகிறது. இந்த நீளமான நாடாப்புழு மனித குடலின் அடிப்பகுதியில் சென்று தங்கிவிடுகிறது. ஆது இடும் முட்டை இரத்த நாளங்கள் வழியாக உடலின் எல்லாப் பாகங்களுக்கும் பரவுகிறது.

இந்த முட்டை மனித மூளையச் சென்றடைந்தால் மனிதன் தன் நினைவாற்றலை இழப்பான். இந்த முட்டை மனித இதயத்தைச் சென்றடைந்தால் மனிதனுக்கு மாரடைப்பு உண்டாகிறது.

இந்த முட்டை மனிதனின் கண்களைச் சென்றடைந்தால் மனிதன் கண்பார்வையை இழக்கிறான். இந்த முட்டை மனிதனின் ஈரலைச் சென்றடைந்தால் மனிதனின் ஈரல் பாதிக்கப்படுகிறது. இவ்வாறு பன்றி இறைச்சி உண்பதால் மனித வயிற்றில் உருவாகும் நாடாப்புழுவின் முட்டைகள் மனித உருப்புகள் அனைத்தையும் செயலிழக்கச் செய்யும் வல்லமை உள்ளவை.

பன்றி இறைச்சியில் திரிகூரா திச்சுராஸிஸ் (Trichura Tichurasis) என்ற பெயரையுடைய மற்றொரு ஆபத்தான குடற்புழு உள்ளது. பன்றி இறைச்சியை நன்றாக வேக வைத்துவிட்டால் இது போன்ற புழுக்கள் மரணித்து விடுகின்றன என்பது ஒரு பொதுவான அதே சமயம் தவறான கருத்து மக்களிடையே இருக்கிறது.

இது பற்றிய ஆய்வு ஒன்று அமெரிக்காவில் நடத்தப்பட்டபோது - இருபத்து நான்கு பேர் திரிகூரா திச்சுராஸிஸ் (Trichura Tichurasis) என்று குடற்புழு நோயால் தாக்கப்பட்டிருந்தார்கள். அவர்களில் இருபத்தி இரண்டு பேர் பன்றி இறைச்சியை நன்றாக வேகவைத்து சாப்பிட்டவர்கள் என்று கண்டறியப்பட்டது. சாதாரணமான வெப்பத்தில் சமைக்கப்படும் பன்றி இறைச்சியில் - குடற்புழு உண்டு என மேற்படி ஆய்விலிருந்து நாம் அறியும் செய்தி


பன்றி இறைச்சியில் கொழுப்புச் சத்து அதிகம்.


பன்றி இறைச்சியில் மாமிச சத்தைவிட கொழுப்புச் சத்தே அதிகம். பன்றி இறைச்சி உண்பதால் ஏற்படும் கொழுப்புச் சத்து மனித இரத்த நாளங்களை அடைத்து விடுவதால் - மனிதனுக்கு இரத்த அழுத்த நோயும் - மாரடைப்பும் உண்டாகின்றது. எனவே அமெரிக்கர்களில் ஐம்பது சதவீதம் பேர் இரத்த அழுத்தம் உள்ளவர்களாக இருப்பதில் ஆச்சரியம் இல்லை.

உலகில் உள்ள மிருகங்களில் எல்லாம் கேடுகெட்ட மிருகம் பன்றி.

பூமியல் உள்ள விலங்கினங்களில் எல்லாம் கேடுகெட்ட விலங்கினம் பன்றி. பன்றி சேற்றிலும் சகதியிலும் மலத்திலும் வாழக்கூடிய விலங்கினம். கடவுளின் படைப்பில் ஒரு சிறந்த சுத்திகரிக்கும் மிருகம் பன்றி. நவீன கழிப்பறை வசதி இல்லாத கிராமப்புறங்களில் மனிதர்கள் - காடுகளிலும் - வெட்டவெளியிலும்தான் மலஜலம் கழிப்பார்கள். இந்த மலத்தை சுத்தம் செய்வது பன்றிதான்.

ஆஸ்திரேலியா போன்ற மேலை நாடுகளில் பன்றிகள் மிக சுத்தமான சூழ்நிலையில் வளர்க்கப்படுகின்றன என சிலர் வாதிட முற்படலாம். எந்த மாதிரி சுத்தமான சூழ்நிலையிலும் பன்றிகள் ஒன்றாகத்தான் அடைத்து வைக்கப்படுகின்றன. எத்தனைதான் சுத்தமான சூழ்நிலையில் நீங்கள் பன்றிகளை வைத்திருந்தாலும் - பன்றி இயற்கையாகவே கேடு கெட்டவை. தன்னுடைய மலத்தையும் - பிறருடைய மலத்தையும் சுவைத்துத் தின்னும் மிருகம் பன்றி.

உலகில் உள்ள மிருகங்களில் எல்லாம் வெட்கம் கெட்ட மிருகம் பன்றி.

உலகில் உள்ள மிருகங்களில் எல்லாம் வெட்கம் கெட்ட மிருகம் பன்றிதான். தனது நண்பர்களை அழைத்து வந்து தனது துணையுடன் நண்பர்களை உடலுறவு கொள்ளச் செய்யும் மிருகம் பன்றி. அமெரிக்காவில் பெரும்பான்மையினர் பன்றி இறைச்சி உண்ணக் கூடியவர்களாக இருக்கிறார்கள். இரவு நேர பார்ட்டிகள் முடிந்த பிறகு தங்களுக்குள் "மனைவியரை மாற்றிக் கொள்ளும் பண்பாடு" (அதாவது எனது மனைவியுடன் நீ உனது மனைவியுடன் நான் என) கொண்டவர்களாக இருக்கிறார்கள். பன்றி இறைச்சி தின்பவன் பன்றியைப் போலத்தான் செயல்படுவான். இந்தியர்களான நாம் அமெரிக்கர்களை மிகவும் முன்னேறியவர்கள் எனவும் - மிகவும் பண்பாடு உடையவர்கள் எனவும் தலைக்கு மேல் வைத்து கொண்டாடுகிறோம். அவர்கள் என்ன செய்தாலும் அதனை நாமும் அப்படியே பின்பற்றுகிறோம். சமீபத்தில் மும்பையிலிருந்து பிரசுரமாகும் "ஐலேண்ட்" என்னும் மாதப்பத்திரிக்கை வெளியிட்டுள்ள கட்டுரை "மனைவியரை மாற்றிக் கொள்ளும் பண்பாடு" மும்பை வட்டாரத்தில் சர்வ சாதாரணம் என்று குறிப்பிடுகிறது.

மது அருந்த தடை

மது அருந்த இஸ்லாத்தில் தடை இருப்பது ஏன்?

பதில்:

மனிதனுக்கு நினைவு தெரிந்த நாள் முதலாய் - சமுதாயத்தின் கொள்ளைநோயாக இருந்து வருவது போதை தரும் இந்த மது பானங்கள். உலகம் முழுவதும் உள்ள மனித சமுதாயத்தின் அழிவு என்னும் பெருந்துயருக்கு காரணமாக அமைந்திருப்பது இந்த மது பானங்கள்.

