டாக்டர் ஜாகிர் நாயக் பற்றிய குறிப்பு

டாக்டர் ஜாகிர் நாயக் ஒரு இஸ்லாமிய அழைப்பாளர். இந்தியாவின் மஹாராஷ்டிரா மாநிலம் மும்பை நகரைத் தலைமையகமாகக் கொண்டு உலகில் உள்ள மாற்று மதத்தவர்களுக்கு ஆங்கில மொழியில் இஸ்லாத்தை எடுத்துச் சொல்வதில் பிரபலமானவர்.
கடந்த இரண்டு யுகங்களாக டாக்டர் ஜாகிர் நாயக் இஸ்லாத்தை எடுத்துச் சொல்லவென்று உலகில் அவர் செல்லாத நாடுகளே இல்லை என்று சொல்லலாம். இஸ்லாத்தைப் பற்றி அவரிடம் கேட்கும் கேள்விகளுக்கு இறைவனின் நாட்டத்தில் அவரது பேச்சுத் திறமையாலும் -இஸ்லாமிய மார்க்க ரீதியாகவும் - அறிவியல் ரீதியாகவும் - தர்க்க ரீதியாகவும் அவர் அளிக்கும் பதில்கள் - இன்று உலகம் முழுவதும் இஸ்லாத்தைப் பற்றி அறிந்து கொள்ளச் செய்திருக்கிறது.
உலக அளவில் எவரெல்லாம் இஸ்லாத்தைப் பற்றி தவறான கருத்துக்களை கொண்டிருந்தார்களோ - அவர்களுடன் அழகிய முறையில் விவாதங்கள் நடத்தி அந்த விவாதங்களின் மூலம் அவர்கள் கொண்டிருந்த தவறான கருத்துக்களை களைந்ததுடன் - இறை நாட்டத்தில் அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த இரண்டு யுகங்களாக டாக்டர் ஜாகிர் நாயக் மாற்று மதத்தவர்களின் கேள்விகளையும் அதற்கு அளிக்கப்பட்ட பதில்களையும் 'இஸ்லாத்தைப் பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்" (Frequently Asked Questions) என்ற தலைப்பில் IRF (Islamic Research Foundation) வலைமனையில் ஆங்கில மொழியில் தொகுத்தளித்துள்ளார்கள்.
தன்னிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு இஸ்லாமிய மார்க்க ரீதியாகவும் - அறிவியல் ரீதியாகவும் - தர்க்க ரீதியாகவும் அவர் அளித்துள்ள பதில்கள் அனைத்து தரப்பினரையும் இஸ்லாத்தைப் பற்றி தெளிவடையச் செய்யும் என்பதில் ஆச்சரியமில்லை. இறை நாட்டத்தில் மேற்படி கேள்விககளையும் - பதில்களையும் தமிழ் அறிந்த அனைவரும் - படித்து - இஸ்லாத்தைப் பற்றி தெளிவு பெற வேண்டும் என்ற நோக்கத்தில் மேற்படி கேள்வி -பதில்களின் ஆங்கில தொகுப்பினை தமிழாக்கம் செய்துள்ளேன். படித்து - சிந்தித்து - பயன்பெற வேண்டுகிறேன்.
1 Comments:
I appriciate and Thank you.
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home