இன்று மனித சமுதாயம் சந்தித்துக் கொண்டிருக்கும் ஒட்டு மொத்த பிரச்னைகளுக்கும் ஆணிவேராக அமைந்திருப்பது இந்த மது பானங்கள். உலகில் பல்கிப் பெருகி வரும் குற்றங்களுக்கு காரணமாகவும் மக்களை நடுத் தெருவுக்கு கொண்டு வருவதும் மக்களின் உளச்சோர்வுக்கு காரணியாகவும் அமைந்திருப்பது இந்த மதுபானங்களின் அழிக்கும் சக்திதான்.

அல்-குர்ஆன் மதுபானத்தை தடை செய்துள்ளது:

அருள்மறை குர்ஆனின் ஐந்தாவது அத்தியாயம் ஸ{ரத்துல் மாயிதாவின் 90வது வசனத்தின் மூலம் அல்லாஹ் மதுபானம் அருந்துவதை தடைசெய்துள்ளான்:

"விசுவாசம் கொண்டவர்களே!. மதுபானமும் சூதாட்டமும் கற்சிலைகளை வழிபடுதலும் அம்புகள் எறிந்து குறி கேட்பதும் ஷைத்தானின் அருவருக்கத்தக்க செயல்களில் உள்ளவையாகும்: ஆகவே இவற்றை நீங்கள் தவிர்த்துக் கொள்ளுங்கள் - அதனால் நீங்கள் வெற்றியடைவீர்கள்." (அல்-குர்ஆன் அத்தியாயம் 05 - வசனம் 90)


மது அருந்துவதை பைபிளும் தடை செய்கிறது:

பைபிளின் 20வது அத்தியாயம் roverbs உடைய 01வது வசனமும் 5வது அத்தியாயம் Ephesians உடைய 18வது வசனமும் மது அருந்துவது சிறந்தது அல்ல என குறிப்பிடுகின்றன.

மனித மூளையின் தடை செய்யும் மையத்தை (Inhibitory Centre) - இயங்க விடாமல் செய்கிறது மது பானங்கள்:

மனித மூளையில் தடை செய்யும் மையம் (Inhibitory Centre) என்ற ஒரு பகுதி உள்ளது. மனிதன் தான் செய்யும் செயல் தவறு என்று எண்ணும் செயல்களை செய்ய விடாமல் தடுப்பது மேற்படி தடை செய்யும் மையத்தின் பணி.

உதாரணத்திற்கு தனது பெற்றோரையோ அல்லது தனக்கு மூத்தவர்களையோ கெட்ட வார்த்தைகளால் ஏசக்கூடாது என்று ஒரு மனிதனைத் தடுப்பது தடை செய்யும் மையத்தின் வேலை. ஓரு மனிதன் தன் இயற்கைத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள விரும்பினால் - அதனை பொது இடத்தில் செய்யக் கூடாது என்று தடுப்பது தடை செய்யும் மையத்தின் வேலை.

போதையிலிருக்கும் ஒரு மனித மூளையின் தடை செய்யும் மையத்தின் பணி மது பானங்களால் தடை செய்யப்படுகிறது. எனவேதான் குடிபோதையில் இருக்கும் மனிதன் சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் தன் மனம் போன போக்கில் செயல் படுகிறான். குடிபோதையில் இருக்கும் மனிதன் தனது பெற்றோரைக் கூட மோசமான வார்த்தைகளால் ஏசுவதும் அவர்களிடம் மோசமாக நடந்து கொள்வதையும் நாம் காண்கிறோம்.

போதையில் இருப்பவர்கள் தம் ஆடைகளிலேயே சிறு நீர் கழிப்பதையும் - சரியாக நடக்கவோ அல்லது பேசவோ முடியாமல் இருப்பதையும் பார்க்கிறோம்.

குடிப்பழக்கம் உள்ளவர்கள் விபச்சாரம் வல்லுறவு கொள்ளுதல் தகாதவர்களிடம் உடல் உறவு கொள்ளுதல் எய்ட்ஸ் போன்ற குற்றங்களைச் செய்யக் கூடியவர்களாக இருக்கிறார்கள்;:

1996 ஆம் ஆண்டு அமெரிக்காவில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 2713 வல்லுறவு குற்றங்கள் நிகழ்ந்ததாக அமெரிக்க நீதித்துறையின் ஒரு பிரிவான தேசிய குற்றவியல் புலனாய்வுத்துறை ஆய்வறிக்கை வெளியிட்டுள்ள புள்ளிவிபரம் தெரிவித்தது.

மேற்படி புள்ளி விபரத்தின்படி வல்லுறவு குற்றங்களில் ஈடுபட்டோரில் பொரும்பாலானோர் போதையில் இருந்திக்கிறார்கள் என்பதையும் தெரிவித்துள்ளது. அது போன்றுதான் சமுதாயத்திற்கு தொல்லை தரும் பலரும் போதை பழக்கத்திற்கு உள்ளானவர்கள் என்பதையும் மேற்படி அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது.

மேற்படி புள்ளிவிபர அறிக்கையின்படி 8 சதவீத அமெரிக்கர்கள் தகாத உறவு கொள்பவர்களாக இருக்கின்றனர். தகாத உறவு கொள்ளும் குற்றத்தில் ஈடுபடும் அனைவரும் - போதை பழக்கத்திற்கு உள்ளானவர்கள். தகாத உறவில் ஈடுபடும் ஒருவரோ அல்வது இரண்டு பேருமோ போதையில் இருந்திருக்கிறார்கள் என்பதை மேற்படி அறிக்கை தெரிவித்திருக்கிறது.

உலகில் எய்ட்ஸ் என்னும் உயிர்க் கொல்லி நோய் பரவுவதற்கு முக்கிய காரணிகளில் ஒன்றாக குடிப்பழக்கம் அமைந்துள்ளது.

குடிப்பழக்கம் உள்ள ஒவ்வொருவரும் ஆரம்பத்தில் "கௌரவத்திற்காக குடிக்க துவங்கியவர்களே!"

குடிப்பழக்கம் உள்ள பலரும் - மது பானங்களுக்கு ஆதரவாக தங்களை "கௌரவ குடிகாரர்கள்" என்று அழைத்துக் கொள்வார்கள். தாங்கள் எப்பொழுதும் ஒன்று அல்லது இரண்டு பெக் மாத்திரம் குடிப்பதாகவும் அதனால் தாங்கள் சுய கட்டுப்பாட்டுடன் இருப்பதாகவும் தாங்கள் ஒருபோதும் குடிபோதையால் பாதிக்கப்பட்டதில்லை என்றும் வாதிடுவார்கள்.

ஒவ்வொரு குடிகாரரும் துவக்கத்தில் "கௌரவ குடிகாரரராகத்தான்" ஆரம்பித்திருக்கிறார் என ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன. எந்த ஒரு குடிகாரரும் - ஆரம்பத்தில் தான் ஒரு மொடாக் குடியனாக வேண்டும் என்ற எண்ணத்தில் குடிக்க ஆரம்பிப்பதில்லை. ஆனால் எந்த ஒரு குடிகாரரும் பல வருடங்களாக குடித்ததில் நான் ஒரு முறை கூட போதையால் பாதிக்கப்பட்டதில்லை - நான் குடித்த எல்லா நாட்களிலும் சுய கட்டுப்பாட்டுடன்தான் இருந்தேன் என நிச்சயமாக சொல்ல முடியாது.

ஓரு குடிகாரர் ஒருநாளாவது குடிபோதையால் பாதிக்கப்பட்டிருந்து - பாதிக்கப்பட்ட அந்த நாளில் அவர் ஒரு மானக்கேடான செயலை செய்திருப்பாரேயானால் - அந்த மானக்கேடான செயல் அவரது வாழ்நாள் முழுவதும் அவரை வாட்டி வதைக்கும்.

உதாரணத்திற்கு ஒரு "கௌரவ குடிகாரர்" தனது சுய கட்டுப்பாட்டை ஒரு நாளாவது இழந்துவிட்டார் என்று வைத்துக் கொள்ளுங்கள். குடிபோதையால் பாதிக்கப்பட்டிருந்த அந்த நாளில் அவர் ஒரு வல்லுறவு குற்றம் செய்துவிட்டாரெனில் அல்லது ஒருவரிடம் முறைகேடான உறவு கொண்டுவிட்டார் எனில் செய்த அந்த குற்றத்திற்காக அவர் வாழ்நாள் முழுவதும் வருந்த வேண்டிய நிலை உருவாகும்.

பாதிப்புக்கு உள்ளானவர் வாழ்நாள் முழுவதும் கஷ்டப்படக் கூடிய நிலையும் - பாதிப்புக்கு உள்ளாக்கியவர் தான் செய்த குற்றத்திற்காக வாழ்நாள் முழுவதும் குற்ற உணர்வுடன் வாழ வேண்டிய நிலையும் ஏற்படலாம்.

மதுபானங்கள் தடை செய்யப்பட்டவை என்பது நபி (ஸல்) அவர்கள் அறிவிக்கும் செய்திகள்:

மதுபானங்கள் தடை செய்யப்பட்டவை என்பது பற்றி நபி (ஸல்) அவர்கள் அறிவிக்கும் செய்திகள் இஸ்லாமிய செய்திப் பேழைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது:


"தீமைகள் அனைத்திற்கும் தாயானது போதையாகும். தீமைகளிலேயே மிகவும் வெட்கக்கேடான தீமை போதையாகும்"
என நபி (ஸல்) அவர்கள் அறிவிக்கும் செய்தி ஸ{னன் இப்னுமாஜா என்னும் இஸ்லாமிய செய்திப்பேழையின் மூன்றாம் பாகத்தில் -போதைப்பொருட்கள் என்னும் தலைப்பின் கீழ் முப்பதாவது அத்தியாயத்தின் 3371 வது செய்தியாக குறிப்பிடப்பட்டுள்ளது.

"அதிக அளவில் பயன்படுத்தினால் போதை தரும் எந்த பொருளும் - குறைந்த அளவில் பயன்படுத்துவதற்கும் தடை செய்யப்பட்டுள்ளது" என நபி (ஸல்) அவர்கள் அறிவிக்கும் செய்தி ஸ{னன் இப்னுமாஜா என்னும் இஸ்லாமிய செய்திப்பேழையின் மூன்றாம் பாகத்தில் -போதைப்பொருட்கள் என்னும் தலைப்பின் கீழ் முப்பதாவது அத்தியாயத்தின் 3392 வது செய்தியாக குறிப்பிடப்பட்டுள்ளது.


எனவே அதிகமோ - குறைவோ இஸ்லாத்தில் போதை பொருட்கள் பயன்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது.

மதுபானங்கள் அருந்துபவர்கள் மாத்திரம் இறைவனால் சபிக்கப்பட்டவர்கள் அல்ல. மதுபானங்கள் அருந்துவதில் நேரிடையாகவோ அல்லது மறைமுகமாகவோ ஈடுபடுவர்கள் அனைவரும் இறைவனால் சபிக்கப்பட்டவர்களே.

1. மதுபானம் தயாரிப்பவன் -
2. யாருக்காக மதுபானம் தயாரிக்கப்பட்டதோ அவன்
3. மதுபானங்களை குடிப்பவன் --
4. மதுபானங்களை விற்பனை கேந்திரங்களுக்கு கொண்டு செல்பவன்
5. யாருக்காக மதுபானங்கள் கொண்டு செல்லப்பட்டதோ அவன்
6. மதுபானங்களை பரிமாறுபவன்
7. மதுபானங்களை விற்பவன்
8. மதுபானங்கள் விற்று வரும் பணத்தை பயன்படுத்துபவன்
9. மதுபானங்களை வாங்குபவன்
10. மதுபானங்கள் யாருக்காக வாங்கப்பட்டதோ அவன்


ஆகிய பத்து சாரார் மீது அல்லாஹ்வின் சாபம் இறங்குகிறது."

என அல்லாஹ்வின் தூதர் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் சொன்னதாக நபித்தோழர் அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கும் செய்தி ஸ{னன் இப்னுமாஜா என்னும் இஸ்லாமிய செய்திப்பேழையின் - மூன்றாம் பாகத்தில் - முப்பதாவது அத்தியாயமான போதைப்பொருட்கள் என்னும் தலைப்பின் கீழ் 3380வது செய்தியாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

போதைப் பொருட்கள் அதாவது மது பானங்கள் உட்கொள்ளக் கூடாது என்பதற்கு அறிவியல் ரீதியாகவும் ஏராளமான காரணங்கள் இருக்கின்றன. ஒரு குறிப்பிட்ட நோயின் காரணமாக உலகில் அதிகமான மரணங்கள் நிகழ்கின்றன எனில் - அந்த நோய் மதுபானம் அருந்துவதால்தான் இருக்கும்.

மதுபானம் அருந்துவதால் உலகில் லட்சக்கணக்கான மக்கள் மரணிக்கிறார்கள். மதுபானம் அருந்துவதால் ஏற்படும் நோய்கள் பற்றி நான் விரிவாக விளக்கத் தேவையில்லை. ஏனெனில் மதுபானம் அருந்துவதால் ஏற்படும் எல்லா நோய்களையும் நாம் அனைவரும் பொதுவாக அறிந்ததுதான். இத்துடன் நான் வரிசைப்படுத்தியிருக்கும் - நோய்கள் - அனைத்தும் போதைப்பொருட்களை பயன்படுத்தவதால் - குறிப்பாக மதுபானங்களை அருந்துவதால் உண்டாகும் நோய்களாகும்.

1. மதுபானங்கள் அருந்துவதால் ஈரலரிப்பு நோய் உண்டாகும் என்பது அனைவரும் அறிந்த ஒன்று.

2. மனித உடலின் இரப்பை - தலை - கழுத்து மற்றும் ஈரல் போன்ற இடங்களில் புற்றுநோய் உண்டாக காரணமாக இருப்பது மதுபானங்களே.

3. இரப்பை அழற்சி போன்ற குடல் சம்பந்தமான நோய்கள் உண்டாக காரணமாக இருப்பது மதுபானங்களே.

4. இரத்த அழுத்தநோய் - மற்றும் மார்பு வலி போன்ற நோய்கள் உண்டாக காரணமாக இருப்பது மதுபானங்களே.

5. வாதம் - கைகால் முடக்கம் - வலிப்பு போனற் நோய்கள் உண்டாக காரணமாக இருப்பது மதுபானங்களே.

6. நரம்பு மண்டலம் பாதிக்கப்படல் - நரம்புத் தளர்ச்சி போன்ற நரம்பு சம்பந்தமான நோய்கள் உண்டாக காரணமாக இருப்பது மதுபானங்களே.

7. நினைவிழத்தல் - மூளைக் கோளாறு போன்ற மூளை சம்பந்தமான நோய்கள் ஏற்படக் காரணமாக இருப்பது மதுபானங்களே.

8. தோல் வெடித்தல் - தோல் அரிப்பு போன்ற தோல் சம்பந்தமான நோய்கள் உண்டாக காரணமாக இருப்பது மதுபானங்களே.

9. கை - கால் பதற்றம் - உடல் நடுக்கம் போன்ற நோய்கள் உண்டாக காரணமாக அமைவது மதுபானங்களே.

10. உடலில் பல பகுதியிலும் உள்ள இரத்த நாளங்கள் மற்றும் சுரப்பிகளை செயலிழக்கச் செய்வது மதுபானங்களே.

11. மஞ்சள் காமாலை போன்ற உயிர் கொல்லி நோய்கள் உருவாக காரணமாக அமைவது மதுபானங்களே.

12. மதுபானங்களால் ஆண்களுக்கு ஏற்படும் நோய் மற்றும் பாதிப்புகளைவிட பெண்களுக்கு ஏற்படும் நோய்களும் பாதிப்பும் அதிகம். கருத்தரித்திருக்கும் பெண் மதுபானங்கள் அருந்துவதால் நன்றாக வளர்ந்த கரு கூட பாதிக்கப்படுகிறது. மது அருந்துவதால் கரு பாதிக்கப்பட்ட பெண்கள் ஏராளமான பேரை மருத்துவ உலகம் அடையாளம் கண்டுள்ளது.

இவ்வாறு மது அருந்துவதால் ஏற்படும் நோய்கள் ஏராளம் . தாராளம்.

மது பழக்கம் ஒரு தீய நோய்.

மது அருந்துபவர்கள் மீது தம் தாராள மனப்போக்கை கைவிட்டுவிட்டார்கள் தற்போதைய மருத்துவர்கள். அது ஒரு கெட்ட பழக்கம் என்று அழைக்கப்பட்டது பழங்கதையாகி இப்போது மதுப்பழக்கத்தை ஒரு தீய நோய் என்று அழைக்கிறார்கள்.

மதுப்பழக்கம் ஒரு தீய நோய்

புட்டிகளில் அடைத்து மக்கிடையே விற்கப்படும் ஒரு தீய நோய்

தினசரி செய்தித் தாள்களில் - வாராந்திர மாதாந்திர பத்திக்கைகளில் வானொலியில் மற்றும் தொலைக்காட்சிகளில் விளம்பரப் படுத்தப்பட்டு மக்களிடையே பரப்பப்படும் ஒரு தீய நோய்

உரிமம் வழங்கப்பட்ட விற்பனை கேந்திரங்களில் விற்கப்படும் ஒரு தீய நோய்

அரசாங்கத்திற்கு வருமானத்தை ஈட்டித் தரக்கூடிய ஒரு தீய நோய்

நெடுஞ்சாலைகளின் கோர மரணங்களுக்கு காரணமான ஒரு தீய நோய்

குடும்ப வாழ்க்கையைச் சீரழித்து சமூகக் குற்றங்கள் அனைத்திற்கும் காரணமான ஒரு தீய நோய்

எந்தவித நோய் எச்சரிக்கையோ - அல்லது நோய்க்கிருமிகள் பற்றிய எச்சரிக்கையோ இல்லாமல் மக்களிடையே பரப்பப்படும் ஒரு தீய நோய் எது என்றால்;
மதுபானம் என்ற தீய நோயே.

என்பது மதுபானங்களின் கொடுமை பற்றி இஸ்லாமிய ஆய்வு மையம் - மும்பையிலிருந்து வெளியிட்டிருக்கும் ஒரு பிரசுரத்தின் வாசகமாகும்.

மதுபானம் அருந்துவது ஒரு நோய் என்று சொல்வதைவிட அதை ஷைத்தானின் ஊசலாட்டம் என்பதே பொருத்தமாயிருக்கும்:

அல்லாஹ் அருளிய அருள்மறை குர்ஆனில் ஷைத்தானைப் பற்றி அல்லாஹ் நமக்கு எச்சரிக்கை செய்கிறான். இஸலாமிய மார்க்கம் மனிதர்களுக்கு ஏற்ற இயற்கையான மார்க்கமாகும். ஐஷத்தானின் வேலைகள் அனைத்தும் - மனிதனை அவன் செல்லும் சீரான பாதையை விட்டும் தடுத்து கேடான பாதையில் அழைத்துச் செல்வதாகும்.

போதைக்கு அடிமையாகும் மனிதர்களும் சமுதாயமும் இயற்கைத் தன்மையை விட்டும் மாற்றமாக நடக்கும் சூழ்நிலையை நாம் காண்கிறோம். போதை - மனிதன் இருக்க வேண்டிய நிலையை விட்டும் - அசாதாரண நிலைக்குத் தள்ளப்படுவதையும் நாம் காண்கிறோம். எனவேதான் போதைப் பொருட்கள் உபயோகிப்பதை இஸ்லாம் தடை செய்துள்ளது.

இஸ்லாத்தை ஏன் பின்பற்றவேண்டும்?

உலகில் உள்ள எல்லா மதங்களும் - நல்லதையே செய்ய வேண்டும் - நல்லதையே பின்பற்ற வேண்டும் என்று சொல்லும் போது - ஒரு மனிதன் இஸ்லாமிய மதத்தை மாத்திரம் ஏன் பின்பற்ற வேண்டும்.? மற்ற மதங்களில் எதையேனும் ஒன்றை பின்பற்ற முடியுமே!.

பதில்:


1. இஸ்லாமிய மார்க்கத்திற்கும் - பிற மதங்களுக்கும் உள்ள மிகப் பெரிய வித்தியாசம்:


எல்லா மதங்களும் நல்லதையேச் செய்ய வேண்டும் - நல்லதையேப் பின் பற்ற வேண்டும் என்று சொல்கின்றன। ஆனால் இஸ்லாமிய மார்க்கம் நல்லதையேச் செய்ய வேண்டும் - நல்லதையேப் பின்பற்ற வேண்டும் என்று சொல்வதோடு நின்று விடாமல் - தனிமனிதனிடமும் - முழு மனித சமுதாயத்திடமும் நன்மையை ஏவி தீமையைத் தடுக்கக் கூடிய செயல்களை நடைமுறைப்படுத்துகிறது.

இஸ்லாம். நன்மையை ஏவி - தீமையைத் தடுக்கக் கூடிய செயலை செய்யும் போது மனித சமுதாயத்தில் இருக்கும் மனிதத் தன்மையையும், சமுதாயத்தில் மனிதர்களுக்கிடையே இருக்கும் நடைமுறைச் சிக்கலையும் கணக்கில் கொள்கிறது. மனிதர்களை படைத்த இறைவனால் வழிகாட்டப்பட்ட மார்க்கம் இஸ்லாம். எனவேதான் இஸ்லாம் - தீனுல் ஃபித்ர் - அதாவது இயற்கையான மார்க்கம் என்றும் அழைக்கப்படுகிறது.


2. உதாரணம்: மனிதர்கள் திருட்டை விட்டொழிக்க வேண்டும் என்று சொல்வதோடு, சமுதாயத்திலிருந்து திருட்டை எப்படி ஒழிக்க முடியும் என்பத தீர்வையும் வைத்திருக்கிறது.

அ. இஸ்லாம் திருட்டை ஒழிக்கும் வழிவகைகளை நமக்கு கற்றுத் தருகிறது.

எல்லா முக்கிய மதங்களும் திருடுவது ஒரு பாவமான செயல் என்று போதிக்கின்றன. இஸ்லாமும் அதனைத்தான் போதிக்கின்றது. அப்படியெனில் மற்ற மதங்களுக்கும் இஸ்லாத்திற்கும் உள்ள வேறுபாடுதான் என்ன?. திருடுவது ஒரு பாவமான செயல் என்று போதிப்பதோடு நின்று விடாமல் - நடைமுறையில் திருடர்களே இல்லாத ஒரு சமுதாயத்தை உருவாக்குவது எப்படி என்றும் வழிகாட்டுகின்றது இஸ்லாம்.

ஆ. இஸ்லாம் 'ஜக்காத்" என்னும் தர்மம் வழங்க வலியுறுத்துகிறது.

இஸ்லாம் 'ஜக்காத்" என்னும் மார்க்க வரி வழங்குவதை ஒவ்வொரு இஸ்லாமியர் மீதும் கடமையாக்கியுள்ளது. இஸ்லாமியர்களில் யாரெல்லாம் 85 கிராம் தங்கம் அல்லது அதற்குரிய விலை அளவில் சேமித்து வைத்திருக்கிறார்களோ, அவர்கள் ஒவ்வொரு வருடமும் இரண்டரை சதவீதம் அளவிற்கு 'ஜக்காத்" என்னும் மார்க்க வரி வழங்குவதை இஸ்லாம் கடமையாக்கியுள்ளது. உலகில் உள்ள ஒவ்வொரு பணக்காரரும் தமக்குள்ள சொத்துக்களில் இரண்டரை சதவீதம் தர்மமாக கொடுத்தால், உலகத்தில் ஏழ்மை என்ற நிலையே இல்லாமல் போகும். இவ்வுலகில் ஓரு மனித உயிர் கூட பசியால் மரணிக்கக் கூடிய நிலை இருக்காது.

இ. திருடுபவனுக்கு தண்டனையாக அவனது கைகளை வெட்ட வேண்டும் என்று இஸ்லாம் சட்டம் வகுத்துள்ளது.

திருடினாhன் என்று நிருபிக்கப்பட்டவனின் கைகளை வெட்ட வேண்டும் என்று இஸ்லாம் சட்டம் வகுத்துள்ளது. அருள்மறை குர்ஆனின் அத்தியாயம் ஐந்து ஸ{ரத்துல் மாயிதாவின் 38வது வசனம் கீழக்கண்டவாறு கூறுகின்றது:

'திருடனோ, திருடியோ அவர்கள் சம்பாதித்த பாவத்திற்கு, அல்லாஹ்விடமிருந்துள்ள தண்டனையாக அவர்களின் கரங்களைத் தரித்து விடுங்கள். அல்லாஹ் மிகைத்தவனும், ஞானம் மிக்கோனுமாக இருக்கின்றான்."
(அல்-குர்ஆன் 5 : 38)


'ஆ!. இருபதாம் நூற்றாண்டில் திருடியவனுக்கு கையை வெட்டுவதா?. இஸ்லாம் கருணையில்லாத, காட்டுமிராண்டித் தனமான மார்க்கம்" என்று இஸ்லாம் அல்லாத மாற்று மதத்தவர்கள் சொல்லலாம்

ஈ. இஸ்லாமிய சட்டம் நடை முறைப்படுத்தப் பட்டிருந்தால் - சரியான பலன் கிடைத்திருக்கும்:

உலகில் உள்ள நாடுகளில் அமெரிக்காதான் மிக முன்னேறியுள்ள நாடாக இருக்க வேண்டும். ஆனால் துர்அதிர்ஷ்டவசமாக அமெரிக்காதான் குற்றங்களும், திருட்டுக்களும், கொள்ளைகளும் நிறைந்துள்ள நாடாகவும் இருக்கின்றது.

அமெரிக்காவில் இஸ்லாமிய சட்டங்கள் நடைமுறைப்படுத்தப் பட்டிருந்தால், அதாவது எல்லா செல்வந்தர்களும் ஜக்காத் என்னும் தர்மம் வழங்க வேண்டும் (ஒவ்வொரு வருடமும் தமக்குள்ள சொத்துக்களில் 2.5 சதவீதம் தர்மமாக கொடுத்தல்) என்ற சட்டமும், திருடப்பட்டதாக நிரூபிக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு தண்டனையாக அவர்களது கைகள் வெட்டப்பட வேண்டும் என்கிற சட்டமும் அமெரிக்காவில் நடைமுறைப் படுத்தப்படுகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள்.

அமெரிக்காவின் திருட்டுக் குற்றம் குறையுமா?. அல்லது திருட்டுக் குற்றங்கள் அதே போன்றுதான் இருக்குமா?. அல்லது திருட்டுக் குற்றங்கள் அதிகரிக்குமா?. கண்டிப்பாக அமெரிக்காவின் திருட்டுக் குற்றங்கள் குறையத்தான் செய்யும். இஸ்லாம் வகுத்துள்ள கடுமையான சட்டங்கள் இருப்பதன் காரணத்தால் மேலும் திருட வேண்டும் என்று எண்ணமுள்ளவர்களும் திருடுவதற்கு தயங்கும் நிலைதான் உருவாகும்.

இன்றைக்கு உலகில் இருக்கும் திருட்டுக் குற்றங்களுக்கு தண்டனை என்ற பெயரில் கைகளை வெட்டுவோம் எனில் இன்று உலகில் லட்சக் கணக்கானோரின் கைகள் வெட்டப்பட வேண்டும் என்கிற உங்களது வாதத்தை நான் ஏற்றுக் கொள்கிறேன். - ஆனால் நான் இங்கே வலியுறுத்த விரும்பும் கருத்து என்னவெனில் திருடுவோருக்கு தண்டனையாக கைகள் வெட்டப்படும் என்கிற சட்டம் அமல்படுத்தப்பட்ட உடனேயே திருட்டுக் குற்றங்கள் குறைய ஆரம்பித்துவிடும் என்பதைத்தான்.

திருட்டுத்தொழிலை வழக்கமாகக் கொண்டிருக்கும் திருடர்கள் கூட, திருடுவதற்கு முன்பு மிகவும் சிந்திக்க ஆரம்பித்து விடுவார்கள். திருடுவது பற்றி சிந்திக்க ஆரம்பித்துவிட்டாலே - திருட்டு தொழில் செய்பவர்கள் பலர் திருடுவதை விட்டு விடுவார்கள்.

அதனையும் மீறி ஒரு சிலர் மாத்திரம் திருட்டுத் தொழிலை தொடர்வதற்கான வாய்ப்புகள் உள்ளது. அவர்கள் பிடிபட்டால் அவர்களின் கைகள் மாத்திரம் வெட்டப்படும். இவ்வாறு ஒரு சிலரின் கைகள் வேண்டுமெனில் வெட்டப்படலாம். ஆனால் லட்சக்கணக்கானோர் திருட்டு பயமின்றி நிம்மதியாக வாழமுடியும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

இவ்வாறு இஸ்லாமிய சட்டங்கள் நடைமுறைக்கு ஒத்துவரக் கூடியவையும், மனித சமுதாயத்திற்கு பலன்களை தரக் கூடியவையும்தான்.

3. மூன்றாவது உதாரணம்: இஸ்லாம் பெண்கள் மானபங்கபடுத்தப்படுவதையும், வல்லுறவு கொள்ளப்படுவதையும் கடுமையான குற்றங்கள் என தடை செய்துள்ளது. அத்துடன் இஸ்லாமிய ஆடை முறைகளை பின்பற்ற சொல்வதோடு, வல்லறவு குற்றம் செய்ததாக நிரூபிக்கப்படுபவருக்கு கடுமையான தண்டனைகளையும் வலியுறுத்துகிறது.

அ. வல்லுறவு கொள்வதையும், மானபங்கப் படுத்தப்படுவதையும் தடுக்கும் முறைகளை இஸ்லாம் வலியுறுத்துகிறது.

பெண்களோடு வல்லுறவு கொள்வதையும், பெண்கள் மானபங்கப்படுத்தப் படுவதையும் எல்லா மதங்களும் கொடுமையான பாவம் என்றுதான் சொல்லுகின்றன. இஸ்லாமிய மார்க்கமும் அதைத்தான் போதிக்கிறது. இருப்பினும் இஸ்லாமிய மார்க்கத்திற்கும் மற்றுமுள்ள மதங்களுக்கும் உள்ள வித்தியாசம்தான் என்ன?.

பெண்களை மதிக்க வேண்டும் அறிவுரை கூறுவதோடு நின்று விடாமல் அல்லது பெண்களை மானபங்கப்படுத்துவதை வெறுத்துத் தள்ளுவதோடு நின்று விடாமல், வல்லுறவு கொள்வது மகாப்பெரிய பாவம் என்று சொல்வதொடு நின்று விடாமல், மேற்படி குற்றங்கள் சமுதாயத்தில் இல்லாமல் செய்வது எப்படி என்று வழிகாட்டவும் செய்கிறது.

ஆ. இஸ்லாம் வலியுறுத்தும் ஆண்களுக்கான ஆடைமுறையும் - நடை முறையும்.

இஸ்லாம் மனிதர்கள் முறையாக அணிய வேண்டிய ஆடைகளை (ஹிஜாப்) வலியுறுத்துகின்றது. அருள்மறை குர்ஆனில் அல்லாஹ்; பெண்களுக்கான 'ஹிஜாப்" பற்றி அறிவிப்பதற்கு முன்பாக, ஆண்களுக்கான 'ஹிஜாப்" பற்றித்தான் முதலில் அறிவிக்கிறான்.

அருள்மறை குர்ஆனின் 24வது அத்தியாயம் ஸ{ரத்துன் நூரின் முப்பதாவது வசனத்தில் '(நபியே!) விசுவாசம்கொண்ட ஆண்களுக்கு நீர் கூறுவீராக: அவர்கள் தங்கள் பார்வைகளை தாழ்த்திக் கொள்ள வேண்டும்: தங்கள் வெட்கத் தலங்களை பேணிப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்: அது அவர்களுக்கு மிக்க பரிசுத்தமானதாகும். நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவற்றை நன்கு தெரிந்தவன்." என்று அல்லாஹ் குறிப்பிடுகின்றான். (அல்-குர்ஆன் 24 : 30)

ஒரு மனிதன் ஒரு பெண்ணை பார்த்தவுடன் அவனது மனதில் - வெட்கமற்ற அல்லது நாணமற்ற எண்ணம் தோன்றுமேயானால் - அந்த மனிதன் தனது பார்வையை தாழ்த்திக் கொள்ள வேண்டும் என்று அருள்மறை குர்ஆன் கட்டளையிடுகின்றது.

இ. பெண்களுக்குரிய 'ஹிஜாப்"

அருள்மறை குர்ஆனின் 24வது அத்தியாயம் ஸ{ரத்துன் நூரின் முப்பத்து ஒன்றாவது வசனத்தில்
'(நபியே!) இன்னும் விசுவாசம்கொண்ட பெண்களுக்கு நீர் கூறுவீராக: அவர்கள் தங்கள் பார்வைகளை தாழ்த்திக் கொள்ள வேண்டும்: தங்கள் வெட்கத் தலங்களை பேணிப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்: தங்கள் அழகலங்காரத்தை அதனின்று (சாதாரணமாக வெளியில்) தெரியக் கூடியதைத்தவிர, (வேறு எதையும்) வெளிக் காட்டலாகாது:

இன்னும் தங்கள் முன்றானைகளால் அவர்கள் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும்.: மேலும் (விசுவாசம்கொண்ட பெண்கள்) தம் கணவர்கள், தம் தந்தையர்கள், அல்லது தம் கணவர்களின் தந்தையர்கள் அல்லது தம் புதல்வர்கள்.....ஆகிய இவர்களைத் தவிர(வேறு அண்களுக்குத் ) தங்களுடைய அழகலங்காரத்தை வெளிப்படுத்தக் கூடாது." என்று அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.


ஹிஜாப் அணிவதற்கான வரைமுறைகளை இஸ்லாம் வலியுறுத்துகிறது.

நீங்கள் அணியக் கூடிய ஆடை உடல் முழுவதையும் மறைக்கக் கூடியதாக இருக்க வேண்டும் என்பதே இஸ்லாமிய ஆடை அணிவதற்கான அளவுகோல். இந்த அளவுகோல் ஆண்களுக்கும் - பெண்களுக்கும் வித்தியாசப்படும்.

ஆண்கள் தொப்புள் முதல் கரண்டைவரை மறைக்கக் கூடிய ஆடைகளை அணிய வேண்டும். பெண்கள் சாதாரணமாக வெளியில் தெரியக்கூடிய பாகங்களான முகம் - கரண்டை வரை உள்ள கைகள் ஆகியவைத் தவிர தங்கள் உடல் முழுவதும் மறைக்கக் கூடிய ஆடைகளை அணிய வேண்டும். அவர்கள் விரும்பினால் மேற்படி வெளியில் தெரியக் கூடிய இந்த பாகங்களையும் மறைத்துக் கொள்ளலாம்.

ஈ. ஹிஜாப் பெண்களை தொல்லைகளிலிருந்தும் பாதுகாக்கிறது:

பெண்கள் ஹிஜாப் அணிய வேண்டியதற்கான காரணத்தை அருள் மறையின் 33 வது அத்தியாயம் ஸ{ரத்துல் அஹ்ஜாப் பின் 59வது வசனம் தெளிவாக சுட்டிக் காட்டுகின்றது.

நபியே! நீர் உம் மனைவிகளுக்கும், உம் பெண் மக்களுக்கும், ஈமான் கொண்டவர்களின் பெண்களுக்கும், அவர்கள் தங்கள் தலை முன்றானைகளை தாழ்த்திக் கொள்ளுமாறு கூறுவீராக: அவர்கள் (கண்ணியமானவர்கள் என) அறியப்பட்டு நோவினை செய்யப்படாமலிருக்க இது சுலபமான வழியாகும். மேலும் அல்லாஹ் மிக மன்னிப்பவன்: மிக்க அன்புடையவன்.

பெண்கள் கண்ணியமானவர்கள் என்று அறியப்படுவதற்காகவும் - அவர்கள் தொல்லைகளிலிருந்து தவிர்ந்து கொள்ள வேண்டியும் - ஹிஜாப் அணிவது பெண்களுக்கு பரிந்துரைக்கப்பட்ருக்கிறது என அருள்மறை குர்ஆன் சுட்டிக் காட்டுகிறது.

உ. இரட்டை சகோதரிகள் - ஓர் உதாரணம்:

இரட்டைப் பிறவியான சகோதரிகள் - இரண்டு பேரும் அழகிலும் சமமானவர்கள் கடைத்தெருவில் நடந்து போகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அதில் ஒருவர் முற்றிலும் இஸ்லாமிய முறையில் ஆடை அணிந்தவராக செல்கிறார்.

அதாவது தனது முகம் - மற்றும் தனது இரண்டு கைகள் மாத்திரம் கரண்டை வரையில் வெளியில் தெரியும்படி தனது முழு உடலையும் மறைத்து ஆடை அணிந்தவராக நடந்து செல்கிறார். மற்றவர் மேற்கத்திய கலாச்சார முறைப்படி ஒரு குட்டைப்பாவாடையோ அல்லது அரைக்காற் சட்டையோ அணிந்து செல்கிறார் என வைத்துக் கொள்ளுங்கள்.

கடைத் தெருவில் பெண்களை கேலி செய்வதற்காகவே நிற்கும் காலிகள் யாரை கேலியும் - கிண்டலும் செய்வார்கள்?. இஸ்லாமிய முறையில் ஆடை அணிந்து செல்பவரையா?. அல்லது குட்டைப்பாவாடை அல்லது அரைக்காற் சட்டை அணிந்து செல்பவரையா?. கண்டிப்பாக குட்டைப்பாவாடை அல்லது அரைக்காற் சட்டை அணிந்து செல்பவர்தான் கேலியும் கிண்டலுக்கும் உள்ளாவார்.

உடல் உறுப்புகளை மறைப்பதைவிட அதிகம் வெளியில் தெரியும்படியான ஆடைகளை பெண்கள் அணிவது - ஆண்பாலரை கேலியும் கிண்டலும் - தொல்லைகளும் செய்யவைப்பதற்கான மறைமுகமான அழைப்பேயாகும். எனவேதான் இஸ்லாமிய ஆடை முறை கண்டிப்பாக பெண்கள் தொல்லைகள் செய்யப்படுவதை தவிர்க்கிறது என்று அருள் மறை குர்ஆன் குறிப்பிடுகிறது.

ஊ. வல்லுறவு கொள்வோருக்கு (பாலியல் பலாத்காரம்) மரண தண்டனை.

இஸ்லாமிய சட்டத்தின்படி ஒரு மனிதன் ஒரு பெண்ணோடு வல்லுறவு கொண்டதாக நிரூபிக்கப்பட்டால் - அவனுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும். மரண தண்டனை என்ற வார்த்தையை கேட்டவுடன் பலர் அதிர்ச்சியுறுகின்றனர்.

ஒருசிலர் இஸ்லாம் கருணையில்லாத - காட்டுமிராண்டித்தனமான மார்க்கம் என்றெல்லாம் விமரிசிக்க ஆரம்பித்து விடுகின்றனர். இஸ்லாம் அல்லாத சகோதரர்களை நான் ஒரு கேள்வியை கேட்டிருக்கிறேன். தங்களுடைய மனைவியுடனோ - அல்லது தங்களது சகோதரியுடனோ அல்லது தங்களது தாயுடனோ ஒருவன் வல்லுறவு (அவ்வாறு நடக்காமல் அல்லாஹ் பாதுகாப்பானாக!) கொண்டு விட்டான் என்று வைத்துக் கொள்ளுங்கள்.

வழக்காடு மன்றத்தில் வல்லுறவு கொண்டவனுக்கு - தீர்ப்பு வழங்கக் கூடிய நீதிபதியாக தாங்கள் இருக்கிறீர்கள் என்றும் வைத்துக் கொள்ளுங்கள். தாங்கள் வல்லுறவு கொண்டவனுக்கு என்ன தண்டணை வழங்குவீர்கள்?. நான் கேள்வி கேட்ட கேள்விக்கு இஸ்லாம் அல்லாத சகோதரர்கள் எல்லோருமே அளித்த பதில் என்னவென்றால் வல்லுறவு கொண்டவனுக்கு மரண தண்டனையேத் தருவோம் என்பதுதான்.

அதில் இன்னும் சிலர் - வல்லுறவு கொண்டவன் மரணிக்கும்வரை சித்ரவதை செய்து அவனைக் கொல்வோம் என்றும் சொன்னார்கள்.அவர்களிடம் நான் கேட்டதெல்லாம் - யாராவது ஒருவன் உங்களது உறவுகளோடு - வல்லுறவு கொண்டு விட்டால் - மரண தண்டனை கொடுக்க விரும்பும் நீங்கள் - வேறு யாரோ ஒருவரின் மனைவியோ -சகோதரியோ - அல்லது தாயோ வல்லுறவு கொள்ளப்பட்டு - வல்லுறவு கொண்டவனுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டால் மாத்திரம் ஏன் அதனை காட்டுமிராண்டித்தனம் எனகிறீர்கள். ஏன் இந்த இரட்டை நிலைப்பாடு?.

எ. அமெரிக்காவில்தான் உலகத்திலேயே அதிக அளவிலான வல்லுறவு குற்றங்கள் நிகழ்கின்றன.

உலகில் உள்ள நாடுகளில் அமெரிக்காதான் முற்றிலும் நாகரீகமடைந்த நாடாக கருதப்படுகிறது. அதே அமெரிக்காவில்தான் உலகத்திலேயே அதிக அளவிலான வல்லுறவு குற்றங்கள் நிகழ்கின்றன.

1990 ஆம் ஆண்டில் மாத்திரம் அமெரிக்காவில் 1,02,555 வல்லுறவு குற்றங்கள் நிகழ்ந்ததாக அந்த நாட்டின் உளவுத்துறையான எஃப். பி. ஐ. யின் அறிக்கை தெரிவிக்கிறது. நடந்த வல்லுறவு குற்றங்களில்; 16 சதவீதம் குற்றங்கள் மாத்திரமே புகார் செய்யப்பட்டதாகவும் மேற்படி அறிக்கை தெரிவிக்கிறது.

அப்படியெனில் அமெரிக்காவில் 1990 ஆம் ஆண்டில் மொத்தம் நடந்த வல்லுறவு குற்றங்கள் எத்தனை என்று அறிய மேற்படி தொகையை (102,555) 6.25 கொண்டு பெருக்கினால் மொத்த வல்லுறவு குற்றத்தின் எண்ணிக்கை 640,968 ஆகும். மேற்படி கிடைக்கும் தொகையை 365 நாட்களை கொண்டு வகுக்கும் போது 1990 ஆம் ஆண்டு மாத்திரம் அமெரிக்காவில் நாள் ஒன்றுக்கு சராசரியாக நடந்த வல்லுறவு குற்றங்களின் எண்ணிக்கை 1,756 ஆகும்.

அதன் பிறகு சராசரியாக நாள் ஒன்றுக்கு 1900 வல்லுறவு குற்றங்கள் நிகழ்ந்தாக மற்றொரு அறிக்கை சொல்கிறது.

அமெரிக்காவில் 1996 ஆம் ஆண்டு மாத்திரம் 307,000 வல்லுறவு குற்றங்கள் புகார் செய்யப்பட்டதாக அமெரிக்க நீதித்துறையின் மற்றொரு பிரிவான குற்றம் இழைக்கப்பட்டோர் பற்றி தேசிய அளவில் ஆய்வு செய்யும் அமைப்பின் அறிக்கை கூறுகிறது.

மொத்தம் நடந்த வல்லுறவு குற்றங்களில், 31 சதவீதம் மாத்திரமே புகார் செய்யப்பட்டுள்ளது என்றும் மேற்படி அறிக்கை கூறுகிறது. அவ்வாறெனில் 1996 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் நடந்த மொத்த வல்லுறவு குற்றங்கள் (307,000 ஒ 3.226) 990,322. ஆகும். சராசரியாக நாள் ஒன்றுக்கு 2,713 வல்லுறவு குற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. அதாவது ஒவ்வொரு 32 வினாடிக்கு ஒரு வல்லுறவு குற்றம் நிகழ்ந்திருக்கிறது.

மற்றுமுள்ள வருடங்களில் அமெரிக்கர்கள் இன்னும் கூடுதலாக வல்லுறவு குற்றங்களில் ஈடுபட்டிருக்கலாம். இவ்வாறு வல்லுறவு குற்றங்களில் ஈடுபட்டவர்களில் 10 சதவீதம் பேர்கள்தான் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டதாக 1990ஆம் ஆண்டு எஃப். பி. ஐ. வெளியிட்டுள்ள அறிக்கை கூறுகிறது. இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை மொத்தத்தில் 1.6 சதவீதம்தான்.

மேற்படி கைது செய்யப்பட்டவர்களில் ஐம்பது சதவீதம்பேர் அவர்கள் செய்த வல்லுறவு குற்றம் நீதி மன்றத்தின் முன்பு நிருபிக்கப்படாததால் விடுதலை செய்யப்பட்டனர். அதற்கு அர்த்தம் 0.8 சதவீதம் குற்றவாளிகள்தான் நீதி விசாரனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால் 125 பேர் வல்லறவு குற்றங்கள் நிகழ்ந்தால் தண்டனை வழங்கப்படுவது ஒரேயொரு குற்றத்திற்கு மாத்திரம்தான். இவ்வாறான சட்டங்கள் இருந்தால் மனிதர்களில் பலர் வல்லுறவு குற்றம் புரிவதை ஒரு தொழிலாகவே வைத்திருப்பார்கள்.

இவ்வாறு நீதி விசாரணைக்கு உட்படுத்தப்பட்டவர்களில் 50 சதவீதம் பேர் குற்றவாளிகள் என நிருபிக்கப்பட்டபின் 1 வருடத்திற்கும் குறைவான சிறை தண்டனையைத்தான் பெறுகின்றனர் என மேற்படி அறிக்கை மேலும் கூறுகிறது. இவ்வளவுக்கும் ஒரு வல்லுறவு குற்றம் புரிந்த குற்றவாளிக்கு அமெரிக்க குற்றவியல் தண்டனை சட்டத்தின்படி 7 வருடங்கள் சிறை தண்டனை வழங்க வேண்டும்.

முதன் முறையாக வல்லறவு குற்றம் புரிந்த ஒருவனுக்கு கடுமையான தண்டனைகள் இன்றி நீதிபதி விடுதலை செய்யலாம் என்பது அமெரிக்க குற்றவியல் தண்டனை சட்டத்தின் விதி. கற்பனை செய்து பாருங்கள்!.

ஒரு மனிதன் 125 முறை வல்லுறவு குற்றம் செய்தாலும், அவன் தண்டனை பெறுவதற்குரிய சாத்தியக்கூறு ஒரேயொரு முறைதான். அந்த ஒரு முறையிலும் நீதிபதியின் கருணையினால் விடுதலை செய்யப்படலாம். அல்லது ஒரு வருடத்திற்கும் குறைந்த சிறை தண்டனையைப் பெறலாம்.

ஏ. இஸ்லாமிய சட்டங்கள் நடைமுறைபடுத்தப்பட்டால் சரியான பலன்களைப் பெறலாம்:


அமெரிக்காவில் இஸ்லாமிய சட்டங்கள் நடைமுறைபடுத்தப்பட்டிருப்பதாக கற்பனை செய்து பாருங்கள்.

ஒரு ஆண் ஒரு பெண்ணை பார்க்கும் பொழுது அவனது எண்ணத்தில் நாணமற்ற அல்லது வெட்கமில்லாத எண்ணம் தோன்றுமாயின் - அவர் தனது பார்வையை தாழ்த்திக் கொண்டிருப்பார். அமெரிக்காவின் ஒவ்வொரு பெண்ணும் முகம் மற்றும் தனது கைகளின் கரண்டை வரை மட்டும் தெரியும்படி - மற்றுமுள்ள உடலின் அனைத்து பாகங்களும் மறைக்கப்பட்டிருக்கும் இஸ்லாமிய ஆடை முறையை பின்பற்றி இருப்பார்கள்.

இதற்கு பிறகும் ஒரு மனிதன் வல்லுறவு குற்றத்தில் ஈடுபடுவான் எனில் - அவனுக்கு மரண தண்டனை என்ற நிலை பின்பற்ற பட்டிருக்கும். மேற்கண்டவாறு இஸ்லாமிய சட்டங்கள் அமெரிக்காவில் நடைமுறை படுத்தப்பட்டால் - அமெரிக்காவில் வல்லுறவு குற்றங்கள் அதிகரிக்குமா?. அல்லது முன்னர் இருந்தது போன்ற அதே நிலையில் இருக்குமா?. அல்லது குறையுமா?. கண்டிப்பாக அமெரிக்காவின் வல்லுறவு குற்றங்கள் குறையத்தான் செய்யும்.

4. மனித சமுதாயத்தின் பிரச்னைகளுக்கு, இஸ்லாமிய மார்க்கம் நடைமுறைக்கு ஒத்துவரக்கூடிய தீர்;வுகளை கொண்டுள்ளது.

இஸ்லாம் உலக வாழ்க்கைக்கு சிறந்த வழிகாட்டியாகும் . ஏனெனில் அதன் கொள்கைகள் நடைமுறைக்கு ஒத்து வராத வாய் வார்த்தைகளை கொண்டதல்ல.

மாறாக இஸ்லாமிய கொள்கைகள் மனித சமுதாயத்தின் பிரச்னைகளுக்கு தீர்வாக அமைந்துள்ளது. தனி மனித அளவிலும், முழு மனித சமுதாய அளவிலும் இஸ்லாமிய மார்க்கம் சிறந்த தீர்வுகளை கொண்டுள்ளது.

இஸ்லாமிய மார்க்கமே உலகில் உள்ள மார்க்கங்களில் எல்லாம் சிறந்த மார்க்கமாக திகழ்வதற்கு காரணம் நடைமுறைக்கு சாத்தியக் கூறான அதன் கொள்கைள்தான். இஸ்லாமிய மார்க்கம் ஒரு குறிப்பிட்ட வர்க்கத்தினருக்கோ அல்லது ஒரு குறிப்பிட்ட தேசத்தினருக்கோ சொந்தமானதல்ல. மாறாக இஸ்லாமிய மார்க்கம் அகிலம் முழுவதற்கும் சொந்தமானது.